siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

கொலிவுட்டில் கிளாமாராக நடிக்க முடிவு செய்த ஷீலா


17.08.2012.
கொலிவுட்டில் நந்தா, டும் டும் டும் உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷீலா இளவட்டம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின்பு அவர் தமிழில் நடித்த சீனாதானா, கண்ணா, வேதம் படங்கள் வெற்றிபெறவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து அங்கு பிசியான நடிகையாகிவிட்டார்.
நயன்தாராவுக்கு இணையாககூட ஒரு படத்தில் நடித்துவிட்டார். தெலுங்கில் படு கவர்ச்சியாக நடிக்கும் ஷீலா. தமிழில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை எதிர்பார்த்தார். தமிழில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்கூட மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
தற்போது ஷீலாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக பிற மொழி பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் படத்துக்கான வாய்ப்புக்கு காத்திருக்கிறார்.
இதுகுறித்து ஷீலா கூறுகையில், தமிழில் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்ததால்தான் பெரிய அளவில் வரமுடியவில்லை. தெலுங்கில் பெரிய படங்களாக நடித்து புகழ் பெற்றேன்.
எனவே அதே பார்முலாவில் பெரிய படங்களின் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் அதற்கான கதை கேட்டு வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது அவர் தமிழில் கிளாமராகவும் நடிக்க முடிவு செய்து அதற்கென தனி போட்டோஷுட் நடத்தியிருக்கிறார். அதனை விரையில் வெளியிடவும் இருக்கிறார்

நண்பரின் இறப்பால் பிறந்தநாள் விழாவை ரத்து செய்தார் மனிஷா


17.08.2012.
பிரபல நடிகை மனிஷா கொய்ராலா,  தான் கொண்டாடவிருந்த பிறந்தநாள் விழாவை திடீரென ரத்து செய்தார்.

கொலிவுட்டில் இந்தியன், முதல்வன் படங்களில் நாயகியாக நடித்த மனிஷா, மாப்பிள்ளை படத்தின் தனுசுக்கு மாமியாராக நடித்திருந்தார்.
இவர் தனது 42வது பிறந்த நாளை தன் தோழிகளுடன் கொண்டாட திட்டமிட்டிருந்தார். இதற்காக தபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்கு அழைப்பும் விடுத்தார்.
ஆனால் திடீரென இவரது பிறந்தநாள் விழா ரத்து செய்யப்பட்டது. இது குறித்து நடிகை மனிஷா விளக்கமளித்ததாவது, எனது நெருங்கிய நண்பரும் இயக்குனருமான அசோக் மேத்தா சமீபத்தில் இறந்தது என் மனதை மிகவும் பாதித்தது.
என்னுடைய தந்தையாக விளங்கிய அவரின் பிரிவை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகவே பிறந்தநாள் விழாவை இரத்து செய்தேன் என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக மனிஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது
 

கேப்பாப்புலவு பிரதேசத்தை ஆக்கிரமித்து மக்களை அவலநிலைக்குள்ளாக்கியுள்ள இராணுவம்!



வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,


முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்புலவு பகுதியில் இராணுவம் அபகரித்து வைத்துள்ள சுமார் 2 ஆயிரத்து 282 ஏக்கர் காணிக்குரிய அனுமதிப்பத்திரத்தை தம்மிடம் வழங்குமாறு இராணுவத்தினர் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் வளமான விவசாயக் கிராமமாகக் காணப்பட்ட கேப்பாப்புலவுக் கிராமத்தில் சுமார் 700 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வந்தன.
தற்போது மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்தினர் அபகரித்து வைத்துள்ளனர்.

மேற்படி பகுதிகளை இலங்கை இராணுவத்தின் 591ஆவது படைப்பிரிவு ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அவற்றைத் தமக்கு வழங்குமாறு அரச அதிகாரிகளைத் தொடர்ந்தும் வற்புறுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தப் பகுதியிலுள்ள மக்களை வேறிடம் ஒன்றில் மீள்குடியமர்த்துமாறும் இராணுவத்தினர் கூறி வருகின்றனர்.
இதேவேளை, இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதார வளங்களான கால்நடைகளும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் காணப்படுகின்றன.
அத்துடன் இந்தப் பகுதி மக்களின் சிறுகடல் தொழில்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை இராணுவத்தினர் தம்வசம் வைத்திருக்கின்றமையினால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் அவர்களின் வாழ்வாதாரங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை தொடருமானால் தமது இருப்பே கேள்விக்குறியாகி விடுமென இங்குள்ள மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவில் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதால் விவசாயமும் பாதிக்கப்படுகின்ற அவலநிலை உருவாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்

புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு

 வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,
பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் உள்ள புத்தரின் எலும்புகளை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதியில் ஆட்சி செய்த ஷாக்கிப் மன்னர் பரம்பரையின் வழித்தோன்றல்களில் வந்தவர் கௌதம புத்தர்.
இவர் உலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை முற்றிலும் துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார். அச்சமயத்தில் இந்தியாவை ஆட்சி செய்த அசோக மன்னர் புத்தரின் நெறிகளைப் பின்பற்றியே ஆட்சி நடத்தினார்.
இவ்வாறு இந்தியாவிலிருந்து சீனா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் புத்த மதம் பரவியது. இலங்கையில் புத்த மதம் தேசிய மதமாகும்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே இந்தியாவிற்கு விஜயமளித்த போது பீகாரில் உள்ள புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு தருமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்தது.
மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது.
இது பற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, அண்டை நாடுகளின் இது போன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது.
இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை இந்திய அமைச்சர் நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார்.
புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் செல்ஜா புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார்.

சிகரெட் பெட்டியில் நோயை பிரதிபலிக்கும் கொடூர படங்கள்


சிகரெட் பெட்டியில் நோயை பிரதிபலிக்கும் கொடூர படங்கள்
வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2012,
ஜேர்மனியில் உள்ள புற்றுநோய் நிபுணர் ஒருவர் சிகரெட்டினால் ஏற்படும் நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தை புகைபிடிப்பவருக்கு உணர்த்த தீர்மானித்துள்ளார்.
இதனை முன்னிட்டு சிகரெட் பெட்டியின் அட்டையில் புகைப்பழக்கத்தால் ஏற்படும் நோயைக்கானபடங்களை அச்சடிக்க வேண்டும், என்று அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புகை பிடிப்பதை எதிர்த்து பல கடுமையான சட்டங்கள் அறிமுகமாகி உள்ளன. அதுபோல ஜேர்மனியிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
சிகரெட் விளம்பரத்துக்கு கடுமையான சட்டவிதிகளை அவுஸ்திரேலியா போன்ற சில உலகநாடுகள் பின்பற்றி வருகின்றன. ஆனால் ஜேர்மனியில் சிகரெட் தயாரிப்பாளரின், செல்வாக்கு மிகுதியாக இருப்பதால் புகைப்பழக்கத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகள் குறைவாக இருப்பதாக மருத்துவர் மார்டினா போஷ்க்லாங்கர் கவலை தெரிவித்துள்ளார்.
சிகரெட் பெட்டியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நுரையீரல், நோயுற்ற குழந்தை, சொத்தை பற்கள், உருக்குலைந்த விந்தணு போன்ற படங்களை அச்சிட்டால் புகைபிடிக்கும் பழக்கம் குறையலாம். ஆயிரம் வார்த்தைகளால் நாம் விளக்குவதை விட இப்படங்கள் தெளிவாக விளக்கும்.
ஜேர்மனியில் சிகரெட் தயாரிப்பாளர் செல்வாக்கின் முன்பு சுகாதாரத்துறை இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு புகைப்பழக்கத்தின் தீமை குறித்து ஆராய்ந்த விஞ்ஞானிகள் பலரும் கொல்லப்பட்டனர். சிலர் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டனர். இந்நிலையே அன்று முதல் இன்று வரை ஜேர்மனியில் நீடிக்கிறது.
போஷ்க லாங்கர், DKFZ என்ற புற்று நோய்த் தடுப்பு மையத்தில் மருத்துவராக இருப்பதோடு உலக சுகாதார நிறுவனத்தின் புகைக்கட்டுப்பாடு ஒன்றிணைப்பு மையத்திலும் பணியாற்றுகிறார். ஜேர்மானிய அரசை வற்புறுத்தி வரும் பல விஞ்ஞானிகளுள் இவரும் ஒருவராவார்.
இவர், கடுமையான சட்டங்களை அவுஸ்திரேலியா போல ஜேர்மனி அறிமுகம் செய்தால் மட்டுமே, புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் இனி அப்பழக்கத்திற்கு அடிமையாக மாட்டார்கள், புகை பிடிப்பவர்களும் பழக்கத்திலிருந்து விடுதலைப் பெறுவர்.
ஐரோப்பாவில் பொது இடத்தில் புகை பிடிக்க அனுமதிப்பதில்லை. எனவே இது குறித்த விழிப்புணர்ச்சியை ஜேர்மனியிலும் கொண்டு வரவேண்டும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 </

சென்னையின் புகழ் பாடும் சிம்பு

17.08.2012.
சிங்கார சென்னையின் புகழை சொல்லும் ஆன்தம் ஒன்றை சிம்பு பாடியுள்ளார். இந்த ஆன்தம் யுரியூப்பில் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் போடா போடி, வேட்டை மன்னன், வாலு போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இதற்கிடையில் மதில் மேல் பூனை என்ற படத்தை விளம்பரப்படுத்தும் பாடலாக இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாடல் சென்னைவாசிகளை ஈர்க்கும் படியாக அமைந்துள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் சிம்புவின் அடுத்த ஆன்தம் தயாராகி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது யுரியூப்பில் சென்னையைப் பற்றி மட்டும் குறிப்பிடும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் ஊரு எனத் தொடங்கும் இப்பாடல் வரிகள் சென்னைவாசிகளின் மனதில் பதியும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் மெரினா என்ற படத்தில் சென்னையின் புகழை விளக்கும் பாடலொன்றை காட்சிப்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

பத்மப்ரியாவால் ஏற்பட்ட பிரச்சினை

17.08.2012.
நடிகை பத்மப்ரியா ஊதிய விடயத்தில் தனது மேலாளருக்கு பரிந்து பேசியதால் கேரளா சினிமா துறையில் மேலாளர்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதுகேரளா சினிமாவில் நடிகர்- நடிகைகளின் மேலாளர்கள் தயாரிப்பாளர்களிடமே சம்பளம் வாங்குகின்றனர்.
இவர்களின் சம்பள விடயத்தில் குழப்பம் செய்தால் நடிகர்- நடிகைகளின் திகதிகளை தாமதப்படுத்துவர். இப்பிரச்சினை நீண்ட காலம் கேரளா சினிமாவில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் மலையாளத்தில் ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தில் பத்மப்ரியா நடிக்கிறார்.
இப்படத்தை நிஷாத் இயக்குகிறார். இப்படத்தை முடித்து கொடுப்பதற்கு பத்மப்ரியா தனது மேலாளருக்கு கொடுக்க கூடுதல் பணம் தரவேண்டும் என இயக்குனரை நிர்பந்தம் செய்துள்ளார்.
இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பத்மப்ரியா மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் மேலாளர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
சம்பள விடயங்கள் குறித்து நடிகர்- நடிகைகளிடம் நேரில்தான் பேசவேண்டும் என்றும் தீர்மானித்து உள்ளனர்

தங்கச் சுரங்கத்தில் விபத்து:60 தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்

 
வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,
காங்கோ நாட்டின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 60 தொழிலாளர்கள் பலியாயினர்.
காங்கோ நாட்டின் ஓரியன்டல் மாகாணத்தின் மம்பாசா பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று முறைக்கேடாக இயங்கி வந்தது.
நான்கு நாட்களுக்கு முன் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்தின் நுழைவாயில் இடிந்தது. இதனால் 100 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதையுண்டு இறந்தனர்.
இது குறித்து காங்கோ சுரங்க அமைச்சர் குறிப்பிடுகையில், இந்த விபத்தில் 60 பேர் இறந்துள்ளனர். உள்ளூர் போராளிகள் இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், அரசு தரப்பில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்

சுயாதீனமாக கடமையாற்ற முடியாமையே பதவி விலகக் காரணம்: திலக் கருணாரட்ன




வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,


சுயாதீனமாக கடயைமாற்ற முடியாத காரணத்தினால் பதவி விலகுகின்றேன் என கொழும்பு பங்குச் சந்தையின் தலைவர் திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தையை சீரழித்த சிலரினால் எனக்கு தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது. நிதி அமைச்சின் ஊடாக எனது இராஜினாமா கடிதத்தை இன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பேன்.

பங்குச் சந்தையை சீர்குலைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் தொடர்ந்தும் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை.
சுயாதீனமாக செயற்படக் கூடிய ஓர் பின்னணி உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என திலக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.


 

வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே உண்மையான துரோகிகள்: விக்ரமபாகு



வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,


நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வோரே உண்மையான துரோகிகள் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
 

அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த நாட்டிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சென்னை டோசோ மாநாட்டில் உரையாற்றியதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

உண்மையான நாட்டின் துரோகிகள் சர்வதேச நாணய நிதியத்திற்கும் உலக வங்கிக்கும் ஆதரவாக செயற்படுவோ என்பதனை ஜனாதிபதிக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
சர்வதேச சக்திகளின் பகடைகாய்களாக செயற்படுவோரே இந்த நாட்டின் உண்மையான துரோகிகள்.

தற்போதைய அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றே டோசோ மாநாட்டில் வலியுறுத்தினேன். அனைத்து மக்களும் எதேச்சாதிகார அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும். ஈழம் என்ற சொல் தனி நாட்டை வெளிப்படுத்தவில்லை.
நான் தெற்கைச் சேர்ந்தவன் என ஜனாதிபதி தெரிவிப்பதனைப் போன்றே ஈழம் என்ற சொல்லை வடக்கு கிழக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய அரசாங்கத்தின் காரணமாகவே ஈழ தமிழர்கள் பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆட்சியாளர்களின் துரோகச் செயல்கள் பற்றி உலகின் எந்த நாட்டிலும் உரையாற்றத் தயார் என விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

நல்லூர் தேர் திருவிழாவில் கரைபுரண்டது பக்தர் கூட்டம்; தேரில் பவனி வந்தார் முருகன்


16.08.2012.

இலங்கையில் வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்றைய தினம் காலை 7 மணிக்கு நடைபெற்றது.
காலைப் பூசைகள் இடம்பெற்று வசந்தமண்டப பூசையை அடுத்து முருகப் பெருமான் தேருக்கு எழுந்தருளினார். முருகனிடம் அருளைப் பெற்றுக் கொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர் படை சூழ அழகிய வேலவன் தேரிலே வீதியுலா வந்தார


நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் பல்லாயிரம் அடியார்கள் பங்கேற்பு


16.08.2012
நல்லூர்க்கந்தன் ஆலய தேர்த்திருவிழாவில் யாழ். குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரம் அடியார்கள் கலந்துகொண்டார்கள்.

ஆலய வெளிவீதி சனசமுத்திரம் போல காட்சியளித்ததோடு ஆலய சுற்றாடல் முழுவதும் வாகனங்களினால் நிறைந்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொலிஸார் சீருடையிலும் சிவில் உடையிலும் கடமையில் ஈடுபட்டிருந்தார்கள். ஆலய சுற்றாடலில் இம்முறை முதல் தடவையாக மாணவர் படையணியினர் தண்ணீர் பந்தல் அமைத்து அடியவர்களுக்கு தாக சாந்தி அளித்தார்கள். காலை 7.15 மணியளவில் தேர் இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு வீதியுலா வர சுமார் இரண்டு மணித்தியாலங்கள் சென்றன.

தேரில் சுவாமி வெளிவீதியுலா வந்தவேளையில் பலாலி இராணுவ முகாமிலிருந்து வந்த உலங்கு வானூர்தியிலிருந்து பூக்களை மாரியாக தேரின் மீது தூவி படையினர் வழிபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அடியார்கள் அங்கப்பிரதட்சை, கற்பூரச்சட்டி, பாற்செம்பு, தூக்குக்காவடிகள் எடுத்து தமது நோர்த்திக்கடன்களை நிறைவேற்றினார்கள்.