siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

சீனர் வைரக்கல் விழுங்கியது அதிசயமா? - தயாசிறி

25.10.12.By.Rajah.மஹிந்த சிந்தனை ரணசிங்க பிரேமதாசவினால் உருவாக்கப்பட்டதல்ல. அது மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டது. அதனைப் பற்றித்தான் கேள்வி கேட்டிருந்தேன் அதற்கு நேரடியாகப் பதிலளித்தால் போதும் என வீடமைப்பு புனர்நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு அறிவுரை கூறினார், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்கப் பிரேமதாசவின் புதல்வரும், அம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச.
நேற்று நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே இப்படியொரு சுவாரஷ்யமான சம்பவம் இடம்பெற்றது. நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒருமணிக்கு பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது.
நவம்பர் எட்டில் வரவுசெலவுத் திட்ட உரை 2013ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் உத்தியோகபூர்வ அறிவித்தல் ஒன்றை விடுத்தார் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி.

விடை கிடைக்காத வினாக்கள்
வழமைபோல் நாடாளுமன்ற ஒழுங்குபடுத்தலில் வாய்மூல விடைக்கான பதினைந்து கேள்விகள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றுள் பெருமளவிலானவை மூன்று தடவைகளுக்கு மேல் கேட்கப்பட்டுப் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டவை. அதேபோல் இன்றும் பன்னிரெண்டு வினாக்களுக்கு விடையளிக்கக் கால அவகாசமே கேட்கப்பட்டது. உரிய பதில்கள் கிடைக்கவில்லை.
வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு
15, 000 வீடுகள் எப்போது
வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 15, 000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுடைய அமைச்சின் மூலம் இதுவரை எத்தனை வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
அதற்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு. எத்தனை பேருக்கு வீடுகள் தேவை என்ற புள்ளி விவரம் இருக்கின்றதா? என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச வீடமைப்பு நிர்மாணத்துறைகள் அமைச்சரிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

6197 மில்லியனில் 8858 வீடுகள்
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல்வீரவன்ச தனது அமைச்சின் மூலம் 6197 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 8858 வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்த இடத்தில் இடைமறித்தார் சஜித் பிரேமதாச. நீங்கள் 15, 000 வீடுகள் என்கின்றீர்கள் ஜனாதிபதி 15 லட்சம் வீடுகள் என்கிறார்கள். எதுவும் நடந்தபாடில்லை. வடக்கு கிழக்கில் எத்தனை பேருக்கு வீடுகள் தேவை என்ற விவரமாவது உங்களிடம் உண்டா என்று கேட்டார்.
நாம் மட்டுமல்ல பல அமைப்புகள்
வீடுகளைக் கட்டுகின்றன
இது தொடர்பாக நான் ஏற்கனவே கூறிவிட்டேன். பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சமுர்த்தி மீள்குடியேற்ற அமைச்சு என்பனவும் தொண்டர் நிறுவனங்களும் வீடுகளைக் கட்டி உள்ளன. இந்திய அரச 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளது என்றார் அமைச்சர் விமல் வீரவன்ச.
இந்திய வீடு 5 லட்சம் ரூபா
நமது வீடு 3லீ லட்சம் ரூபா
இந்தியா 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்துள்ள போதும், வீடுகளைக் கட்டுவதற்கு தகுதியான இடமும் பயனாளிகளின் பெயர்ப் பட்டியலும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால்தான் இந்திய வீட்டுத் திட்டம் தாமதப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதே என கிண்டிவிட்டார் சஜித் பிரேமதாச.
நீங்கள் இந்தியப் பிரதிநிதியா? அல்லது தூதுவரா?
சஜித் பிரேமதாசவின் கேள்வி விமல் வீரவன்சவுக்கு கடுப்பை ஏற்றிவிட்டது. நாம் சகலவிவரங்களையும் தக்க சமயத்தில் கொடுத்துள்ளோம். நீங்கள் என்ன இந்திய அரசின் பிரதிநிதியா? அல்லது இந்தியத் தூதுவரா?
மஹிந்த சிந்தனையின் படி நாம் எமது வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இந்தியா ஒரு வீட்டைக் கட்டுவதற்கு 5 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
நாங்கள் 3லீ லட்சம் ரூபாவில் வீடுகளை அமைக்கின்றோம். இங்கே "றோ' அமைப்பிடம் பணம் பெறுபவர்கள் தான் வெறுமனே அலட்டிக்கொள்கின்றனர் எனப் பதிலடி கொடுத்தார் அமைச்சர் விமல் வீரவன்ச.
சூடான விவாதம்
சுவையான விடயங்கள்
இதனால் இருவருக்குமிடையில் சூடான விவாதம் ஏற்பட்டது. அப்போது முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்கப் பிரேமதாசவின் பெயரும் சபையில் இழுக்கப்பட்டது.
பிரேமதாச ஜனாதிபதியாக, பிரதமராக மட்டுமன்றி வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராகவும் இருந்தார். அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் கீழ் 5 லட்சம், 10 லட்சம், 15 லட்சம் வீடுகளைக் கட்டுவோம் என்று கூறினார்.
ஆனால் 45 ஆயிரம் வீடுகளை மட்டுமே கட்டினார். பிரேமதாச கூறியபடி வீடுகளை அமைத்திருந்தால் இன்று நாட்டின் மக்களை விட வீடுகளே அதிகமாக இருந்திருக்கும் என்றார் அமைச்சர் விமல் வீரவன்ச.
மஹிந்த சிந்தனை ரணசிங்க பிரேமதாசவுடையதல்ல
அமைச்சர் எப்போதும் இடக்கு முடக்காகப் பேசுவதில் கெட்டிக்காரர். நான் மஹிந்த சிந்தனை தொடர்பாகத் தான் கேள்வி எழுப்பினேன். அவர் பிரேமதாச பற்றிப் பேசுகின்றார். பாவம் அறியாதவர்.
ஒரு மணி நேரத்தில்
11 வீடுகள்
அமைச்சர் கூறுகின்றார் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஆறு லட்சம் வீடுகள் கட்டப்படும் என்றார். அப்படியானால் ஒரு மணி நேரத்தில் 11 வீடுகளைக் கட்டி சாதனை படைத்து விடுவார்களோ என்றும் ஒரு கேள்வியை மீண்டும் எழுப்பினார் சஜித் பிரேமதாச.பிரேமதாச உயிருடன் இருந்தால் தற்கொலை செய்து கொள்வார்
இந்த உறுப்பினர் இடக்கு முடக்காகப் பேசுகின்றார். பிரேமதாச ஜனாதிபதியாகவும் அமைச்சராகவும் இருந்தபோது இவர் வெளிநாட்டில் இருந்தார். இங்கே இருந்திருந்தால் வீட்டைக் கட்ட எவ்வளவு சிமெந்து, எவ்வளவு கற்கள், எவ்வளவு சுண்ணாம்பு செலவிடப்பட்டது என்று அவரிடமே கேள்ளி எழுப்பி இருப்பார்.
இன்று அவர் உயிருடன் இருந்தால் இப்படியொரு பிள்ளையைப் பெற்றோமே என்று தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று திருப்பி அடித்தார் அமைச்சர் விமல் வீரவன்ச.
இப்படியான சூடான வாதப் பிரதிவாதங்களுடன் கேள்விநேரம் முடிந்தது. கேள்விகளுக்கு விடைகள் கிடைக்காவிட்டாலும் விமல் சஜித் விவாதம் சூடாகவும் சுவாரஷ்யமாகவும் இருந்தது.
காப்புறுதி தொழிலை ஒழுங்குபடுத்தும் சட்டவரைவு
இதனைத் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம காப்புறுத் தொழிலை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான திருத்தச் சட்ட வரைவை சபையில் சமர்ப்பித்தார். இந்த விவாதத்தில் ஆளும் தரப்பினரை விட எதிர்த் தரப்பினரே கூடுதலாகப் பங்கு கொண்டனர்.
சீனா நமது நாட்டையே விழுங்கப்போகின்றது
ஒரு சீனர் இரத்தினக் கல்லையே விழுங்கிவிட்டார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினராக தயாசிறி ஜயசேகர பல விடயங்களைப் புட்டுவைத்தார். அதாவது இன்றைய அரசாங்கம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நாட்டின் பெரும்பகுதியை கொடுக்கப்போகின்றது. சீனா நமது நாட்டையே விழுங்கப் போகின்றது. இப்படியான ஒரு நிலையில் கண்காட்சிக்கு வந்த ஒரு சீனர் இரத்தினக் கல்லை விழுங்கியது ஒன்றும் ஆச்சரியமில்லை என்றார்.
இந்தியாவுக்கும் றோ அமைப்புக்கும் எதிராக வீரம் பேசுபவர்கள் இரகசியமாக ஒப்பந்தங்களை செய்வது ஏன்?
அமைச்சர் விமல் வீரவன்ச 13ஆவது திருத்தத்தை ஒழிப்போம் என்கின்றனர். இந்திய அரசையும் றோ அமைப்பையும் காரசாரமாக விமர்சிக்கின்றார். சபையில் தான் ஒரு தேசிய வீரர் போன்று பேசுகின்றார். அதேவேளை இந்தியாவுக்கும் போகின்றார்.
அரசாங்கம் பல உடன்படிக்கைகளைச் செய்து கொள்கின்றது, காணிகளை வழங்குகின்றது. இலங்கை இந்திய உறவைப் பலப்படுத்துவோம் என்றும் கூறுகின்றார். ஏன் இந்த இரட்டை வேடம் என்றும் கடுமையாக விமர்சித்தார் தயாசிறி ஜயசேகர.
13ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்துவோம் என்கிறார் அரச தரப்பு எம்.பி.
இன்று நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பது 13ஆவது திருத்தம். ஜனாதிபதியின் சகோதரர்களாக கோத்தபாய, பஸில் ஆகியோருடன் அமைச்சர்களான விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க உட்பட சிலர் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென பொதுவாகப் பரப்புரை செய்கின்றனர்.
ஆனால் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும் கட்சி உறுப்பினராக அருந்திக்கப் பெர்னாண்டோ இந்த அரசாங்கம் 13ஆவது திருத்தத்தை மேலும் பலப்படுத்தும். பேச்சுக்களின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம். தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் அரசின் கருத்துகள் அல்ல என்றும் குறிப்பிட்டார்