
எசொன்னில் (Essonne - Etrechy )உள்ள தேசிய சாலையில் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகக் கட்டுப்பாடுள்ள பகுதியில் மணிக்கு 193 கிலோமீற்றர் வேகத்தில் சென்ற சிற்றுந்துச் சாரதி காவற்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு 20:40 அளவில் 34 வயதுடைய இச் சாரதி காவற்துறையினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவரது சாரதி அனுமதிப் பத்திரம் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவார். வேறு ஒருவரிடம் இரவல் வாங்கி...