வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. |
இடையே மோதல்: 7 பேர் பலி மெக்சிகோவின் வடக்கில் உள்ள
ஜகாடெக்ஸ் மாகாணத்தில் கடற்படையை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மர்ம கும்பலுக்கும்
இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மாகாண அரசு வழக்குரைஞரின் செய்தித் தொடர்பாளர் ஜார்ஜ் ஃபுளோரிஸ்
கூறுகையில், கடற்படையை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், மர்ம கும்பலுக்கும் இடையே 2
மணி நேரம் நடைபெற்ற மோதலில் அந்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். எனினும்
அவர்களின் சடலங்களை அடையாளம் காண முடியவில்லை என்றார். எனினும் இந்த மோதல் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. ஜெட்டா இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த இனத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு பழிவாங்கும் விதத்தில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. |
வியாழன், 25 அக்டோபர், 2012
மெக்சிகோவில் மர்ம கும்பலுக்கும், கடற்படையினருக்கும்
வியாழன், அக்டோபர் 25, 2012
செய்திகள்