siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 5 செப்டம்பர், 2012

வேம்படி கல்லூரி விவகாரம்! அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகள் கைவிரிப்பு! அரச அதிபரிடம் மகஜர்

 
05.09.2012.BYrajah.
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு ஒரு அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இன்று காலை வேம்படி மகளிர் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அதனைத் தொடர்ந்து யாழ்.அரச அதிபரைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதன்போது அரச அதிபரிடம் கருத்து தெரிவித்த பழைய மாணவர் சங்கச் செயலாளர் திருமதி ஆனந்தகுமாரசாமி,
வேம்படி மகளிர் கல்லூரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என அரச அதிகாரிகள் கைவிரித்து விட்டதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அரச அதிபர் இவ்விடயத்தில் உரிய கவனம் எடுத்து சம்பந்தப்பட்ட சகலருடனும் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.