siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

உலகின் மிக அதிக வயதுடைய மனிதன் 122 ஆவது வயதில் மரணம்

20.09.2012.By.Rajah.உலகின் மிக அதிக வயதுடைய ஆண் என ரஷ்ய மக்களால் உரிமை கோரப்படும் நபர் தனது 122 ஆவது வயதில் நேற்று புதன்கிழமை டஜெஸ்டானில் காலமாகி உள்ளார்.
இத்தகவலை லண்டனில் இருந்து வரும் செய்திகள் உறுதி செய்துள்ளன.

மகொமெட் லெபஷனோவ் எனப் படும் இந்த மனிதர் 1890 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் 1917 இல் லெனின் பொல்ஷெவிக் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் போது இவருக்கு வயது 27 எனவும் டெய்லி மெய்லில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இவரின் நீண்ட ஆயுளுக்குக் காரணமாக இவர் அல்கஹோல் மற்றும் டொபாக்கோ பாவிப்பதில்லை எனவும் பெண்களுடன் தொடர்பில்லாதவர் எனவும் கூறப்படுகின்றது.

இருந்த போதும் இவரது முதல் மனைவிக்குக் குழந்தைகள் இல்லாத காரணத்தால் இவர் இரு முறை மணம் முடித்தவர் எனவும் கூறப்படுகின்றது. ஒரு மரத் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் எழுதவும் படிக்கவும் தெரியாதவர். எனினும் முறையான ஒரு உணவுக் கொள்கையைப் பின்பற்றி வந்த இவரின் நாளாந்த உணவாக பழங்கள்,பால்,சோளம்,தயிர், காய்கறிகள் மற்றும் வெள்ளைப் பூடு என்பவை உண்ணபவர்.

இவரின் உறவுக் காரர்களால் இவரின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் அல்லது இவரின் ஆயுளை உறுதி செய்யும் ஏனைய பத்திரங்களை கையளிக்க முடியாத காரணத்தால் இவரின் நீண்ட ஆயுளுக்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் சாதனையைப் பதிவு செய்ய முடியவில்லை என்பது வருத்தமான விடயமாகும்