siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

உலகின் மிகவும் அவலட்சணமான பெண் மற்றும் சாதனையாளர்


20.09.2012.By.Rajah'லிஷ்ஷி வெலாஷ்குவெஸ்' எனப்படும் உலகில் மிகவும் அவலட்சணமான பெண் உயர் பள்ளியில் படிக்கும் போது YouTube இல் தன்னைப் பற்றிய 8 செக்கன்களுக்கு எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்.
(தற்போது இந்த வீடியோ தடை செய்யப் பட்டுள்ளது) இவர் பிறக்கும் போதே இக் குறைபாடு உடையவர் என்பதுடன் உலகில் இவரைத் தவிர இன்னமும் இரண்டு பேருக்கே இவ் வியாதி காணப்படுகின்றது எனவும் கூறப்படுகின்றது.

அதாவது இவருக்கு முகத்திலும் உடல் பகுதியிலும் தோலை இணைக்கும் தசைகள் இல்லை. அதனால் தோல்கள் தொங்கிக் கொண்டிருப்பதுடன் இவருக்கு சக்தியைச் சேமிக்கவோ, பாரத்தைத் தூக்கவோ முடியாது. இவரது உடலில் கொழுப்புச் சக்தியின் அளவு வெறும் பூச்சியம் என்பதுடன் இவரது எடை வெறும் 60 பவுண்ட்ஸ் ஆகும்.

YouTube இல் இவரது வீடியோவுக்கு கமெண்ட் பண்ணியிருக்கும் வாசகர்களில் சிலர் அவரை ஒரு monster எனவும் இப்படி வாழ்வதற்கு சாவது மேல் எனவும் தெரிவித்திருந்தனர். எனினும் இப் பெண்ணின் இலட்சியம் அசாதாரணமானது. இவருக்கு நான்கு இலக்குகள் உள்ளன.

1.அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் பேசும் வல்லமையைப் பெறுதல்
2.ஏதேனும் துறையில் ஒரு புத்தகமாவது வெளியிடல்
3.கல்லூரியில் ஏதேனும் பட்டம் பெறுதல்
4.தனக்கென ஒரு குடும்பம் மற்றும் வேலை பெறுதல்

தற்போது 23 வயதாகும் இப் பெண்மணி 7 வருடங்களாக சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்து வருவதுடன் 200 இற்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளார். மேலும் சான் மார்கோஸ் இல் உள்ள டெக்ஸாஸ் மாநில பல்கலைக் கழகத்தில் தகவல் தொடர்பாடல் பிரிவில் மூத்த உறுப்பினராக உள்ளார்.

இவர் வெளியிட்ட முதல் புத்தகம் 'Lizzie Beautiful'' 2010 இல் வெளி வந்தது. மேலும் இந்த மாதத் தொடக்கத்தில் இவரது இரண்டாவது புத்தகம் 'Be Beautiful, Be You,' வெளியாகி உள்ளது.

சமீபத்தில் இவர் CNN செய்தி ஸ்தாபனத்துக்கு பேட்டியளிக்கையில், என்னிடம் வரும் மக்களிடம் நான், 'என் அழகைப் பார்க்காதீர்கள்!. என்னிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும் என்று பாருங்கள்!' என்று சொல்வதற்கே நான் விரும்புகின்றேன். என்றார்.

வெளி உலகுக்கு வரவே தயக்கம் கொள்ளும் இத்தகைய குறைபாடுகள் மிக்க மனிதர்கள் மத்தியில் இப் பெண்மணி நிச்சயம் ஒரு சாதனையாளர் என்றே கூற வேண்டும்.\
இவற்றையும் காண தவறாதீர்கள்: