siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

இந்திய டென்னிஸ் சம்மேளனம் மீது மகேஷ் பூபதி கடும் அதிருப்தி

20.09.2012.By.Rajah.
இந்திய டென்னிஸ் சம்மேளனம் மீது பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி சராமாரியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அண்மையில் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில், லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாட சக வீரர்கள் மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா மறுத்திருந்தனர். இதனால், அவர்களுக்கு டேவிஸ் கோப்பை உட்பட அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்தவொரு இந்தியா சார்பிலான போட்டியிலும் விளையாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டென்னிஸ் சங்கம் சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாக மகேஷ் பூபதி குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய டென்னிஸ் சம்மேளனத்தின் தலைவர் அனில் கண்ணாவே இந்த பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். அவர் ஒற்றை மனிதராக டென்னிஸ் சம்மேளனத்தை தவறான வழியில் வழிநடத்துகிறார்.

இது எதிர்கால இந்திய டென்னிஸ் வீரர்களுக்கு தீங்கானது. வீரர்களிடையே பிளவுகளை உண்டாக்கும் அவரது பிரித்தாளும் கொள்கை பற்றி தெரியாமல் இந்த பிரச்சினையில் எனக்கும் பயசுக்கும் மோதல் என்று ஊடகங்களில் செய்தி வெளியானது துரதிஷ்டவசமானது. என்னை பொருத்தவறை டென்னிஸ் சம்மேளனத்தில் நான் எப்போதும் தடை செய்யப்பட்டவன் தான். ஒலிம்பிக்கில் நான் தோற்றதற்காக மகிழ்ந்தவர்கள் அவர்கள். கடந்த வாரம் டேவிஸ் கோப்பைக்கு விளையாட நான் ஆயத்தமான போது, எனக்கு இதில் விளையாட தடை விதித்திருப்பதாக மின் - அஞ்சல் ஒன்றின் மூலமே தெரியவந்தது. அதையும் ஒரு நிருபர் தான் அனுப்பியிருந்தார்.

இந்திய அணிக்காக நான் விளையாடிய இறுதி போட்டிகள் லண்டன் ஒலிம்பிக்காக தான் இருக்க முடியும். நான் அடுத்த வருடத்துடன் ஓய்வு பெறவிருக்கிறேன். எனது ஜோடியான ரோகன் போபண்ணா இன்னமும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்பதால் அவர் விளையாட இன்னொரு ஜோடி தேவை கருதி நானும் அவரும் தற்போதே பிரிந்து ஆடுவது பற்றி முடிவு செதுள்ளோம். 2013ம் ஆண்டு வரை கனடாவின் டேனியல் நெஸ்டருடன் நான் சேர்ந்து விளையாட திட்டமிட்டுள்ளேன் என மகேஷ் பூபதி கூறியுள்ளார்.

அணில் கண்ணா உங்களுக்கு எதிராக செயற்படுகிறாரா என கேள்வி எழுப்பப்பட்ட போது, 'நான் நாட்டுக்காக விளையாடுவதில் அணில் கண்ணாவுக்கோ அவரது சம்மேளனத்திற்கோ இஸ்ஷ்டம் இல்லை. முன்னர் விஜய் அம்ரித்ராஜ் இவ்வாறு இந்திய டென்னிஸ் சம்மேளனத்திடமிருந்து எந்தவொரு பயனும் பெற்றிடாமல் இருந்த காலம் உண்டு. 1993 ம் ஆண்டு லியாண்டர் மற்றும் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோரும் இதே பிரச்சினையை எதிர்கொண்டனர். தற்போது இது எனது முறை. அவர்கள் வளர்த்துவிட்டதாக உங்களால் ஒருவரை காட்ட முடியாது' என கூறினார்.

மேலும் இந்திய டென்னிஸ் சம்மேளனத்தில் அணில் கண்ணாவினால் நியமிக்கப்பட்டவர்களுக்கு இந்த விளையாட்டு பற்றி ஒன்றுமே தெரியாது என குற்றம் சுமத்தினார்