222 உறுப்பினர்களை கொண்ட மலேசியா பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
13-வது பாராளுமன்றத்திற்காக பிரதமரை தேர்ந்தெடுக்க 5 மணிவரை நடந்த இந்த தேர்தலில் 80 சதவிகித வாக்குகள் பதிவாயின. இதில் ஆளும் தேசிய முன்னனியும், எதிர்க் கட்சியான மக்கள் கூட்டணியும் போட்டியிட்டன.
உடனே தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பிரதமர் நஜிப்ரசாக் தலைமையிலான ஆளும் தேசிய முன்னணி 129 சீட்டுகள் பெற்று மிக எளிதாக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. அன்வர் இப்ராஹிமின் தலைமையிலான எதிர்க் கட்சி வெறும் 77 சீட்டுகள் பெற்று தோல்வியை தழுவியது.
வெற்றி பெற்றுள்ள பிரதமர் நஜிப்ரசாக், கூட்டணிக்குள் உள்ள பிரச்சினைகளை சரி செய்வேன் என்று உறுதியளித்துள்ளார்.
மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தேசிய கூட்டணி கட்சி கடந்த 56 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வருகிறது.
ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு தலைமையின் கிழ் உள்ள இந்த கூட்டணியில் மலேசிய சைனீஸ் சங்கம், மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.
மலேசியாவில் சுமார் 17 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
கருத்துரையிடுக