siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 6 மே, 2013

கட்டாய உடலுறவு கொண்ட நாடாளுமன்ற துணை,,,


பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற பொது சபையின் துணை சபாநாயகராக பதவி வகிக்கும் நிகெல் இவான்ஸ்(55) என்பவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார்.
நிகெல் இவான்ஸ் தங்களை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் நண்பர்கள் இருவர் இவர் மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து, லண்டனிலுள்ள உள்ள நாடாளுமன்ற பொது சபைக்கு சென்ற பொலிசார், நிகெல் இவான்ஸை கைது செய்தனர்.
பிரெஸ்டென் பொலிஸ் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்று வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் வருகின்ற யூன் 19ம் திகதி வரை செல்லுபடியாகத் தக்க 45 நாள் பிணையில் அவரை விடுவித்தனர்.
தன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது, ஆதாரமற்றது என்று நிகெல் இவான்ஸ் கூறியுள்ளார்
 

தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: தேசிய முன்னணி வெற்றி


222 உறுப்பினர்களை கொண்ட மலேசியா பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
13-வது பாராளுமன்றத்திற்காக பிரதமரை தேர்ந்தெடுக்க 5 மணிவரை நடந்த இந்த தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாயின. இதில் ஆளும் தேசிய முன்னனியும், எதிர்க் கட்சியான மக்கள் கூட்டணியும் போட்டியிட்டன.
உடனே தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிரதமர் நஜிப்ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி 129 சீட்டுகள் பெற்று மிக எளிதாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அன்வர் இப்ராஹிமின் தலைமையிலான எதிர்க் கட்சி வெறும் 77 சீட்டுகள் பெற்று தோல்வியை தழுவியது.
வெற்றி பெற்றுள்ள பிரதமர் நஜிப்ரசாக், கூட்டணிக்குள் உள்ள பிரச்சினைகளை சரி செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய கூட்டணி கட்சி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு தலைமையின் கிழ் உள்ள இந்த கூட்டணியில் மலேசிய சைனீஸ் சங்கம், மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
மலேசியாவில் சுமார் 17 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் ??


 அரசியல் தனிமைப்படுத்தும் சட்டம் என்ற இந்த மசோதா, லிபிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே, நீண்ட மாதங்களாக விவாதத்தில் இருந்து வந்தது. கடாபியின் புரட்சிப்படையில் இருந்த அதிகாரிகள், அரசியல் அமைப்புச் சட்டங்களில் தலையிட்டுள்ளதாகவும், அவர்களின் தலையீட்டினால் சட்டங்கள் தெளிவில்லாமல் அமைந்துள்ளதாகவும், அவர்களின் தலையீடு அறவே நீக்கப்படவேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 புதிய சட்டதிருத்தம் குறித்த சுற்றறிக்கைகளுக்கு இன்னும் இறுதிவடிவம் கொடுக்கப்படவில்லை. கடந்த 40 வருடங்களாக நடைபெற்ற கடாபியின் ஆட்சியை 2011 ஆம் ஆண்டு நீக்க, துணைபுரிந்திருந்தாலும் அவர் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் நீக்கும் வகையிலேயே புதிய சட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

லிபியா நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சர்வாதிகாரி முயாம்மர் கடாபியின் ஆட்சிக்காலத்தில், பதவியில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யும் வண்ணம் ஒரு புதிய மசோதா, ஞாயிறு அன்று அவர்களது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 200 உறுப்பினர்களில் 169 பேர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில், பங்கு பெறாதவர்களில் குறிப்பிடத்தக்கவர் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் முகமது அல் மெகாரிப் ஆவார். புதிய சட்டத்தின்படி, இவரும் பதவிநீக்கம் செய்யப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். பிரதமர் அலி சிடானும், கடாபி காலத்தில் பதவியில் இருந்ததால், அவரும் பதவி நீக்கம் செய்யப்படுபவர்களில் ஒருவர் ஆகின்றார்.

பள்ளிகளில் பெண்கள் விளையாட சவூதி அரசு


தனியார் பெண்கள் பள்ளிகளில், சவூதி அரேபியா அரசு முதன்முதலாக விளையாட்டை அங்கீகரித்துள்ளது. அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சகம், இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில் வெளியிட்டது.
 சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பெண்கள் பள்ளிகளில், பெண்கள் மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 ஷரியா மதக் கோட்பாடுகள், பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கின்றதாக கல்வி அமைச்சகத்தின் தகவல் அதிகாரி முகமது அல் தகினி தெரிவிக்கின்றார். சவூதி அரசு, பெண்கள் விளையாட்டிற்கு வெளிப்படையாக அனுமதி அளிப்பது இதுவே முதன் முறையாகும்.
ஆயினும், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் அல்ல என்று அம்மக்களில் சிலர் கருதுகின்றனர். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விளையாட்டுப் பிரிவு தனியே இயங்கிக்கொண்டிருக்கும்போது, இத்தகைய முயற்சி பொதுப் பள்ளிகளில் வேண்டுமானால் புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்

மீனவர்களுக்கு ஆந்திராவில் தர்ம அடி,

 ஆந்திர மாநிலம் காகிநாடா அருகே இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி புகுந்து மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 11 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோரக்காவல் படையால் கைது செய்யப்பட்ட அவர்கள் பின்னர் காக்கிநாடா மரைன் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் 11 பேரும், தும்முலாபேட்டையில் 2 காவலர்கள் பாதுகாப்புடன் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். மின்சாரம் இல்லாத நேரத்தில், அவர்கள் அனைவரும் காற்று வாங்குவதற்காக வெளியே சென்று இருக்கிறார்கள்.
 அப்போது, அவர்கள் அந்த ஊர் காரர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த ஊர் காரர்கள் சேர்ந்து இலங்கை மீனவர்களுக்கு தர்ம அடி கொடுத்திருக்கிறார்கள்.
இதில் பலத்த காயமடைந்த இலங்கை மீனவர்களில் 3 பேர், மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக பிடிபட்ட மற்ற 14 இலங்கை மீனவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.




 

ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்த ??


திருவண்ணாமலை மாவட்டத்தில் வாலிபர் ஒருவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர் அன்புமணி ராமதாஸ் கைதைக் கண்டித்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது.
பாமக தலைவர்கள் கூண்டோடு கைதாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். டாக்டர் ராமதாஸ், திருச்சி சிறையில் அடைபட்டுள்ளார். அவரது மகனும், இளைஞர் அணி தலைவருமான அன்புமணியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் அருகே தீச்சட்டிப்பட்டு கிராமத்தில் ஜெகன் என்ற 22 வயது வாலிபர் திடீரென தீக்குளித்து விட்டார்.
அவரை அங்கிருந்து சென்னை கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இவர் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீவைத்து விட்டார்.
இதுகுறித்து ஜெகன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணிகூறுகையில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கைதானது முதல் முதல்வர் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் திட்டிக் கொண்டிருந்தார் ஜெகன்.
நேற்றும் கூட முதல்வரைத் திட்டியபடி இருந்தார். இரவில் திடீரென தீவைத்துக் கொண்டார் என்றார். ஜெகன் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அவரது உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது
 

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன இராணுவம் வெளியேற்றம்


 இவர்கள் சுமார் 19 கி.மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அப்பகுதியை ஆக்கீரமித்த சுமார் 50 சீன ராணுவ வீரர்கள் அங்கேயே முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர் வெளியேறினர்.
இந்திய எல்லையை விட்டு வெளியேறுமாறு இந்தியா - சீனா ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 கொடி கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், 4-வது முறையாக நேற்றும் இரு நாடுகளின் உயரதிகாரிகளுக்கு இடையில் கொடி கூட்டம் நடைபெற்றது.
சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போதும், சீனா தனது நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டியுள்ளது.
‘லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில், சீன எல்லைக்குள் சுமார் 300 மீட்டர் தூரம் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து முதலில் இந்தியா வெளியேற வேண்டும்.
அதன் பிறகே, இப்போது ஆக்கிரமித்த பகுதியை விட்டு நாங்கள் வெளியேறுவது தொடர்பாக யோசிக்க முடியும்’ என சீனா கூறியது.
இதனையடுத்து, ஏற்பட்ட சமரச உடன்படிக்கையின்படி, லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில் இருந்து இந்தியாவும், கடந்த 15-ம் தேதி ஆக்கிரமித்த இந்திய பகுதியிலிருந்து சீனாவும் இன்றிரவு 7.30 மணியளவில் வெளியேறின