siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு!!

         
Thursday 25 October 2012  By.Rajah.
இராணுத்தின் ஏற்பாட்டில் இலங்கைக்கான சீனத்தூதுவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று காலை 9.00 யாழ். மாநகர சபைக்குச் சென்று, யாழ். மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவைச் சந்தித்து கலங்துரையாடினர்.
யாழ் மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்துள்ளனர்.
அத்துடன், யாழ் நூலகத்திற்குச் சென்ற சீனத்தூதுவர், நூலகத்திற்கென ஒரு லட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கினார்.
அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய சீன தூதுவர், இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்களை பாராட்டிப் பேசியதுடன் இந்தியவிற்கும் இலங்கைக்கும் இருக்கும் நெருக்கத்தையும் தெளிவுபடுத்திப் பேசினார்.
யாழ். மாவட்டச் செயலகத்திற்கு சென்ற குழுவினர், அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சீனக்குழுவினருக்கு அரச அதிபர் விளக்கமளித்தார்.
சீனத் தூதுவரின் வருகையை முன்னிட்டு, யாழ். மாநகர சபை, யாழ். நூலகம், கச்சேரி போன்ற பகுதிகளில் பெருமளவு இராணுத்தினர் சிவில் உடையில் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
தமிழருக்கான அரசியல் தீர்வைப் பெற்றுக் கொள்வதில் கூட்டமைப்பு ஆர்வம் – சீனத் தூதுவர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழருக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதை அவர்களோடு நடத்திய சந்திப்புக்களில் மூலம் தாம் கண்டு கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கு ஜாங்கோ தெரிவித்தார்.
யாழ்.நூலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்விதம் கூறினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,தமிழ் மக்களின் ஜனநாயக ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் கொழும்பில் என்னைச் சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் வடபகுதிக் கட்டமைப்புக்களில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
உண்மையில் யாழில் வீதி அபிவிருத்தி துரிதகதியில் நடபெறுகின்றது. அதை நான் நேரில் பார்ப்பதற்காக வந்துள்ளேன்.
யாழின் அபிவிருத்தி திட்டங்களை சீன அரசாங்கம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது.
வீதி அபிவிருத்தியில் முக்கிய பங்காற்றும் சீன அரசாங்கம் வடபகுதியில் வீதிப் போக்குவரத்து வசதிகளைச் செய்து கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணம் யுத்தத்திற்கு பின்னர் பாரிய துரித வளர்ச்சியடைவதாக என்னால் பார்க்க முடிகின்றது என்றார்.
இதேவேளை யாழிக்குச் சென்ற சீனத் தூதுவர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தைச் சந்தித்து யாழில் அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார்.
அதன் பின்னர் யாழ்.நூலகத்திற்கு சென்ற சீனத் தூதுவர் யாழ்.நூலகத்தின் வளர்ச்சிக்காக ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்புச் செய்துள்ளார்.
இதேவேளை சீன தூதுவர் நல்லூருக்கு இன்று வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.