siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

மூன்று இளம்பெண்களை 9 பேர் சேர்ந்து மாறி மாறி சிதைத்த கொடூரம்

           
Thursday 25 October 2012  By.Rajah.
தோட்ட நகரம், அமைதிப் பூங்கா... சிலிகான் சிட்டி என்று வர்ணிக்கப்படும் பெங்களூரு, இப்போது கற்பழிப்பு நகராக மாறி வருகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது அந்தச் சம்பவம்!

பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தேசிய சட்டக் கல்லூரியில் படிக்கும் நேபாள மாணவி கவுஷிகா, கடந்த 13-ம் தேதி மாலை தன் நண்பனுடன் கல்லூரி வளாகத்தில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, திடீரென வந்த எட்டு மனித மிருகங்கள் பேசிக்கொண்டிருந்த நண்பனைத் தாக்கி விட்டு, கவுஷிகாவைக் கடத்தி காட்டுக்குள் தூக்கிப் போய்... பெண்மையைச் சிதைத்து சின்னாபின்னமாக்கினர்.

பெங்களூருவை அதிர வைத்த இந்தச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண்‌களைக் கடத்திச் சென்று கற்பழித்திருக்கிறது ஒன்பது பேர் கொண்ட கும்பல்.

'பெங்களூரு காந்தி நகரில் இருக்கும் கேசினோ ராயல் பாரில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண்கள், டான்ஸர்களாகவும் சர்வர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் ஏழு பெண்கள் நித்தியின் பிடதி ஆசிரமத்துக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். தான் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருந்தவர்கள் வாழ்வில்தான் விதி விளையாடியது.

''கடந்த 18-ம் தேதி இரவு 1 மணிக்கு, இரண்டு ஆம்னி வேன்களில் ஒன்பது பேர் வந்திருக்கிறார்கள். யார் என்று கேட்பதற்குள் குடியிருப்பின் வாட்ச்மேனைத் தாக்கி விட்டு, இரண்டு பேரை வீட்டுக்கு வெளியே காவலுக்கு நிறுத்தி விட்டு, மற்ற ஏழு பேரும் முதல் தளத்தில் இருக்கும் பார் டான்ஸர்களின் வீட்டுக் கதவைத் தட்டி இருக்கின்றனர்.

வில்லங்கம் புரியாமல் கதவைத் திறக்க... கத்தி, வீச்சரிவாளைக் காட்டி மிரட்டியபடி அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். எதிர்ப்பு தெரிவித்த பெண்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். அத்தனை பேரின் செல்போன்களையும் பறித்தவர்கள், பணம், நகை மற்றும் வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் மூட்டை கட்டினார்கள்.

அதற்குப் பின், ''பாரில் மட்டும்தான் குட்டி குட்டியா டிரெஸ் போட்டுக்கிட்டு ஆடுவீங்களா... இங்கேயும் ஆடுங்கடி!'' என்று மிரட்டி... கத்தி முனையில் ஆட வைத்திருக்கிறார்கள். அதன்பிறகு ஃபேஷன் ஷோவில் நடக்கிற மாதிரி 'பூனை நடை’ நடக்கச் சொல்லி, அவர்களில் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அந்த மூன்று பேரின் கண்களையும் வாயையும் துணியால் கட்டியவர்கள், அவர்களை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு அதே ஏரியாவில் ஆள் இல்லாத வீட்டுக்குப் போயிருக் கிறார்கள். அங்கே மூன்று பெண்களையும் ஒன்பது பேரும் சேர்ந்து மாறி மாறி சிதைத்து இருக்கிறார்கள்'' என்று அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள் அந்தக் குடியிருப்புவாசிகள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சேர்க்கப்பட்டிருந்த ராஜராஜேஸ்வரி மருத்துவமனைக்குச் சென்றோம். பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிர மருத்துவப் பரிசோதனையும் நடந்து கொண்டு இருந்ததால், அவர்களுடன் பேச முடியவில்லை. மற்ற பெண்களும் அதிர்ச்சி விலகாமல் பேச மறுக்க, ஒருவர் மட்டும் முகத்தையும் பேரையும் மறைத்துக் கொண்டு பேசினார்.

''நாங்களே ஊரு விட்டு ஊரு வந்து வயிற்றுப் பிழைப்புக்காகவும் குடும்பக் கஷ்டத்துக்காகவும்தான் இந்த வேலையைச் செய்றோம். வேற வேலை கிடைக்காமத்தான் இதைச் செய்றோம். வாங்குற சம்பளத்தில் பாதி, வாடகைக்கும், சாப்பாட்டுக்கும், மேக்கப்புக்கும் போயிடும். மீதியை வீட்டுக்கு அனுப்புவோம். எங்களை ஏன் மனுஷியாவே யாரும் மதிக்க மாட்டேங்​கிறாங்க..?'' என்று விம்மி விம்மி அழுதார். சமாதானப்படுத்தியதும் பேசியவர், ''அவங்க மூணு பேரையும் அடிச்சி உதைச்சி கையைக் கட்டிப்போட்டு ரேப் பண்ணியிருக்காங்க. அவங்க அரைகுறை மயக்கமா இருக்கும் போதே கெங்கேரி மேம்பாலத்தில் போட்டுட்டுப் போய்ட்​டாங்களாம். எங்ககிட்ட இருந்த செல்போன், பணம் எல்லாத்தையும் பாவிங்க பிடுங்கிட்டுப் போனதால எங்களால் ஒண்ணுமே செய்ய முடியலை. அலங்கோலமா வீட்டுக்கு வந்தவங்களை நாங்கதான் ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீஸ்ல புகார் கொடுத்தோம். அவங்க ரேப் பண்ணும்போது வீடியோ எடுத்தாங்களாம். போலீசுக்குப் போனா இன்டர்நெட்டில் போடுவோம்னு மிரட்டியிருக்காங்க. இனி நாங்க என்ன பண்ணப் போறோமோ?'' என்று கண்ணீர் வடித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியிடம் பேசினோம். ''கற்பழிப்புகள் தொடர்வது வருத்தமளிக்கிறது. சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பில் ஆறு பேரை பிடிச்சிட்டோம். அதேபோல, பார் பெண்கள் கேஸில், அவர்களுக்குத் தெரிந்தவர்கள் அல்லது நீண்ட நா​ட்களாக ஃபாலோ செய்தவர்கள்தான் செய்​திருக்க வேண்டும். மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். கூடிய விரை​வில் அனைவரையும் கைது செய்து விடுவோம்'' என்றார்.

சம்பவம் நடந்து மூன்று நாட்கள் ஆனபிறகும் யாரையும் கைது செய்யாததைப் பார்க்கும்போது, பெங்களூரு நகரம் ஆபத்தின் பிடியில் சிக்கியிருப்பது தெரிகிறது!