கனடாவில் Oxycontin எனப்படும் வலி
நிவாரணி மருந்தை, கிராமங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பலர் போதை மருந்தாகப்
பயன்படுத்துவதால் இதனைத் தடை செய்ய இயலாது, என்று மத்தியக் கூட்டரசு மாநில
அரசுகளிடம் தெரிவித்தது.
இந்த மருந்து எங்கு யாருக்கு விற்கப்படுகிறது என்று கவனிக்கும்படி அரசு, மருந்து
விநியோகஸ்தருக்கான உரிம விதிகளில் கூறியிருப்பதால் இனி இந்த மருந்தைத் தவறாக யாரும்
பயன்படுத்துவது கடினம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் லியோனா அக்லுக்காக்
கூறியுள்ளார். மேலும் இந்த மருந்தைத் தவறாகப் பரிந்துரைக்கும் மருத்துவர், விற்கும் மருந்தாளுநர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார். இதுபோல நூறு மருந்துகள் கனடாவில் உள்ளதால் இந்த மருந்தைத் தடை செய்வதால் எவ்விதப் பயனுமில்லை. இவையனைத்தையும் தடை செய்தால், மருந்து தேவைப்படும் நோயாளிகள் தவித்துப் போவார்கள். அவர்கள் நோயிலிருந்து விடுதலை பெற உறுதுணையாய் இருப்பது அரசின் தலையாய கடமை ஆகும் என்றார். ஒண்ட்டேரியோவின் சுகாதாரத் துறை அமைச்சர் டெப் மேத்யூஸ், இந்த ஆக்ஸ்கோட்டினுக்குத் தடை விதிக்கக் கோரி பிரச்சாரம் செய்தார். இந்த மருந்து கிடைக்கப்பெற்றால் நாட்டில் பலர் எந்நேரமும் போதையிலேயே மிதந்து கொண்டிருப்பர். இதனால் உடனடியாக இதன் விற்பனையைத் தடுக்க வேண்டும் என்று மத்தியக் கூட்டரசிடம் கோரியிருந்தார். வரும் 25ம் திகதியுடன் ஆக்ஸி கோண்ட்டினின் தேசிய அனுமதி முடிவுபெறும் நிலையில் மத்தியக் கூட்டரசு மீண்டும் அதற்கு அனுமதி வழங்கிவிட்டது. ஒரு மருந்தை ஏற்பதும் மறுப்பதும் அரசியல்வாதிகளின் பணி அன்று எனக் கூறிய அக்லுக்காக், ஒண்ட்டேரியோவும் மற்ற மாநிலங்களும் இந்த மருந்துக்குத் தடை கோருவது ஏன் என்று புரியவில்லை. மருத்துவர்களும் மருந்தாளுநரும் தவறு செய்தால் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கின்றது. இந்நிலையில் இந்த மருந்து எவ்வாறு போதை விரும்பிகள் கைக்குப் போய்ச் சேரும். அதைத் தடுக்க மாநில அரசுகள் அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக மேற்கொள்ள முடியும் என்று மாநில அரசின் கடமையையும் அதிகாரத்தையும் விவரித்தார். மாநில அரசுகளால் கடுமையான நடவடிக்கை எடுத்து ஆக்ஸி நியோவின் (ஆக்ஸி கோண்ட்டின் புதிய பெயர்) முறைகேடான விற்பனையைத் தடுக்க முடியாவிட்டால் மத்தியக் கூட்டரசு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும். ஏற்கெனவே மெத்தடோன் என்ற மருந்தின் முறைகேடான விற்பனையை நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம் என்று உறுதிபடத் தெரிவித்தார் |
செவ்வாய், 20 நவம்பர், 2012
போதை மருந்துக்குத் கனடாவில் தடை இல்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக