siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 4 ஜனவரி, 2013

பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு தூக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை விதித்து கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2012 மார்ச் மாதம் திருவனந்தபுரத்தில் 15 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆட்டோ ஓட்டுனர் ராஜேஸ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திருவனந்தபுரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் குற்றவாளியான ராஜேஸ் குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்து திருவனந்தபுரம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சுசீந்திர குமார் தீர்ப்பளித்தார்.
நாட்டில் நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கவேண்டுமென சமூகத்தின் புறத்திலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள்:

பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இக்குற்றங்களுக்கெதிராக பெருமளவில் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.
இந்நிலையில், பிரமிளா சங்கர் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், பெண்களுக்கெதிரான குற்றங்களில் வழக்கை எதிர்நோக்கும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பணிஇடை நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.
எனினும், பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதில் எப்போது விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், அதில் எத்தனை நீதிபதிகள் இருப்பார்கள், எந்த அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் நடைபெறும் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்த அடிப்படையில் நிவாரணம் வழங்குவது என்பது குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன

டெல்லி மாணவி மரணம்: மைனர் தப்பிக்க வாய்ப்பு

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
குறித்த இளைஞர் இன்னமும் ஐந்து மாதங்களில் 18 வயதை அடைந்துவிடுவார்.
எனினும் அவர் 18 வயதை அடைய முன்னரே குற்றம் செய்திருப்பதால் அதிக பட்சமாக மூன்று வருட தண்டனையே கொடுக்க முடியும். அதுவும் சிறுவர் சீர் திருத்த பள்ளியிலேயே அனுமதிக்க முடியும்.
18 வயதை கடந்த இளைஞர்களுக்கு மட்டுமே சிறைத்தண்டனை கொடுப்பதற்கு தற்போதைய இந்திய சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் அவர் சில மாதங்களில் விடுவிக்கப்பட கூடிய அபாயம் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இளைஞர் தான் கல்வி பயின்று வந்த பள்ளிக்கு சமர்ப்பித்திருந்த பிறப்புச் சான்றிதழை வைத்தே அவர் இன்னமும் மேஜர் ஆகவில்லை என டெல்லி காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதனாலேயே தற்போது எலும்பாக்க சோதனை மூலம் குறித்த இளைஞரின் உண்மையான வயதை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் விசாரணைக்குழு இறங்கியுள்ளது.
எனினும் அப்பெண்ணை மானபங்கப்படுத்தியதில் ஆறு குற்றவாளிகளுக்கும் சம பங்கிருப்பதாகவும், அப்பெண்ணின் மரணத்திற்கும், அவர் அனுபவித்த கொடூரத்திற்கும் ஆறு பேருமே முக்கிய காரணமானவர்கள் எனவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
மேலும் குறிப்பாக அந்த 17 வயது இளைஞரே, அம்மாணவியிடம் கேலியாக பேசி வன்முறையை தூண்டியதாகவும், அப்பெண் மற்றவர்களால் மானபங்கப்படுத்தபட்டு மயங்கி வீழந்த பின்னர் கடைசியாக அவரை வண்புணர்ச்சி செய்ததாகவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் வழக்கு விசாரணையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து அவ்வப்போது பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் ஒரு பேச்சாளரை நியமிக்க வேண்டும் என நீதிமன்றத்திற்கு சட்டத்தரனிகள் சிலர் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இளம்பெண்ணை கற்பழித்த காங்கிரஸ் பிரமுகருக்கு பொதுமக்கள் அடி ?


அசாமில், திருமணமான பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த, காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.சிராங் மாவட்டத்தில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவர், விக்ரம் சிங் பிரம்மா. நேற்று முன்தினம் இரவில், வீடு புகுந்து, பெண் ஒருவரை கற்பழித்து விட்டார்.

நேற்று காலையில் இந்த விவகாரம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அந்த வழியாக வந்த விக்ரம் சிங்கை, பொதுமக்கள் முற்றுகையிட்டு, தாக்க துவங்கினர்.தகவல் அறிந்து வந்த போலீசார், கும்பலில் சிக்கிய, காங்., பிரமுகரை மீட்டு, போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் கணவர் அளித்த புகாரை அடுத்து, காங்., பிரமுகர் பிரம்மா, கைது செய்யப்பட்டார்
 

முதன்முறையாக ஆண்மை நீக்க தண்டனை. தென்கொரிய

 தென் கொரியாவில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபருக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில், செக்ஸ் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் நடைமுறை உள்ளது. ஆசிய நாடுகளில் இந்த தண்டனை கிடையாது.

டில்லியில் நடந்த கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு, இந்த முறையில் தண்டனை அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஆனால், பல்வேறு அரசியல் கட்சியினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, தென் கொரியாவில், பியோ, 31, என்பவர், சிறுமிகள் பலரை கற்பழித்ததற்காக, கைது செய்யப்பட்டார்.
"டீன் ஏஜ்' பெண்களை நிர்வாணமாக படம் எடுத்து மிரட்டி, அவர்களை கற்பழித்து வந்த பியோ, "எனக்கு, செக்ஸ் உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை' என, கோர்ட்டில் தெரிவித்தார். இந்த வழக்கை விசாரித்த சியோல் கோர்ட், "பியோவுக்கு, 15 ஆண்டு, சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
சிறையிலிருந்து வெளியேறுவதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன், ரசாயன முறையில், அவருக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும்; அது மட்டுமல்லாது, அவருடைய நடமாட்டத்தை, 20 ஆண்டுகளுக்கு கண்காணிக்கும் வகையில், எலெக்ட்ரானிக் கருவியை அவரது உடலில் வைக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. தென் கொரியாவில் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பின் மூலம், ஆசிய நாட்டை சேர்ந்த, முதல் நபருக்கு ரசாயன முறையில், ஆண்மை நீக்கம் செய்யப்படுகிறது, என்பது குறிப்பிடத்தக்கது