siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

அமெரிக்க அரசாங்கத்தின்நிதியுதவியில்


Thursday25 October 2012  ByRajah.மட்டக்களப்பு புல்லுமலையில் அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்ட இன நல்லுறவுக்கான கூட்டிணைவு வீதியை இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் திறந்து வைத்தார்.
மட்டக்களப்பிற்காஇரண்டுநாள் விஜயத்தினைமேற்கொண்டு வருகைதந்துள்ளஇலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், நேற்றைய தினம் மாலை 3.30 மணிக்கு மட்டக்களப்பின் மீள்குடியேற்ற எல்லைக் கிராமமானபுல்லுமலைக்குவிஜயம் செய்ததுடன்,அங்கு அமெரிக்க நிதியுதவியில் யு.எஸ்.எயிட்.நிறுவனத்தினால் புனரமைக்கப்பட்டபுல்லுமலைக்கும் மங்களகமைக்கும் இடையிலான தமிழ்-சிங்கள இன நல்லுறவுக்கான வீதியைத் திறந்துவைத்தார்.
சுமார் ஏழு கிலோமீற்றர் தூரத்தினைக் கொண்ட இவ் வீதியானது கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக புல்லுமலை, மங்களகம கிராமங்களில் வசித்து வந்த தமிழ்-சிங்கள மக்களுக்கு இடையிலான கசப்புணர்வை போக்கி இரண்டு சமூகங்களுக்கு இடையிலான இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்குடன் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன்,
யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையில் ஏற்பட்ட கசப்புணர்வுகளை இரண்டு இன மக்களும் மறந்து எல்லா மக்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதை இங்கு நடைபெற்ற நிகழ்வுகளின் ஊடாக தான் அவதானித்ததாகவும் இங்கு நடைபெற்ற தமிழ்- சிங்கள் மக்களின் இனநல்லுறவை ஏற்படுத்தும் நாடகமும், இங்கு திறந்துவைக்கப்பட்ட சுவர் ஓவியமும், இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்குடன் திறந்துவைக்கப்பட்ட வீதியும் என மூன்று விடயங்களும் தன்னை கவர்ந்துள்ளதாகவும் இதற்காக உழைத்த அனைவருக்கும் தான் நன்றிகளை தெரிவித்துகொள்வதாகவும் அவர் கூறினார்.
இந் நிகழ்வில் வரவேற்புரையை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர் நிகழ்த்தியதுடன், கிராம இளைஞர்களினால் இன உறவை மேம்படுத்தும் நாடகமும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் அவர்களுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகளும், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் திரு.வினோத், சர்வோதயம் அமைப்பின் கிழக்குப் பிராந்திய இணைப்பாளர் திரு.கரீம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் யு.எஸ்.எயிட் நிறுவன அதிகாரிகள், பாடசாலை அதிபர், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், தமிழ், சிங்கள மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.