வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012,
காங்கோ நாட்டின் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 60 தொழிலாளர்கள் பலியாயினர்.
காங்கோ நாட்டின் ஓரியன்டல் மாகாணத்தின் மம்பாசா பகுதியில் தங்கச் சுரங்கம் ஒன்று முறைக்கேடாக இயங்கி வந்தது.
நான்கு நாட்களுக்கு முன் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், சுரங்கத்தின் நுழைவாயில் இடிந்தது. இதனால் 100 மீட்டர் ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் புதையுண்டு இறந்தனர்.
இது குறித்து காங்கோ சுரங்க அமைச்சர் குறிப்பிடுகையில், இந்த விபத்தில் 60 பேர் இறந்துள்ளனர். உள்ளூர் போராளிகள் இந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், அரசு தரப்பில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்