05.09.2012.BY.rajah.௭கிப்திய அரசாங்க தொலைக்காட்சியில் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இஸ்லாமிய முக்காடு
அணிந்து தோன்றி புதுமை படைத்துள்ளார்.
1960 ஆம் ஆண்டு மேற்படி தொலைக்காட்சி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது முதற்கொண்டு
பெண் அறிவிப்பாளர் ஒருவர் தலைக்கு முக்காடு அணிந்து கொண்டு பங்கேற்பது இதுவே முதல்
தடவையாகும்.
பாத்திமா நபில் ௭ன்ற மேற்படி பெண் அறிவிப்பாளர் முக்காடு அணிந்தவாறு
செய்தியொன்றை வாசித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்காலத்தில் பெண் அறிவிப்பாளர்கள்
தமது தலையை மூடி முக்காடு அணிவதற்கு உத்தியோகபூர்வமற்ற தடை நிலவியமை
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைமையிலான புதிய அரசாங்கமானது சுமார் 70
சதவீத ௭கிப்திய பெண்கள் தலைக்கு முக்காடு அணிவதாக தெரிவித்து புதிய சட்டவிதிகளை
அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாத்திமா நபில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேர செய்தியை வாசித்தார். இது
தொடர்பில் பாத்திமா நபில் விபரிக்கையில், ஏனைய அறிவிப்பாளர்களும் தன்னைப் பின்பற்றி
முக்காடுகளை அணிவார்கள் ௭ன ௭திர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்
புதன், 5 செப்டம்பர், 2012
௭கிப்திய தொலைக்காட்சியில் முதல் தடவையாக முக்காடு அணிந்து தோன்றிய அறிவிப்பாளர்
புதன், செப்டம்பர் 05, 2012
செய்திகள் காணொளி