siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 20 நவம்பர், 2012

பாகிஸ்தானில் மலாலாவுக்கு உயர்ந்த விருது

பாகிஸ்தானிய பெண் மலாலாவுக்கு அந்நாடு வீரதீரச் செயலுக்கான விருதை வழங்கியுள்ளது. பெண்களின் கல்விக்காக போராடியதற்காக தாலிபான் பயங்கரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார் மலாலா. இந்நிலையில் நாட்டின் உயரிய விருதான வீரதீரச்செயலுக்கான விருதை உலக சமாதானம் மற்றும் அமைதிக்கான நிறுவனத்தின் தலைவர் பிரின்ஸ் அலி கான் வழங்கினார். இந்த விருதை மலாலா சார்பில் பிரித்தானியாவுக்கான பாகிஸ்தான் துணைத்தூதர் கர்தேசி பெற்றுக் கொண்டார் ...

காதல் திருமணம் செய்த வாலிபர் எரிப்பு: உறவினர் வெறிச் செயல்

பாகிஸ்தானில் காதலித்து நீதிமன்ற அனுமதியுடன் திருமணம் செய்த காதலனை பெண் வீட்டு உறவுக்காரர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். பாகிஸ்தானின் முசராபாத்தில் உள்ள புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் மொகமது மஜித். இவர் கராச்சியைச் சேர்ந்த சமினா பீபி என்ற பெண்ணை அவளது பெற்றோரின் எதிர்ப்பை மீறி நிதிமன்ற அனுமதியுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். இதனால் பெண்ணின் குடும்பத்தார் மஜித்தின் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். பொலிசார் அவரது...

சவீதா மரணம் குறித்து விவாதிக்க தயாராகும் அயர்லாந்து

கரு கலைப்புக்கு மருத்துவர்கள் மறுத்ததால் இறந்து போன இந்திய பெண் சவீதாவின் மரணம் குறித்து அயர்லாந்து அமைச்சரவை இன்று விவாதிக்க உள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் இன்ஜினியராக உள்ளார். பல் மருத்துவரான சவீதாவுக்கு, கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உங்கள் வயிற்றில் வளரும் கரு இயல்பான நிலையில் இல்லாததால் வலி ஏற்பட்டுள்ளது என்றனர். இதைக் கேட்ட...

போதை மருந்துக்குத் கனடாவில் தடை இல்லை

கனடாவில் Oxycontin எனப்படும் வலி நிவாரணி மருந்தை, கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பலர் போதை மருந்தாகப் பயன்படுத்துவதால் இதனைத் தடை செய்ய இயலாது, என்று மத்தியக் கூட்டரசு மாநில அரசுகளிடம் தெரிவித்தது. இந்த மருந்து எங்கு யாருக்கு விற்கப்படுகிறது என்று கவனிக்கும்படி அரசு, மருந்து விநியோகஸ்தருக்கான உரிம விதிகளில் கூறியிருப்பதால் இனி இந்த மருந்தைத் தவறாக யாரும் பயன்படுத்துவது கடினம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் லியோனா அக்லுக்காக்...

ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து கஞ்சா கடத்திய நபர் கைது

  கேரள கஞ்சாவைக் கடத்திய நபர் ஒருவர், கட்டுநாயக்கா விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார். 15 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை ஆடைப் பொதிகளுக்குள் மறைத்து, கடத்திய மாத்தளை பிரதேச நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 23 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் இரவு ஆடைப் பொதிகளுக்குள் மறைத்தே சென்னையிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த நபர் இந்தியாவுக்கு அடிக்கடி சென்று...

பீதியில் உறைந்துள்ள முல்லைத்தீவு மக்கள்?

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று காலை பேரிரைச்சலுடன் வட்டமிட்டு தாழப் பறந்து சென்ற “கிபீர்” குண்டு வீச்சு விமானங்களால் அப்பிரதேச மக்கள் பீதியில் உறைந்து காணப்பட்டனர். நேற்று காலை 8 மணியளவில் திடீரெனப் பேரிரைச்சலுடன் முல்லைத்தீவு பிரதேசத்துக்குள் நுழைந்த கிபீர் விமானங்கள் தாழப் பறந்து வட்டமடித்தன. தாக்குதலுக்கு வட்டமிடுவதைப் போன்று இவ்விமானங்கள் தாழப்பறந்து சென்றதால், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பதற்றத்தில்...