ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடர்பாக வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக, அந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுப் பிழை என்றும், அணு ஆயுதம் தயாரிக்கும் தனது நோக்கத்தை ஈரான் நிறைவேற்றிக்கொள்ள அது வழிவகை செய்யும் என்றும் பிரதமர் நெதன்யாகு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனால், மிக நெருக்கமான நட்பு நாடுகளான அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் பதற்றம் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார் அதிபர் ஒபாமா.
வெள்ளை மாளிகை துணை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், “”ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் இரு நாடுகளுக்குமிடையிலான ஒருமித்த கருத்தை இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்” என்று தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக