நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் சைமன் ஸ்மிட்ஸ் எதிர்வரும் 14ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
டச்சு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என கொழும்பில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிர்வரும் 14ம் திகதி விஜயம் செய்யும் அமைச்சர் ஸ்மிட்ஸ், 17ம் திகதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்த விஜயம், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார சந்தை வாய்ப்புக்களை முதல்தரத்தில் கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களையும் தனியார் துறையின் அதிகாரிகளையும் ஸ்மிட்ஸ் தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.
இவ்வமைச்சரின் முக்கிய சந்திப்புக்கள் டச்சு நிறுவனங்களுடன் நடைபெறவுள்ளது. இந்த டச்சு நிறுவனங்கள் நீர்வளம் மற்றும் சுகாதாரத் துறையில் தங்களது நிபுணத்துவத்தை அளிக்கும் என நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.