siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

எங்களது ஏவுகணை திட்டம் சீனாவுக்கு எதிரானது அல்ல: அமெரிக்கா

20.09.2012-By.Rajah.அமெரிக்க ஏவுகணை திட்டம் சீனாவுக்கு எதிரானது அல்ல என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜாய் கார்னி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், அமெரிக்காவின் ஏவுகணை திட்டம் சீனாவுக்கு எதிரானது கிடையாது. அந்தப் பிராந்தியத்தில் வடகொரியாவின் ஏவுகணை மிரட்டலை சமாளிக்கவே ரேடார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணைகளை எந்த நாட்டையும் மிரட்டுவதற்காக பயன்படுத்தவில்லை. தற்காப்புக்காகவே அவை பயன்படுத்தப்படுகின்றன. சீனாவுடன் உறுதியான கூட்டு உறவையே அமெரிக்கா விரும்புகிறது.
இருநாடுகளுக்கு இடையே கவலையளிக்கும் பாதுகாப்பு பிரச்னைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடத்தப்படும்.
அமெரிக்க பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அமெரிக்க மக்களின் விருப்பத்தின் பேரிலேயே ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான உறவை கடைபிடிக்கிறது.
பல்வேறு நிலைகளில் சீனாவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூட்டுறவை மேம்படுத்துவது இருநாடுகளுக்கு பலனளிக்கும்.
அமெரிக்காவைப் பொருத்தமட்டில் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைக்கு எதிராக செயல்படும். இதனை உலக வர்த்தக மையத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம்.
ஒபாமா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில், சீனாவுடனான உறவை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படும்.
சீனாவும், ஜப்பானும் தங்களது பிரச்னைகள் பற்றி நேரடியாக பேசித் தீர்வு காணவேண்டும் என்றார் கார்னி.