siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஜனவரி 22ல் சிரியா அமைதி பேச்சுவார்த்தை


சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜெனீவாவில் ஜனவரி 22-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான்-கீ-மூன் திங்கள்கிழமை அறிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் பல மாதங்களாக நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர இந்த வாய்ப்பை இரு தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஈரானுடன் 6 நாடுகள் ஒப்பந்தம்: சர்வதேச கச்சா எண்ணை விலை குறைவு


ஈரான் நாட்டுடன் ஜெனிவாவில் நடந்த 6 நாடுகள் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அணு சக்தி குறித்து ஒரு  புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்துசர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் பேரலுக்கு இரண்டு டாலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும்,

இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்தியக் கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது என்று கூறப்படுகிறது.




 

ஈரானுடனான ஒப்பந்தம்: நெதன்யாகுவுடன் ஒபாமா பேச்சு


ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக, அந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுப் பிழை என்றும், அணு ஆயுதம் தயாரிக்கும் தனது நோக்கத்தை ஈரான் நிறைவேற்றிக்கொள்ள அது வழிவகை செய்யும் என்றும் பிரதமர் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதனால், மிக நெருக்கமான நட்பு நாடுகளான அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் பதற்றம் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார் அதிபர் ஒபாமா.

வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “”ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒருமித்த கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.

ஈரானில் பூமியதிர்வு; 8 பேர் உயிரிழப்பு


ஈரானில் இடம்பெற்றுள்ள பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  59 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு ஈரானிலுள்ள அணு மின் நிலையத்திற்கு அருகில்  நேற்று வியாழக்கிழமை மாலை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் குடியிருப்புக் கட்டடங்கள் சேதமாகியுள்ளதுடன், மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கேள்விப்பட்டு கவலையடைந்துள்ள ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்