சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட புதிய விதிமுறைகளின்படி, பெண்கள் பள்ளிகளில், பெண்கள் மேற்பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட்டு, விளையாட்டுக்குரிய தேவையான உபகரணங்களும், ஆடைகளும் இருக்கும் பட்சத்தில், பெண்கள், உடற்கல்வி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஷரியா மதக் கோட்பாடுகள், பெண்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ஆதரிக்கின்றதாக கல்வி அமைச்சகத்தின் தகவல் அதிகாரி முகமது அல் தகினி தெரிவிக்கின்றார். சவூதி அரசு, பெண்கள் விளையாட்டிற்கு வெளிப்படையாக அனுமதி அளிப்பது இதுவே முதன் முறையாகும்.
ஆயினும், இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் அல்ல என்று அம்மக்களில் சிலர் கருதுகின்றனர். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே விளையாட்டுப் பிரிவு தனியே இயங்கிக்கொண்டிருக்கும்போது, இத்தகைய முயற்சி பொதுப் பள்ளிகளில் வேண்டுமானால் புதிய நடைமுறையைக் கொண்டுவர ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்
0 comments:
கருத்துரையிடுக