வெள்ளிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2012, |
பீகார் மாநிலம் கபிலவஸ்துவில் உள்ள புத்தரின் எலும்புகளை இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளது. |
இந்தியாவின் ஒரு பகுதியில் ஆட்சி செய்த ஷாக்கிப் மன்னர் பரம்பரையின்
வழித்தோன்றல்களில் வந்தவர் கௌதம புத்தர். இவர் உலக வாழ்க்கையின் இன்ப, துன்பங்களை முற்றிலும் துறந்து கயா என்ற இடத்தில் உள்ள போதி மரத்தடியில் தவம் இருந்து ஞானம் பெற்றார். அச்சமயத்தில் இந்தியாவை ஆட்சி செய்த அசோக மன்னர் புத்தரின் நெறிகளைப் பின்பற்றியே ஆட்சி நடத்தினார். இவ்வாறு இந்தியாவிலிருந்து சீனா, இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் புத்த மதம் பரவியது. இலங்கையில் புத்த மதம் தேசிய மதமாகும். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே இந்தியாவிற்கு விஜயமளித்த போது பீகாரில் உள்ள புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு தருமாறு கேட்டுக்கொண்டார். இதனை ஏற்று புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு செய்தது. மத்திய பண்பாட்டு துறை அமைச்சர் செல்ஜா, இலங்கைக்கு சென்று புத்தரின் எலும்புகளை ஒப்படைக்கிறார். நாளை மறுநாள் இலங்கையில் தொடங்க உள்ள கண்காட்சியில் புத்தரின் எலும்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகிறது. இது பற்றி மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது, அண்டை நாடுகளின் இது போன்ற கோரிக்கைகளை இந்தியா வெகு அரிதாகவே நிறைவேற்றுகிறது. இலங்கையுடனான நமது உறவு எவ்வளவு நெருக்கமானது என்பதற்கு புத்தரின் எலும்புகளை இந்திய அமைச்சர் நேரில் சென்று வழங்குவது நல்ல உதாரணம் என்றார். புத்தரின் எலும்புகளை ஒப்படைப்பதற்கு இலங்கை தமிழர் இயக்கங்களின் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் செல்ஜா புத்தரின் எலும்புகளை ஒப்படைக்க இலங்கைக்கு செல்வதை ம.தி.மு.க. தலைவர் வைகோவும் எதிர்த்துள்ளார். |
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
புத்தரின் எலும்புகளை இலங்கைக்கு வழங்க இந்தியா முடிவு
வெள்ளி, ஆகஸ்ட் 17, 2012
தகவல்கள் புகைப்படங்கள்