siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 20 செப்டம்பர், 2012

தமிழர்களின் மாகாணத்தில் சிங்கள கூட்டமைப்பின் விருப்பத்தின்படி ஆட்சியொன்று அமைகின்றது

 
 
20.09.20.12.By.Rajah.இலங்கையின் கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களுடைய மாகாணம் என்றே கணிக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் கலந்த வாழும் கிராமங்களும் பெருமளவில் உண்டு. தமிழர்களும் முஸ்லிம்களும் “பிட்டும் தேங்காய்ப் பூவும்” போல வாழ்கின்றார்கள் என்றும் இலக்கிய நயம் கொண்ட பார்வையில் நோக்கப்படுகின்றார்கள்.
திருகோணமலை தொடக்கம் அம்பாறை வரை உள்ள வளி மண்டலத்தில் உள்ள காற்றில் தமிழின் அளவே எப்போதும் அலை மோதிக்கொண்டிருக்கும். இவ்வாறு பல தகவல்களை இங்கே நாம் குறிப்பிடலாம்.
மேலும் கிழக்கு மாகாணத்தில் மீன்பிடித் தொழிலிலோ அன்றி நெல் வேளாண்மை செய்யும் தொழிலிலோ, சிங்களவர்களை விட தமிழர்களும் முஸ்லிம்களுமே பெருமளவில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இதன் மூலம் நாம் அறியக்கூடியது என்னவென்றால் கிழக்கு மாகாணம் பொருளாதாரத் துறையிலும் உணவு சார்ந்த விடயத்திலும் தன்னிறைவு அடைவதற்கு அங்கு தமிழர்களும் முஸ்லிம்களுமே அதிகளவில் காரணமாக இருக்கின்றார்கள் என்பதே ஆகும்.
இவ்வாறாக தமிழின் சிறப்புக்களை பறைசாற்றும் கிழக்கு மாகாணத்தின் மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் அதன் அரசாங்கத்தை யார்? அமைப்பது என்றும் அந்த மாகாணத்தின் முதலமைச்சர் யார்? என்று எதிர்பார்த்து உலகமே காத்திருந்தது.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல, தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து பெற்ற ஆசனங்கள் மகிந்த தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பெற்ற ஆசனங்கள் அதிகமானவை.
இவ்வாறிருக்கையில் அங்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கையின் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவின் விருப்பத்திற்கு அமைய ஒரு தமிழ் பேசும் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகியுள்ளார்.
இந்த முடிவுகளின் படி கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் மக்களும் குறிப்பான தமிழத் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்த தமிழ் மக்களும் முஸ்லிம் காங்கிரசுக்கு தங்கள் வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
ஏமாற்றப்பட்டவர்கள் கிழக்கு மாகாணத்தின் தமிழ் முஸ்லிம் மக்களாக இருக்கையில் ஏமாற்றியவர் யார்? என்ற கேள்வி யாருக்கும் எழலாம். அதற்குரிய பதிலை நாம் இந்தப் பக்கத்தில் கூறத்தேவையில்லை.
மாகாணத்தின் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளவரின் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா. சம்பந்தன் அவர்கள் நேற்று தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் கிழக்கு மாகாண மக்களை ஏமாற்றியவரை நாம் ஊகித்துக்கொள்ள முடியும்.
இங்கே கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் மக்களும் அரசாங்கத்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீமினாலும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்றே நாம் கருதுகின்றோம்.
ஆமாம் அன்பர்களே! கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியானதும், அரசாங்கம் தனது வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்புச் செய்தது.
அதேபோல முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அமைச்சர் றவூப் ஹக்கீமும் தனது வேட்பாளர்களை நியமிக்க போவதாகவும் அறிவித்து தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாக கூறவேயில்லை.
அரசாங்கத்தை பற்றிய கவலை தமக்கு இல்லை என்ற தொனியில்தான் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உரையாற்றினார். சில கூட்டங்களில் உரையாற்றும் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் உரையாற்றினார்கள்.
இதை அவதானித்த முஸ்லிம் மக்கள் ஆயிரக்கணக்கானவர்கள், தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீம் தனது உறுப்பினர்களோடு தமிழ்த் தேசிய கூட்டமைப்போடுதான் சேர்ந்து கூட்டு அரசாங்கத்தை அமைப்பார், அரசாங்கத்தோடு எந்தச் சந்தர்ப்பத்திலும் சேரவே மாட்டார் என்று நம்பினார்கள்.
இவ்வாறான நம்பிக்கையை தனது முஸ்லிம் மக்களுக்கு ஊட்டி நின்ற ஹக்கீம் இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மாத்திரமின்றி, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களையும் ஏமாற்றிவிட்டார் என்றே கருதுகின்றோம்.
ஏனென்றால் தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீம் அரசாங்கத்தோடு சேர்ந்து ஆதரவை வழங்குவார் என்று அந்த முஸ்லிம் மக்கள் பலருக்கு தெரிந்திருந்தால்,அவர்கள் நிச்சயமாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கே வாக்களித்திருப்பார்கள். இதில் உண்மைகள் அடங்கியிருக்கின்றன.
இந்த விடயத்த்pல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு இரா சம்பந்தன் தெரிவித்த சில விடயங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவர் கூறுகின்றார் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளை பறித்துக்கொண்ட ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அரசாங்கத்தோடு எதனை அடிப்படையாக வைத்து பேரம் பேசினார் என்று புரியவிலலை.
முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை நாம் விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளோம் என்று நாம் அறிவித்தும் கூட, அதை அக்கறை கொண்டு கவனமெடுக்காமல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு முதலமைச்சர் பதவியை வி;ட்டுக் கொடுத்துள்ளார் ஹக்கீம்.
இதன் காரணமாக கட்சியை நம்பி தங்கள் வாக்குகளை அளித்த முஸ்லிம் மக்களை தனது சுயநலத்திற்காக ஏமாற்றிவிட்டார். எனினும் தனது தவறான முடிவின் விளைவை அவர் வெகு விரைவில் அனுபவிப்பார் என்று திரு இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.
இவ்வாறு பார்க்கும் போது அரசாங்கக் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை ஹக்கீம் விட்டுக்கொடுத்ததன் மூலம், அவர் சிங்களக் கூட்டமைப்பின் விருப்பதை பூர்த்தி செய்திருப்பது மாத்த்pரமன்றி தனது மத்திய அரசு மந்திரிப் பதவியையும் காப்பாற்றியுள்ளார் என்றே கூறவேண்டும்

எங்களது ஏவுகணை திட்டம் சீனாவுக்கு எதிரானது அல்ல: அமெரிக்கா

20.09.2012-By.Rajah.அமெரிக்க ஏவுகணை திட்டம் சீனாவுக்கு எதிரானது அல்ல என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜாய் கார்னி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் ஏவுகணை திட்டம் சீனாவுக்கு எதிரானது கிடையாது. அந்தப் பிராந்தியத்தில் வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலை சமாளிக்கவே ரேடார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணைகளை எந்த நாட்டையும் மிரட்டுவதற்காக பயன்படுத்தவில்லை. தற்காப்புக்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. சீனாவுடன் உறுதியான கூட்டு உறவையே அமெரிக்கா விரும்புகிறது.
இருநாடுகளுக்கு இடையே கவலையளிக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படும்.
அமெரிக்க பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்க மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான உறவை கடைபிடிக்கிறது.
பல்வேறு நிலைகளில் சீனாவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டுறவை மேம்படுத்துவது இருநாடுகளுக்கு பலனளிக்கும்.
அமெரிக்காவைப் பொருத்தமட்டில் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைக்கு எதிராக செயல்படும். இதனை உலக வர்த்தக மையத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம்.
ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில், சீனாவுடனான உறவை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சீனாவும், ஜப்பானும் தங்களது பிரச்னைகள் பற்றி நேரடியாக பேசித் தீர்வு காணவேண்டும் என்றார் கார்னி.

பின்லாந்து பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம்! தொடர்புடைய ஒருவர் கைது

 
 
20.09.2012.By.Rajah.ஹிக்கடுவ பிரதேசத்தில் பின்லாந்து பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு பேர் குறித்த பின்லாந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
ஹிக்கடுவ கோணபீனிவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்காயிரம் யூரோ பணம், இரண்டு லட்ச ரூபா பணம், செல்லிடப் பேசி, கடவுச் சீட்டு உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஏனைய சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

வாழ்க்கை முறையில் பின்நோக்கி தள்ளப்பட்டிருக்கும் ராணுவ உடை தயாரிப்பாளர்கள்

20.09.2012.By.Rajah.சுவிஸ் நாடாளுமன்றத்தில், ராணுவ உடைகளை தயாரிக்கும் 20000த்திற்கும் மேற்பட்ட மக்களின் அவல நிலை குறித்த கோரிக்கைகள் விவாதிக்க பட உள்ளன. ஆண்டு ஒன்றிற்கு 60 மில்லியன் மதிப்புள்ள ராணவ உடைகள் பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து வடிவமைக்கப்பட்டு அனுப்பப்படுகின்றது.
ஆனால் இவர்களின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை முறை மிகவும் மோசமாக இருப்பதாகவும், இவர்களின் வாழ்க்கை எவ்வித வளர்ச்சியும் இன்றி மிகவும் வரட்சியுடன் காணப்படுவதாக இக்குழுவின் தலைவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இவர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்நோங்கி இருக்கின்றது. பொருளாதாரத்திலும், கல்வியிலும் எவ்வித வளர்ச்சியுமின்றி இருக்கின்றனர். பணி செய்யும் இடம் சுகாதாரமின்றியும், முதலுதவி வசதியுமின்றியும் போதிய விளிப்புணர்வற்றும் இருக்கின்றது.
தங்களுக்கு ஓர் நல்ல தீர்வு வேண்டுமென இந்த மக்கள் சார்பாக இக்குழு தலைவர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்

சுவிஸ் வங்கிகள் திவாலாகும் வாய்ப்பு

20.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் திவாலாகும் நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுள்ளது. மிகவும் வலுவான பொருளாதாரம், வளம் செழிக்கும் மலைகளை கொண்ட கோடை வாழிடங்கள் என ஒரு தரப்பில் புகழப்படும் சுவிஸ், மற்றொரு பக்கம் அந்நாட்டு வங்கிகளுக்கு திவாலாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு அந்நாட்டு மக்களே காரணம் என கூறப்படுகின்றது.
சிறுவயதில் திருமணம், வேலையின்மை, விரைவில் விவாகரத்து பெறுதல் போன்றவற்றால் அந்நாட்டு மக்கள் வங்கிகளில் கடன், இன்சூரன்ஸ் வழியாக பணத்தை பெற்றுக்கொள்கின்றனர்.
ஆனால் இந்த பணத்தை குறிப்பிட்ட தவணைகளில் அவர்கள் செலுத்த மறுக்கிறார்கள். இதன் காரணமாக சுவிஸ் வங்கிகள் திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இது குறித்து The credit Reform association என்ற அமைப்பின் இயக்குனர் Claude Federer கூறியதாவது, சுவிஸில் இதுபோன்ற திவால் நிலைமை 2002ம் ஆண்டு ஏற்பட்டது. தற்போது 10 வருடங்களுக்கு பின்னர் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த ஓகஸ்ட் மாதம் முடிவில் 4,351 என்ற எண்ணிக்கை மதிப்பில் வங்கிகள் திவால் நிலையை எட்டியது.
இது இந்த வருடத்தின் முடிவில் 6, 527 ஆக மாறும். மேலும் கடந்த 2011ம் ஆண்டை விட தற்போது 13 சதவீதம் அளவிற்கு வங்கிகள் திவாலாகும் வாய்ப்பில் உள்ளது என தெரிவித்தார்

உலகின் மிக அதிக வயதுடைய மனிதன் 122 ஆவது வயதில் மரணம்

20.09.2012.By.Rajah.உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என ரஷ்ய மக்களால் உரிமை கோரப்படும் நபர் தனது 122 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை டஜெஸ்டானில் காலமாகி உள்ளார்.
இத்தகவலை லண்டனில் இருந்து வரும் செய்திகள் உறுதி செய்துள்ளன.

மகொமெட் லெபஷனோவ் எனப் படும் இந்த மனிதர் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் 1917 இல் லெனின் பொல்ஷெவிக் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் போது இவருக்கு வயது 27 எனவும் டெய்லி மெய்லில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இவரின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இவர் அல்கஹோல் மற்றும் டொபாக்கோ பாவிப்பதில்லை எனவும் பெண்களுடன் தொடர்பில்லாதவர் எனவும் கூறப்படுகின்றது.

இருந்த போதும் இவரது முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லாத காரணத்தால் இவர் இரு முறை மணம் முடித்தவர் எனவும் கூறப்படுகின்றது. ஒரு மரத் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் எழுதவும் படிக்கவும் தெரியாதவர். எனினும் முறையான ஒரு உணவுக் கொள்கையைப் பின்பற்றி வந்த இவரின் நாளாந்த உணவாக பழங்கள்,பால்,சோளம்,தயிர், காய்கறிகள் மற்றும் வெள்ளைப் பூடு என்பவை உண்ணபவர்.

இவரின் உறவுக் காரர்களால் இவரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது இவரின் ஆயுளை உறுதி செய்யும் ஏனைய பத்திரங்களை கையளிக்க முடியாத காரணத்தால் இவரின் நீண்ட ஆயுளுக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் சாதனையைப் பதிவு செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விடயமாகும்

கொங்கோவில் புதிய வகை குரங்கு இனம் கண்டுபிடிப்பு

20.09.2012.By.Rajah.ஆப்பிரிக்க நாடான கொங்கோவின் வனப் பகுதிகளில் புதிய வகை குரங்கினம் ஒன்று விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
'Cercopithecus Lomamiensis' என விஞ்ஞான ரீதியாகப் பெயரிடப்பட்ட இவ்வினம் கொங்கோ மக்களால் லெசுலா என அழைக்கப் படுகின்றது. கொங்கோவின் மத்தியில் உள்ள லொமாமி காடே இதன் தாயகமாகும். லெசுலா குரங்கினம் 28 வருடங்களுக்குள் கண்டு பிடிக்கப் பட்ட 2 ஆவது வகை குரங்கினம் ஆகும்.

விஞ்ஞானிகளுக்கும் வெளியுலகுக்கும் இந்த வகை குரங்கினம் புதிது என்ற போதும் கொங்கோ வேடர்களுக்கு இது நீண்ட காலம் பரிச்சயமான இனமாகும். இந்த லெசுலா குரங்கினம் வாழும் லொமாமி வனம் மிகப் பரந்ததும் அடர்த்தி மிக்கதும் ஆகும். கொங்கோவின் கிராமப் பகுதிகளில் இந்த வனம் அமைந்திருப்பதால் உயிரியலாளர்களால் மிகக் குறைந்தளவே ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இக் குரங்கினம் விஞ்ஞானிகளால் முதன் முறையாக கொங்கோவின் நகரம் ஒன்றில் வைத்து அதிர்ஷ்டவசமாகவே இனங்காணப் பட்டதாகக் கூறப் படுகின்றது. மேலும் இது புதிய வகைக் குரங்குதான் என உறுதிப் படுத்த 3 வருடங்கள் எடுத்துள்ளன.

லெசுலா மனிதர்களைப் போன்ற அகன்ற விழிகளை உடையது. இதன் முகம் இளஞ்சிவப்பு நிறமுடையதுடன் ஆந்தையைப் போன்று அமைந்துள்ளது மிகவும் அரிய வகை உயிரினமான லெசுலா கொங்கோ வேடர்களால் வேட்டையாடப்பட்டு அழிந்து வருவதைத் தடுப்பது தொடர்பாக தற்போது விஞ்ஞானிகள் கவலை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது

உலகின் மிகவும் அவலட்சணமான பெண் மற்றும் சாதனையாளர்


20.09.2012.By.Rajah'லிஷ்ஷி வெலாஷ்குவெஸ்' எனப்படும் உலகில் மிகவும் அவலட்சணமான பெண் உயர் பள்ளியில் படிக்கும் போது YouTube இல் தன்னைப் பற்றிய 8 செக்கன்களுக்கு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்.
(தற்போது இந்த வீடியோ தடை செய்யப் பட்டுள்ளது) இவர் பிறக்கும் போதே இக் குறைபாடு உடையவர் என்பதுடன் உலகில் இவரைத் தவிர இன்னமும் இரண்டு பேருக்கே இவ் வியாதி காணப்படுகின்றது எனவும் கூறப்படுகின்றது.

அதாவது இவருக்கு முகத்திலும் உடல் பகுதியிலும் தோலை இணைக்கும் தசைகள் இல்லை. அதனால் தோல்கள் தொங்கிக் கொண்டிருப்பதுடன் இவருக்கு சக்தியைச் சேமிக்கவோ, பாரத்தைத் தூக்கவோ முடியாது. இவரது உடலில் கொழுப்புச் சக்தியின் அளவு வெறும் பூச்சியம் என்பதுடன் இவரது எடை வெறும் 60 பவுண்ட்ஸ் ஆகும்.

YouTube இல் இவரது வீடியோவுக்கு கமெண்ட் பண்ணியிருக்கும் வாசகர்களில் சிலர் அவரை ஒரு monster எனவும் இப்படி வாழ்வதற்கு சாவது மேல் எனவும் தெரிவித்திருந்தனர். எனினும் இப் பெண்ணின் இலட்சியம் அசாதாரணமானது. இவருக்கு நான்கு இலக்குகள் உள்ளன.

1.அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் பேசும் வல்லமையைப் பெறுதல்
2.ஏதேனும் துறையில் ஒரு புத்தகமாவது வெளியிடல்
3.கல்லூரியில் ஏதேனும் பட்டம் பெறுதல்
4.தனக்கென ஒரு குடும்பம் மற்றும் வேலை பெறுதல்

தற்போது 23 வயதாகும் இப் பெண்மணி 7 வருடங்களாக சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்து வருவதுடன் 200 இற்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளார். மேலும் சான் மார்கோஸ் இல் உள்ள டெக்ஸாஸ் மாநில பல்கலைக் கழகத்தில் தகவல் தொடர்பாடல் பிரிவில் மூத்த உறுப்பினராக உள்ளார்.

இவர் வெளியிட்ட முதல் புத்தகம் 'Lizzie Beautiful'' 2010 இல் வெளி வந்தது. மேலும் இந்த மாதத் தொடக்கத்தில் இவரது இரண்டாவது புத்தகம் 'Be Beautiful, Be You,' வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இவர் CNN செய்தி ஸ்தாபனத்துக்கு பேட்டியளிக்கையில், என்னிடம் வரும் மக்களிடம் நான், 'என் அழகைப் பார்க்காதீர்கள்!. என்னிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று பாருங்கள்!' என்று சொல்வதற்கே நான் விரும்புகின்றேன். என்றார்.

வெளி உலகுக்கு வரவே தயக்கம் கொள்ளும் இத்தகைய குறைபாடுகள் மிக்க மனிதர்கள் மத்தியில் இப் பெண்மணி நிச்சயம் ஒரு சாதனையாளர் என்றே கூற வேண்டும்.\
இவற்றையும் காண தவறாதீர்கள்:

டாலர் நகரம் ஆங்கிலப் பள்ளியும் அரை லூசு பெற்றோர்களும்

20.092012.By.Rajah.நானும் சூழ்நிலைக் கைதிதான்!
மனைவியின் நிர்ப்பந்தம், மாமனாரின் அறிவுரை, சகோதரிகளின் எச்சரிக்கை இவை எல்லாம் போக அருகில் இருந்த அரசாங்க பள்ளியின் அலங்கோலம் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தான் குழந்தைகளை ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் சேர்த்தேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள்?
மனைவிக்கு ஆங்கில வழிக் கல்வியென்பது சமூக அந்தஸ்த்து. மாமனாரின் அக்கறை வேறு விதமானது. தொடக்கத்தில் ஆங்கில அறிவு குறையினால் நான் ஏற்றுமதி நிர்வாகத்தில் போராடிக்கொண்டுருப்பதை நேரிடையாக பார்த்த அனுபவம். "உன்னோட திமிரையெல்லாம் நீயே பத்திரமா வச்சுக்கடா? புள்ளைகளாவது உருப்படற மாதிரி வளர்த்து விட்டுடா?” இது என் சகோதரிகளின் வாழ்த்தா வசவா எனப்புரிய முடியாத பேச்சு. வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் என் அடிப்படை கருத்து மட்டும் மாறவில்லை?
தாய் மொழியில் அடிப்படை அறிவு இல்லாமல் எப்படி ஆங்கிலத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்? எந்த மொழியானாலும் அடிப்படைச் சிந்தனை தாய்மொழியில் தானே இருக்க வேண்டும்? ஆனால் ஒவ்வொருவரின் ஆலோசனைகளையும் கேட்டு குழந்தைகளின் பள்ளிக்கூட வசதிக்காக இப்போது அவினாசி சாலையில் உள்ள பெரியார் காலணி பக்கம் வீடு பார்த்து வந்திருந்தேன்.
இப்போது மாறி வந்த நிறுவனமும் வீட்டுக்கு அருகே இருந்தது.
நான் முதலாளியிடம் பள்ளி குறித்துக் கேட்ட போது ” நீங்கள் எதிர்பார்க்கும் தரம் என்றால் உங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள “குட்டி சாம்ராஜ்யம் ” பெயர் உள்ள பள்ளி தான் சரியாக இருக்கும் ” என்றார். வீட்டுக்கு மிக அருகில் இருந்த காரணத்தால் அங்கேயே கொண்டு போய் சேர்க்கலாம் என்று முடிவுக்கு வந்திருந்தேன். அங்கு தமிழ்மொழிக் கல்வி இருந்ததும் அவ்வாறான முடிவுக்கான மற்றொரு காரணம்.
பள்ளிக்கு குழந்தைகளுடன் சென்ற போது அங்கு வரிசையாய நின்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து பிரமிப்பாய் இருந்தது.
ஓரு ஏற்றுமதி நிறுவனம் சம்பாரிக்கும் ஒரு வருட லாபத்தையையும், ஒரு மாத அட்மிஷனில் பார்த்துவிடும் இந்த பாவாத்மாக்களுக்கு கருட புராணம் என்ன தண்டனை எழுதி வைத்திருக்கும்? யோசித்துக் கொண்டே அழைப்புக்காக காத்திருந்தேன்.
என்னுடைய முறை வந்ததும் மிக பவ்யமாக பள்ளியை நடத்திக் கொண்டுருக்கும் பெண்மணி முன்னால் அமர்ந்தோம். காரணம் என்னுடைய முதலாளி நான் கிளம்பும்போதே “உங்கள் சமூக அக்கறையை உள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். அந்த பொம்பள ஆம்பள மாதிரி தான் பேசுவார். அமைதியாய் இருங்கள். அவர் என்னுடைய பள்ளித்தோழி. என் பெயர் சொன்னாலே சீட் கொடுத்துவிடுவார்” என எச்சரித்து அனுப்பியிருந்தார். ஆனால் ஒவ்வொன்றும் தலைகீழாகவே நடந்தது.
தொடக்கத்தில் எங்களைப்பற்றி எதுவும் கேட்காமல் மடிக்கணினி மூலம் சில அனிமேஷன் வகையான பாடல் காட்சிகளை காட்டிவிட்டு அவர் நிறுவனத்தின் பிரஸ்தாபங்களை விவரிக்கத் தொடங்கினார். அமைதியாய் இருந்தோம். என் இரண்டு குழந்தைகளும் மலங்க மலங்க முழித்துக்கொண்டுருந்தனர். அவர் எல்லாவற்றையும் பேசி முடிந்ததும் இயல்பான ஆங்கிலத்தில் என்னுடைய பணிபுரியும் நிறுவனத்தைப்பற்றியும், முதலாளி குறித்தும் தெரியப் படுத்தினேன்.
” நீங்கள் சிபாரிசுடன் வந்து விட்டால் பெரிய கொம்பா? நான் இங்கு எந்த சிபாரிசையும் அனுமதிப்பும் இல்லை. திறமை மட்டும் தான் முக்கியம் ” என்று சப்தமாக பேசிவிட்டு என்னைப்பற்றி, என் கல்வித்தகுதி, சம்பளம், பின்புலம் என சகலத்தையும் கேட்டு விட்டு மணைவி பக்கம் திரும்பினார்.
எதற்குமே கஷ்டப்படாமல் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு என் சகியாய் என்னை சகித்துக் கொண்டு வாழ்பவளால் ஓர் அளவிற்கு மேல் அவரை சமாளிக்க முடியவில்லை.. இறுதியாக ” இருவரில் ஒருவரை மட்டும் சேர்த்துக்கொள்கிறேன். இரண்டாவது குழந்தை இன்னும் ஆக்டிவாக வந்த பிறகு கூட்டி வாருங்கள்”. என்றார். அவர் சொன்ன ஒரு குழந்தைக்கான கட்டணம் மலைப்பாய் இருந்தது. தினந்தோறும் விளையாடி விட்டு வருவதற்கு மற்ற கட்டணங்கள் தவிர்த்து சிறப்பு அன்பளிப்பாக ஒருவருக்கு இருபதாயிரம் கேட்டார்.
எனக்கு தொடக்கம் முதல் எழுந்த கேள்விகளும், கோபமும் மொத்தமாக விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் என்னுடைய வேகம் முதலாளிக்குத் தெரிந்தால் சிக்கலாகி விடும் என்று அமைதியாய் வெளியே வந்தோம்.
என் முதலாளியிடம் நான் பள்ளியில் நடந்த எதையும் சொல்லவில்லை. என்னுடன் வேலை செய்து கொண்டிருந்த நண்பர் சந்திரசேகர் கொடுத்த அறிவுரையின் பேரில் அருகில் உள்ள மற்றொரு அறக்கட்டளை சார்ந்த பள்ளிக்கு சென்ற போது அங்கு சேர்க்கை முடிந்து இருந்தது.
சந்திரசேகர் விருப்பத்தின்படி, பள்ளி அறையை பார்க்கலாம் என்று உள்ளே சென்றோம். மிக மிக அற்புதமாக இருந்தது. ப்ரிகேஜி நடக்கும் அறை முழுக்க விளையாட்டு சாமான்கள், பல நிறத்தில் எழுத்துக்களை விளையாட்டு வகைகளில் எழுதி வைத்திருந்தார்கள்.
வெளியே வந்த போது பள்ளி அலுவலக நிர்வாகி எதிரே வர, நண்பரின் பேச்சுத் திறமையால் விண்ணப்படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தேன். குழந்தைகள் விளையாட நல்ல மைதானம், சுற்றி வர கிளிகளுக்கு என்று ஒரு கூண்டு. எனக்கு ஒரு கிராமத்துக்குள் நுழைந்தது போலவேயிருந்தது. முதல் முன்று பாலர்பள்ளிக்கென்று வகுப்பறைகளை தனியாக வைத்திருந்தார்கள். எல்லாவிதத்திலும் எனக்கு சந்தோஷமாய் இருந்தது. பள்ளிக்கட்டணம் கட்டிய போது மலைப்பாகத் தெரியவில்லை. காரணம் குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் போதும் என்ற மனோநிலை காரணமாக இருந்துருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் விபரம் தெரிந்து மற்ற பள்ளிகளின் கட்டணங்கள் ஒப்பிடும் போது இந்த பள்ளியின் கட்டணம் நியாயமானதாகவே இருந்தது.
பெற்றோர் கூட்டம் என்று ஒரு வருடத்திற்கு ஒரு முறை கூட்டுவார்கள். என் மனைவியின் பயம் அங்கு தான் தொடங்கும். ஆனால் நான் தெளிவாகவே இருப்பேன். வீட்டை விட்டு கிளம்பும் போதே ” என்னை எந்த விஷயத்திலும் எதிர்பார்க்காதே? என்று சொல்லி விடுவேன். வகுப்பு ஆசிரியர்களிடம் தலையை காட்டிவிட்டு வெளியே வந்து படிக்க வேண்டிய புத்தகங்களுடன் அங்குள்ள பூங்காவில் உட்கார்ந்திருப்பேன்.
எப்போதும் வீட்டைவிட்டு வெளியே குழந்தைகளுடன் செல்லும் போது தான் என்னுடைய நடைமுறை வாழ்க்கை கல்வி தொடங்கும். காரில் முன் பகுதியில் ஒருவரும் பின் பகுதியிலுமாய் நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டு வரும், அவர்களின் ஆட்டங்கள் முடிந்த பிறகு என் பாடங்களைத் தொடங்குவேன்.
அவர்கள் பள்ளியில் படித்த ஆங்கில எண்களை தமிழில் கேட்பேன். படித்த வார்த்தைகளின் தமிழ் அர்த்தம், உறவுகளின் பெயர்கள், அவர்களை அழைக்க வேண்டிய முறைகள், அதற்குண்டான தமிழ் ஆங்கில வார்த்தைகள், ரைம்ஸின் தெளிவான ஆங்கில உச்சரிப்பு என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருப்பேன்.
ஒருவர் திடீர் என்று திண்பண்டத்தில் கவனத்தை மாற்ற அடுத்தவர் குடிக்கும் தண்ணீரை நினைவு படுத்த இடையில் தடைபட்டுவிடும். நாங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு போய்ச் சேருவதற்குள் முடிந்த வரை அவர்களின் தற்போதைய நிலை குறித்து மனதிற்குள் குறித்துக் கொண்டுவிடுவேன். வீட்டுக்குள் வந்ததும் மனைவியுடன் பேசினால், அது அவரின் அழுகையில் தான் முடியும்.
எனக்கு தமிழ்மொழியை மறந்து விடுவார்களோ என்ற கவலை? ஆனால் மனைவியோ வேறுவிதமாக வாதாடுவார். “ படித்து முடித்து உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் இது போல் தெளிவான தமிழ் அர்த்தம் தெரிந்து தான் உயர முடிந்ததா? ” என்ற வாதத்தை அழுத்தமாக எடுத்து வைப்பார்.
இந்த ஏற்றுமதி சார்ந்த தொழில் வாழ்க்கையில் அமெரிக்கரை தவிர அனைத்து நாட்டு இறக்குமதியாளருடனும் பழகியுள்ளேன். சிலரின் எரிச்சல் மட்டும் பரிசாகக் கிடைத்திருக்கிறது. சிலர் எதிர்பார்க்கும் பணம் தொடர்பான அவர்களின் நம்பிக்கை வார்த்தைகள் நமக்கு ஒத்துவராது. சிலர் திருப்பூருக்கு வராமலேயே மின் அஞ்சல் வழியாக மட்டுமே தொடர்பில் இருப்பார்கள். மிக நெருக்கமாக பழகிய இறக்குமதியாளர்கள் தொழிலைத் தாண்டி தனிப்பட்ட முறையில் நட்பாக இருப்பார்கள். அவர்களுடன் குழந்தைகளின் அன்றாட குறும்புகளை ஆன் லைனில் அரட்டை மூலம் பகிர்ந்து கொள்வதுண்டு. ஆனால் இஸ்ரேலில் இருந்து வந்த இறக்குமதியாளர் கொடுத்து விட்டுச் சென்ற பாதிப்பு என் வாழ்க்கைச் சிந்தனை சரிதான் என்ற நம்பிக்கையளித்தது.
இஸ்ரேல் இறக்குமதியாளரை இப்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து ஆறுமாதமாக துரத்திக்கொண்டிருந்தேன்.. ” திருப்பூர்க்கு வருகிறேன். என்னை வந்து சந்தியுங்கள் ” என்று அவரிடமிருந்து மின் அஞ்சல் வந்தது. அவர் குறிப்பிட்டு இருந்த வேலன் நட்சத்திர விடுதியின் வரவேற்பரையில் நானும் முதலாளியும் அவர் குறிப்பிட்டுருந்த நாளில் காத்திருந்தோம். அந்த நவீன வரவேற்பரையில் ஆறு பேர்கள் அங்கு காத்திருந்தனர். அதில் இரண்டு தரகர்கள். எனக்கு குழப்பமாய் இருந்தது. இவர்கள் நுழைந்து விட்டால் நாம் எப்படி?
ஆனால் முதல் அழைப்பே எனது பெயராக இருந்ததால் எனது தைரியம் அதிகமானது. தொலைபேசி அழைப்புக் குரலுக்கும் நேரிடையான உருவத்துக்கும் முற்றிலும் வித்யாசமாய் இருந்தார். ஆறரை அடி உயரம். அவர் அருகே செல்வதற்குள் எழுந்து வந்து கை குலுக்கி விட்டு நான் அனுப்பியிருந்த அனைத்து மின் அஞ்சலின் நகல்களை பார்த்து முடித்து விட்டு தொழில் ரீதியான உரையாடலுக்கு வந்தார். உரையாடலை தொடங்குவதற்கு முன் என் இரண்டு கைகளை கேட்டு வாங்கிக்கொண்டு, உள்ளங்கையில் ஒரு உலோகம் போன்ற ஒரு பொருளை என் உள்ளங்களையில் வைத்தார். கை போன்ற வடிவமான அந்த உலோகத்தில் ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு கட்டளை வடிவில் இருந்தது. அதை என் உள்ளங்கையில் அழுத்தி வைத்துக் கொண்டு சத்திய பிரமாணம் போல் என்னைச் சொல்லச் சொன்னார்.
” இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்ற மாட்டோம். தரத்தில் உறுதியாய் இருப்போம். நமது நட்பையும், நம்முடைய தொழில் உறவையும் வளர்க்க உதவியாய் இருக்கும் நம்முடைய இறைவனுக்கு நன்றியாய் இருப்போம்” எனக்கு வியர்த்து விட்டது. அதற்குப்பிறகு அவர் தங்கியிருந்த நாட்களில் அவரை சந்திக்கும் போது அவர் ஹிப்ரூ மொழியில் உள்ள புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பார். அவர் பேச்சின் மூலம் இஸ்ரேல் மக்களின் கலாச்சாரம், அவர்களின் மதம் குறித்த அக்கறை, போன்ற பலவற்றையும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சுருக்கமாகச் சொன்னால் தொழில் முக்கியம். நம் பராம்பரியம், கலாச்சாரம், தாய்மொழிப்பற்று போன்றவை ரொம்பவே முக்கியம் என்பதை உணர்ந்து கொண்டேன்.
இவரை சந்தித்த இரண்டு நாட்கள் கழித்து தான் குழந்தைகளின் பள்ளியில் இருந்து அந்த பெற்றோர் கூட்ட அழைப்பு வந்தது. பெற்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் உள்ளேயிருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். மனைவி உள்ளே நுழைய நான் தப்பித்து வெளியே வந்து கொண்டிருந்த போது என் குழந்தைகளின் வகுப்பு ஆசிரியை வெளியே வந்து கொண்டிருந்த என் கைகளை பிடித்து நிறுத்தினார்.
“நானும் வருடா வருடம் பார்க்கின்றேன். ஓடிப்போய் விடுகிறீர்களே? என்னை எத்தனை கேள்விகள் கேட்கிறீர்கள்? இங்கு உட்கார்ந்து கேட்கலாமே? என்று இழுத்துச் சென்று அமர வைத்து விட்டார். வேறு வழியில்லை? அவரைச் சொல்லியும் குற்றமில்லை? ஒவ்வொரு நாளும் குழந்தைகளை பள்ளி முடிந்து நான் அழைக்கச்செல்லும் போது அங்கு நடக்கும் அத்தனை சமூக முரண்பாடுகளை கண்டு ரசிக்கும்பொருட்டு கூட்டம் குறைந்ததும் போய் அழைத்து வருவேன். குழந்தைகளை அழைத்துக்கொண்டு செல்ல வரும் பெற்றோர்களின் வாகனங்கள் பள்ளியின் உள்ளே நுழையும் போதே டாப் கியரில் தான் வருவார்கள். பள்ளியின் நுழைவு வாயிலில் இருக்கும் வயதான நபரால் ஒரு அளவிற்கு மேல் கத்த முடியாது.
ஒவ்வொருவரும் அடுத்தவர்கள் தங்களின் வாகனங்களை எளிதில் எடுத்துவிட முடியாதபடி அலங்கோலமாய் நிறுத்துவார்கள். மணிச்சத்தம் கேட்டதும் விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள் மற்றவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்ற பிறகு வகுப்பு ஆசிரியை அருகே சென்று வணக்கம் சொல்வதுண்டு. சற்று ஆசவாசமாய் நிற்கும் வகுப்பு ஆசிரியை என்னைக் கண்டதும் சிரித்து விடுவார். மிக மிக நல்ல ஜீவன். வாங்கிக்கொண்டிருக்கும் நம்ப முடியாத மிகக் குறைந்த சம்பளத்திற்கு அர்பணிப்புடன் உழைத்துக் கொண்டிருப்பவர்.
இரண்டாம் கட்டத் தேர்வு முடிந்து மதிப்பெண் அட்டையை எனக்கு கொடுப்பதற்கு முன்னால் உங்கள் பெண் வகுப்பில் முதல் ரேங்க் எடுத்துள்ளார் என்றார். ” ஏற்கனவே எடுத்த முதல் ரேங்க் குழந்தை இப்போ என்ன ரேங்க் எடுத்துள்ளார்?” என்று கேட்க சிரித்துக் கொண்டே நகர்ந்து விட்டார்.
எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் ரேங்க் குறித்து நான் அக்கறைபட்டுக் கொள்வதே இல்லை. சற்று மிரட்டல் கலந்த அன்பான அறிவுரையை மட்டும் அவர்களிடம் இயல்பாக சொல்லி வைப்பேன். என்னைப் பொறுத்தவரையில் ஐந்தாவது படிக்கும் வரையில் அவர்கள் குழந்தைகள். ஆறாவது முதல் தான் அவர்களின் அத்தனை சமூகப்பொறுப்பும் தொடர்ந்து பத்தாவது படிக்கும் போது ஒரு அளவில் வந்து முடிகின்றது. மேற்கொண்டு இரண்டு வருடங்கள் தான் அவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் மற்றும் அவசியம் எனக் கருதுபவன்.
ஐந்தாவது படிக்கும் வரையிலும் அவர்களின் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகள், அதிலும் புரிந்து படிக்க வேண்டியதன் முக்கியத்துவம், உடை குறித்து, குடும்ப சூழ்நிலை குறித்து, சுகாதார பழக்கவழக்கங்கள் குறித்து உணர்த்தி விட்டாலே அவர்களின் சுய சார்பு சிந்தனை கூர்படுத்தப்பட்டு விடும். இதைத்தான் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பதில் ஆர்வமாய் இருந்தேன்.
பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடக்கப் போகும் அறையின் உள்ளே சென்று அமர்ந்தேன். அறையின் உள்ளே முன்னூறு பேர்களாவது இருப்பார்கள். சந்தைக்கடையை விட சத்தம் அதிகமாக இருந்தது. பள்ளியின் தாளாளர் வந்தார். அருகே நிர்வாகத்தை நிர்வாகித்து வரும் அவர் மனைவி. இரு பக்கமும் மற்ற வகுப்பு ஆசிரியைகள் வந்து அமர்ந்தனர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய தாளாளர் “ சென்ற வருடம் செய்த சாதனைகள் குறித்து விளக்கி விட்டு, நடைமுறையில் கொண்டு வந்துள்ள மாற்றங்களை சொல்லி விட்டு மேற்கொண்டு உங்கள் ஆலோசனைகளைச் சொன்னால் சிறப்பானதை நடைமுறைபடுத்த வசதியாக இருக்கும் ” என்றார்.
முதல் நபர் எழுந்தவர் ” வீட்டில் எப்போது பார்த்தாலும் ஜெட்எக்ஸ் பார்த்துக்கொண்டே இருக்கிறான். நீங்கள் தான் சொல்லி கண்டிக்க வேண்டும்” என்றார். வேறு சிலரும் அதையே ஆமோதித்தார்கள். விரிவாக அது குறித்து ஐந்து நிமிடங்கள் சம்மந்தப்பட்டவர்கள் பேசிய பிறகு புரிந்தது பையன் உள்ளே நுழையும் போது பேசியவரின் மாமியார் சீரியல் பார்த்துக் கொண்டுருப்பாராம். பையன் உள்ளே நுழைந்ததும் ரிமோட்டில் கை வைத்து விட ஏக களேபரங்கள். மாமியார் புலம்பல் ஒரு பக்கம். பையன் அட்டகாசம் ஒரு பக்கம். இவர் அலுவலக டென்ஷனை காட்டி விட்டு சாப்பிடாமலேயே சென்று விடுவார்? என்னவொரு சமூகப்பிரச்சனை?
குழந்தைகள் வீட்டுக்குள் வந்ததும் எந்திரமாய் மாறி படிக்க உட்கார்ந்து விட வேண்டும். பொதிமூட்டையாய் சுமந்து வந்த புத்தகசுமை தந்த உடல்வலி ஒரு பக்கம். வயதுக்கு மீறிய பாடம் என்ற பெயரில் ஆங்கில மொழி மறுபக்கம். வேறு என்ன செய்ய முடியும்?.
அடுத்தவர் எழுந்தார். “மற்ற எல்லா பள்ளியிலும் ஆங்கிலத்திலேயே சகஜமாக பேச உரையாட வைக்கின்றார்கள். ஆனால் இங்கு ஆங்கிலவழிக்கல்வி தான் பேரே ஒழிய எங்களால் பெருமைபட்டுக்கொள்ள முடியவில்லை? “ என்றார்.
பாருங்கள் பேசும் மொழியில் பெருமை சிறுமை? இவர் பேசி முடித்த போது என் குழந்தைகளின் ஆசிரியை என்னைப் பார்த்து சிரித்தார்.
மம்மி என்றால் பிணம் என்ற அர்த்தத்தை எத்தனை பேர்கள் புரிந்துள்ளார்கள். ஒரு தடவை என்னைக் கண்டதும் ஆசிரியை உள்ளே இருந்த குழந்தைகளிடம் ” உங்க டாடி வந்துட்டாங்க? என்று தயார் படுத்திய போது குழந்தைகளை தனியாக அமரவைத்து விட்டு ” ஆங்கில வழிக்கல்வி என்பது அவர்களின் பாடத்துக்கு மட்டும் தான். எங்கள் உறவுகளை அழைக்க அல்ல”.: என்றதும் பதில் பேசாமல் உள்ளே வேகமாக சென்று விட்டார்.
அடுத்தவர் பேச எழுந்தார். “ நீங்கள் ஏன் ப்ரென்ச்,ஜெர்மன் சொல்லிக்கொடுக்க மாட்றீங்க?” அவரை வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தேன். மேலும் தொடர்ந்து கொண்டுருந்த விவாதங்கள் என்னை கிட்டத்தட்ட நாம் இங்கிலாந்தில் இருக்கிறோமா? என்று நம்பும் அளவிற்கு இழுத்துக் கொண்டு சென்றது.
ஆண்டவன் அந்த இடத்தில் ஒருவரை என் சார்பாளனாக கொண்டு வந்து நிறுத்தியிருந்தார். குட்டையாக இருந்தார். ஆனால் அவரின் குரல் அந்த அறை முழுவதும் கேட்டது. அவர் தொடங்கிய போது சலசலத்த மற்ற குரல்களையும் அவர் குரலின் சக்தி தடுத்து நிசப்தமாக மாற்றியது.
” இங்குள்ள அனைவரின் பிரச்சனை முதல் வகுப்பு வருவதற்குள் தங்களுடைய குழந்தைகள் தெளிவான ஆங்கிலத்தில் பேசி விட வேண்டும். அத்துடன் மற்ற மொழிகள் பேசினால் இன்னும் சிறப்பு. அவரவர் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் வகுப்பாசிரியர்கள் வீட்டுக்கு வந்து கவனித்துக் கொண்டால் நல்லது என்பதாகத்தான் பேசினார்கள். ஜனநாயகம் என்ற பெயரில் நாம் நம்முடைய அடிப்படை கடமையை மறந்து விட்டு யோசிப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. நம்முடைய மொத்த பிரச்சனைகளையையும் குழந்தைகள் படிக்கும் ஆங்கிலம் ஒன்றே தீர்த்து விடும் என்பதில் உறுதியாய் இருக்கின்றோம். இது போன்ற பிரச்சனைகளை நாம் அணைவரும் நம் குடும்பம் சார்ந்ததாகவே அல்லது நம்முடைய குழந்தைகள் சார்பாக கருதிக்கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. குழந்தைகள் அணைவரும் உடனடியாக பில்கேட்ஸ் உடன் வணிக ஓப்பந்தம் போட வேண்டிய அவசியத்தில் இருப்பது போல் பறந்து கொண்டுருக்கிறீர்கள். இந்தப்பள்ளியில் நடக்கும் தேசியக் கொடி மரியாதையை எத்தனை பேர்கள் பார்த்து இருக்கீங்க.? அப்போது உறுதிமொழி வாசிக்கும் குழந்தைகளை நீங்கள் எத்தனை பேர்கள் கவனித்து இருக்கீங்க? அந்த குழந்தைகள் தமிழில் சொல்லும் போது வரும் கம்பீரமான வார்த்தைகள் ஆங்கிலத்தில் மறுபடியும் அதையே சொல்லும் போது ஏன் தடுமாறுகிறார்கள்? இதற்காக வகுப்பாசிரியர் தேர்ந்தெடுத்த முதன்மை மாணவர்களுக்கே இது போன்ற பிரச்சனைகள் என்றால் கல்வியில் சராசரி மாணவர்களின் நிலைமை எப்படி இருக்கும்? " எனக் கெள்விகளைத் தொடுத்தவர் சற்று இடைநிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்.
"நம்முடைய குழந்தைகள் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று நினைப்பவர்களில் எத்தனை பேர்களுக்கு முழுமையாக ஆங்கிலம் பேசத் தெரியும்? நாம் அணைவரும் நம்முடைய குழந்தைகளுடன் தமிழில் தான் பேசிக் கொண்டுருக்கிறோம். ஒன்றாவது படிக்கும் குழந்தை ஜெர்மன் மொழி படித்து என்ன சாதிக்க முடியும்? தங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்களிடம் ஆங்கிலத்தில் பேசி தன்னுடைய புலமையை காட்ட வாய்ப்புள்ளதா? வருகின்றவர்களுக்கு ஆங்கிலம் தெரியுமா? என்னுடைய குழந்தை இந்திரா நூயியாகவோ, நாராயண மூர்த்தியாகவோ, பில்கேட்ஸ் ஆகவோ வர விரும்பவில்லை. எங்கள் குழந்தைகளாகவேத்தான் வளர்க்க விரும்புகிறோம். மொழி புலமை என்பது என்ன தான் கற்றுக்கொடுத்தாலும், நீங்கள் எதிர்பார்க்கும் சரளம் வந்து விடாது. அதற்கான சூழ்நிலை அந்த குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். ஆங்கிலக்கல்வி மூலம் தான் நம் குழந்தைகள் வாழ்வில் ஜெயிக்க முடியும் என்றால் இன்று அமெரிக்காவில் உள்ள அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களும் சர்ச் பார்க் கான்வென்ட் போன்ற பள்ளியில் இருந்து தானே போயிருக்க வேண்டும்? நம்முடைய வாழ்க்கை சூழ்நிலைகள் ஒவ்வொன்றும் இயல்பாகவே குழந்தைகளுக்கு பல புதிய விசயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டேதான் இருக்கும். நீங்கள் அந்த சூழ்நிலையை அவர்களுக்கு உருவாக்கி, உங்கள் ஒத்துழைப்பையும் அளித்தாலே போதுமானது. இங்கு குழந்தைகளின் ஓழுக்கம் பற்றி எவருமே பேசவில்லை. தலை இல்லாத முண்டமாய்த்தான் உங்கள் குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா? உங்கள் குடும்ப சூழ்நிலையை அவர்களுக்கு புரிய வையுங்கள். அவர்களின் விருப்பு வெறுப்புகளை காது கொடுத்து கேளுங்கள். அவர்களை உங்கள் பொருளாதார சவால் வாழ்க்கையில் பங்கெடுத்துக்கொள்ள வையுங்கள்." அந்த இடத்தை உண்மையின் குரல் ஆகர்சிப்பதாக உணந்து கொண்டிருந்தேன்.
"உங்களின் ஒரு குழந்தை உங்கள் வீட்டில் செய்கின்ற பிரச்சனைகளை கண்டு அலறுகின்ற நீங்கள் முப்பது நாற்பது பேர்களை வைத்து ஒரு நாள் முழுக்க பாடத்தையும் பண்பையும் போதிக்க வேண்டிய ஆசிரியர்களைப் பற்றி எப்போது புரிந்து கொள்ளப் போகின்றீர்கள்? என் குழந்தை இவர் போல ஆக வேண்டுமென்று உங்களால் சாதிக்க முடியாததை உங்கள் குழந்தைகள் மேல் ஏன் திணிக்கீறீர்கள்? இன்று பணம் கட்டி படிக்க வைக்கும் உங்களின் வாழ்க்கை திடீரென்று வேறொரு சூழலில் மாறும் போது என்ன செய்யப் போறீங்க? அப்போது உருவாகும் உங்களின் சராசரி வாழ்க்கைக்கு அவனை கொண்டு வர முடியும் என்று நம்புகிறீர்களா? நீங்கள் குழந்தைகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை வரும் பட்சத்தில் மிகப் பெரிய தலைமுறை இடைவெளி உருவாகாதா? இத்தனை போட்டி நிறைந்த உலகத்தில் ஒழுக்கமாக வளர்ந்த குழந்தைகள் மட்டுமே உங்கள் அருகில் இருந்து கவனிக்க முயற்சிப்பார்கள். இல்லையென்றால் வெளிநாட்டில் வேலையில் இருக்கும் குழந்தைகளை நீங்கள் கணினி மூலம் மட்டுமே கண்டு கொள்ள முடியும். நீங்கள் ஏக்கத்தை மட்டுமே சுமந்து எஞ்சிய நாளை கழிக்க விருப்பமா? " அவரது குரலைத் தவிர வேறெதுவும் அங்கு கேட்கவில்லை.
" பணம் முக்கியம், பணத்தை சம்பாரிக்க படிப்பு அதை விட முக்கியம். போட்டியில் முந்திவர மொழி அறிவு மொத்தத்தில் முக்கியம், இதையெல்லாம் விட சுப்பையா மகனாக முனியாண்டி மகனாக அவரவரின் குடும்ப பாரம்பரிய பெருமையும் முக்கியமல்லவா. நம் நாட்டுக்கு விசுவாசமான ஒரு நல்ல குடிமகனாக அவர்களை வளர்க்க உங்களுக்கு விருப்பமில்லையா? மற்ற நாடுகளை ஒப்பிட்டு பேசிய நீங்கள் ஏன் அந்தந்த நாடுகளில் உள்ளது போல் கட்டாய ராணுவ பயிற்சிக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்கிறீங்க. உங்கள் ஒவ்வொருவரின் விருப்பங்களையையும் இந்த பள்ளி நிர்வாகம் செயற்படுத்த நினைத்தால் இது எங்கே போய் முடியும்? சராசரி குடும்பத்திலிருந்து வந்து படிக்கும் மாணவனாய் மேலேறி வர முடியுமா?."
உண்மைகளைத் தொடர்ந்து பேசிய அம்மனிதரை, கட்டிப்பிடித்து பாராட்ட வேண்டுமென எண்ணியவாறு பள்ளியின் நுழைவு வாயிலின் அருகே நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக போய்க் கொண்டிருந்த என் பள்ளித் தோழன் முருகேசனை நீண்ட நாளைக்குப் பிறகு சந்தித்தேன். நான் பல நிறுவனங்கள் மாறினாலும் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வோடு போராடிக் கொண்டிருந்தாலும் என்னைப் பொறுத்தவரையிலும் முருகேசன் ரொம்பவே வித்யாசமானவன். அவனின் முதலாளி ஆறுமுகம் கதை அதைவிட சுவராஸ்யமானது

இந்திய டென்னிஸ் சம்மேளனம் மீது மகேஷ் பூபதி கடும் அதிருப்தி

20.09.2012.By.Rajah.
இந்திய டென்னிஸ் சம்மேளனம் மீது பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி சராமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அண்மையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாட சக வீரர்கள் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்திருந்தனர். இதனால், அவர்களுக்கு டேவிஸ் கோப்பை உட்பட அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்தவொரு இந்தியா சார்பிலான போட்டியிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்னிஸ் சங்கம் சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாக மகேஷ் பூபதி குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் அனில் கண்ணாவே இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். அவர் ஒற்றை மனிதராக டென்னிஸ் சம்மேளனத்தை தவறான வழியில் வழிநடத்துகிறார்.

இது எதிர்கால இந்திய டென்னிஸ் வீரர்களுக்கு தீங்கானது. வீரர்களிடையே பிளவுகளை உண்டாக்கும் அவரது பிரித்தாளும் கொள்கை பற்றி தெரியாமல் இந்த பிரச்சினையில் எனக்கும் பயசுக்கும் மோதல் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது துரதிஷ்டவசமானது. என்னை பொருத்தவறை டென்னிஸ் சம்மேளனத்தில் நான் எப்போதும் தடை செய்யப்பட்டவன் தான். ஒலிம்பிக்கில் நான் தோற்றதற்காக மகிழ்ந்தவர்கள் அவர்கள். கடந்த வாரம் டேவிஸ் கோப்பைக்கு விளையாட நான் ஆயத்தமான போது, எனக்கு இதில் விளையாட தடை விதித்திருப்பதாக மின் - அஞ்சல் ஒன்றின் மூலமே தெரியவந்தது. அதையும் ஒரு நிருபர் தான் அனுப்பியிருந்தார்.

இந்திய அணிக்காக நான் விளையாடிய இறுதி போட்டிகள் லண்டன் ஒலிம்பிக்காக தான் இருக்க முடியும். நான் அடுத்த வருடத்துடன் ஓய்வு பெறவிருக்கிறேன். எனது ஜோடியான ரோகன் போபண்ணா இன்னமும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்பதால் அவர் விளையாட இன்னொரு ஜோடி தேவை கருதி நானும் அவரும் தற்போதே பிரிந்து ஆடுவது பற்றி முடிவு செதுள்ளோம். 2013ம் ஆண்டு வரை கனடாவின் டேனியல் நெஸ்டருடன் நான் சேர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளேன் என மகேஷ் பூபதி கூறியுள்ளார்.

அணில் கண்ணா உங்களுக்கு எதிராக செயற்படுகிறாரா என கேள்வி எழுப்பப்பட்ட போது, 'நான் நாட்டுக்காக விளையாடுவதில் அணில் கண்ணாவுக்கோ அவரது சம்மேளனத்திற்கோ இஸ்ஷ்டம் இல்லை. முன்னர் விஜய் அம்ரித்ராஜ் இவ்வாறு இந்திய டென்னிஸ் சம்மேளனத்திடமிருந்து எந்தவொரு பயனும் பெற்றிடாமல் இருந்த காலம் உண்டு. 1993 ம் ஆண்டு லியாண்டர் மற்றும் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரும் இதே பிரச்சினையை எதிர்கொண்டனர். தற்போது இது எனது முறை. அவர்கள் வளர்த்துவிட்டதாக உங்களால் ஒருவரை காட்ட முடியாது' என கூறினார்.

மேலும் இந்திய டென்னிஸ் சம்மேளனத்தில் அணில் கண்ணாவினால் நியமிக்கப்பட்டவர்களுக்கு இந்த விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியாது என குற்றம் சுமத்தினார்