siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 செப்டம்பர், 2012

இலங்கையில் இன்னும் போர் சூழ்நிலையில் மாற்றம் இல்லை: சிங்கள ஊடகவியலாளர்

 
 
 
05.09.2012.BYrajah.
அவுஸ்திரேலியாக்கு செல்லும் இலங்கை அகதிகள் அனைவரையும் திருப்பியனுப்ப வேண்டும் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சி கோரியுள்ள நிலையில், அதற்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏபிசி வானொலி இந்தப் பிரசாரத்துக்காக இலங்கையில் இருந்து வெளியேறி கடந்த 5 வருடங்களாக ஐரோப்பாவில் தங்கியுள்ள சிங்கள ஊடகவியலாளரான பாஸன அபேவர்தனவை செவ்வி கண்டுள்ளது.
இலங்கையின் போர் முடிவுற்ற போதும் அங்கு இன்னும் போர் நடைபெற்ற சூழ்நிலைகள் மாறவில்லை என்று அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களை இன்னும் பயபீதியில் வைத்திருப்பதையே இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அங்கு மூடப்பட்ட ஒரு பயங்கரமான நிர்வாகம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
அண்மையில் வெளியான ஒரு செய்தியின்படி, இலங்கையில் ஐந்து நாட்களுக்கு ஒருவர் காணாமல் போகும் தகவல் வெளியாகியுள்ளது. இது இலங்கையில் தொடர்ந்தும் போர் சூழ்நிலை இருப்பதையே காட்டுகிறது.
இலங்கை அரசாங்கம், இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஜனநாயகம் உருவாக்கப்பட்டு விட்டது என்று கூறினாலும், அங்கு அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
இலங்கையில் எந்த செய்தி வெளியாக வேண்டும் எது வெளியாகக்கூடாது என்பதைக்கூட இன்னும் இலங்கையின் ஆட்சி நிர்வாகமே தீர்மானிக்கும் நிலை உள்ளதாக பாஸன அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இயல்பு திரும்பிவிட்டதாக தெரியவரும் போது அடுத்தநாளே இலங்கை அகதிகள் நாடு திரும்பிவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அகதிகளே அரசியல் அடைக்கலம் கோருவதாக அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் கருத்தை நிராகரித்த அவர், பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு மாத்திரம் எவரும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை.
இலங்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையை அடுத்தே அவர்கள் அகதிகளாக செல்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.