siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 6 மே, 2013

அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய லிபியாவில் ??


 அரசியல் தனிமைப்படுத்தும் சட்டம் என்ற இந்த மசோதா, லிபிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே, நீண்ட மாதங்களாக விவாதத்தில் இருந்து வந்தது. கடாபியின் புரட்சிப்படையில் இருந்த அதிகாரிகள், அரசியல் அமைப்புச் சட்டங்களில் தலையிட்டுள்ளதாகவும், அவர்களின் தலையீட்டினால் சட்டங்கள் தெளிவில்லாமல் அமைந்துள்ளதாகவும், அவர்களின் தலையீடு அறவே நீக்கப்படவேண்டும் என்பதற்காகவும் இத்தகைய ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
 புதிய சட்டதிருத்தம் குறித்த சுற்றறிக்கைகளுக்கு இன்னும் இறுதிவடிவம் கொடுக்கப்படவில்லை. கடந்த 40 வருடங்களாக நடைபெற்ற கடாபியின் ஆட்சியை 2011 ஆம் ஆண்டு நீக்க, துணைபுரிந்திருந்தாலும் அவர் ஆட்சிக்காலத்தில் பதவியில் இருந்த அனைத்து அதிகாரிகளையும் நீக்கும் வகையிலேயே புதிய சட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

லிபியா நாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சர்வாதிகாரி முயாம்மர் கடாபியின் ஆட்சிக்காலத்தில், பதவியில் இருந்த அதிகாரிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யும் வண்ணம் ஒரு புதிய மசோதா, ஞாயிறு அன்று அவர்களது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 200 உறுப்பினர்களில் 169 பேர் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில், பங்கு பெறாதவர்களில் குறிப்பிடத்தக்கவர் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் முகமது அல் மெகாரிப் ஆவார். புதிய சட்டத்தின்படி, இவரும் பதவிநீக்கம் செய்யப்படும் அரசியல் தலைவர்களில் ஒருவர் ஆவார். பிரதமர் அலி சிடானும், கடாபி காலத்தில் பதவியில் இருந்ததால், அவரும் பதவி நீக்கம் செய்யப்படுபவர்களில் ஒருவர் ஆகின்றார்.

0 comments:

கருத்துரையிடுக