ஈரான் நாட்டுடன் ஜெனிவாவில் நடந்த 6 நாடுகள் பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதை அடுத்து அணு சக்தி குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்துசர்வதேச கச்சா எண்ணெய் விலைகள் பேரலுக்கு இரண்டு டாலர்களுக்கும் மேல் வீழ்ந்துள்ளன. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் ஒரு பகுதி தளர்த்தப்படும் என்று அந்த ஒப்பந்தம் உறுதியளிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஈரான் கணிசமான அளவுக்கு அதன் எண்ணெய் விற்பனையை அதிகரிக்க அனுமதிக்கப்படாது என்றாலும்,
இந்த ஒப்பந்தம் முக்கிய எண்ணெய் உற்பத்திப் பிரதேசமான மத்தியக் கிழக்கில் பதற்றங்களை தளர்த்தியிருக்கிறது என்று கூறப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக