பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைத்
தொடர்ந்து, இக்குற்றங்களுக்கெதிராக பெருமளவில் போராட்டங்கள் வெடித்து
வருகின்றன. இந்நிலையில், பிரமிளா சங்கர் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கெதிரான குற்றங்களில் வழக்கை எதிர்நோக்கும் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பணிஇடை நீக்கம் செய்யப்படவேண்டும் என்றும் பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். எனினும், பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில் எப்போது விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், அதில் எத்தனை நீதிபதிகள் இருப்பார்கள், எந்த அடிப்படையில் நீதிபதிகளின் நியமனம் நடைபெறும் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்த அடிப்படையில் நிவாரணம் வழங்குவது என்பது குறித்து கேள்விகள் இடம்பெற்றுள்ளன |
வெள்ளி, 4 ஜனவரி, 2013
குற்றச்சாட்டுகளை விசாரிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்கள்:
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக