siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதினப்பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதினப்பலகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பனம் வெல்லத்திற்கு பெரும் கிராக்கி

யாழ்ப்­பா­ணத்து பனம் வெல்லத்துக்கு தென்­ப­கு­தி­யி­லும், புலம் பெயர் நாடு­க­ளி­லும் பெரும் கிராக்கி ஏற்­பட்­டுள்­ளது எனவே பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தியை ஆரம்­பிக்­கும் நட­வ­டிக்­கையை பனை அபி­வி­ருத்தி சபை ஆரம்­பித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் பனை­ ம­ரங்­க­ளில் பருவ கால கள் உற்­பத்தி ஆரம்­பிக்­கப்­பட்டுள்­ளது. மாவட்­டத்­தில் உள்ள பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­கள் போத்­த­லில் கள் அடைக்­கும் பணி­க­ளை­யும், பத­நீர் உற்­பத்­தியை ஊக்­கு­வித்து பனம்­வெல்ல உற்­பத்­தி­யை­யும் 
ஆரம்­பிக்­க­வுள்­ள­னர்.
போத்­த­லில் கள் அடைக்­கும் பணி­கள் மற்­றும் வெல்ல உற்­பத்தி என்­பன மார்ச் முத­லாம் திகதி முதல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. குடா­நாட்­டுப் பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­ வுச் சங்­கங்­க­ளால் உற்­பத்தி செய்­யப்­ப­டும் போத்­தல் கள் மற்­றும் 
பனம் வெல்­லம் ஆகி­ய­வற்றை தென்­ப­குதி மக்­கள் உட்­பட புலம்­பெ­யர் நாடு­க­ளில் உள்­ள­வர்­க­ளும் கொள்­வ­னவு செய்­வ­தில் ஆர்­வம் காட்­டு­வ­தால் சங்­கங்­கள் இம்­முறை அதிக அள­வில் உற்­பத்­தியை மேற்­கொள்­ள­லா­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இது தொடர்­பாக தென்­ம­ராட்சி பிர­தேச பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளு­டன் தொடர்பு கொண்ட போது, ‘போத்­த­லில் அடைக்­கப்­ப­டும் கள்­ளுக்கு தென்­ப­கு­தி­யில் கிராக்கி காணப்­ப­டு­கி­றது. போத்­தல் கள் அதிக அள­வில் உற்­பத்தி செய்­தால் அங்­கத்­த­வர்­க­ளும் சங்­கங்­க­ளும் அதிக பயன் பெற­மு­டி­யும்.
ஆனால், உற்­பத்தி செய்­யப்­ப­டும் போத்­தல் கள்­ளுக்கு அர­சால் விதிக்­கப்­ப­டும் உற்­பத்தி மற்­றும் விற்­பனை வரி அதி­கம் என்­ப­தால் கடந்த வரு­டங்­க­ளைப்­போன்று மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அள­வி­லேயே உற்­பத்தி செய்ய உத்­தே­சித்­துள்­ளோம். உற்­பத்தி செய்­யப்­ப­டும் போத்­தல் கள்­ளின் மொத்த விவ­ரம் வழங்­கப்­பட்டு அனைத்­துக்­கும் வரி செலுத்த வேண்­டும்.
தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளால் உற்­பத்தி செய்­யப்­பட்­ட­வற்­றில் ஒரு தொகுதி விற்­பனை செய்­யா­வி­டின் அதன் கொள்­வ­ன­வுச் செலவு, போத்­த­லில் அடைக்­கும் செலவு, வரி போன்­ற­வற்­றால் சங்­கம் நட்­ட­ம­டைய நேரி­டும் என்ற அச்­சம் சங்­கங்­க­ளி­டையே காணப்­ப­டு­கி­றது. எனவே மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட அளவு போத்­தல் கள்ளை உற்­பத்தி 
செய்­ய­வுள்­ளோம்.
பனை வெல்­லம் மற்­றும் பனங் கற்­கா­ரம் ஆகி­ய­வற்­றுக்­குத் தென்­ப­குதி மற்­றும் புலம்­பெ­யர் நாடு­க­ளில் பெரும் கிராக்கி காணப்­ப­டு­வ­தால் அங்­கத்­த­வர்­கள் மூலம் பத­நீர் உற்­பத்­தியை அதி­க­ரித்து வெல்ல உற்­பத்­தி­யில் ஈடு­ப­ட­வுள்­ளோம்’ என அவர்கள் தெரி­வித்­த­னர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 8 ஜூலை, 2013

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு-நாம் தமிழர் கட்சி!



தர்ம்புரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும் பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.
தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும் இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை சாதியமாக்கி அரசியலாக்கியதன் விளைவு அது முதலில் திவ்யாவின் தந்தையையும் இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.
தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது நமது கல்வியிலுன் கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதற்கு முழு முதற் காரணம் திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும் தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?
தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும் ஆதரவுடனும் மணம் செய்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும் தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள் தமிழினமும் தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.
இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம் நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும் அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும் நம் இனத்தின் விடுதலையும் உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது

வியாழன், 16 மே, 2013

தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி:


எத்தனையோ விதமான நடனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் வித்தியாசமான நடனம் இது,சிலி நாட்டின் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஜோடி ஒன்று தமது திறமையை காட்டியுள்ளது.
இது வழமையைப் போன்று சாதாரண மேடை நடனம் அல்ல. முற்றிலும் மாறுபட்ட ஜிம்னாஸ்டிக் வகையிலான நடனம்.

அதுவும் இரு நீர்த் தொட்டிக்குள் இவர்கள் காட்டும் திறமை அபாரமானது.

பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும் அவர்களின் திறமையைக் காண காணொளியை பாருங்கள்,

திங்கள், 15 அக்டோபர், 2012

தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்

 
திங்கட்கிழமை, 15 ஒக்ரோபர் 2012,By.Rajah.
கண்டி ஆதார வைத்தியசாலையில் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் இன்று அதிகாலை பெற்றெடுத்துள்ளார்.
ஐந்து பிள்ளைகளில், ஆண்கள் குழந்தைகள் மூவர் எனவும் பெண் குழந்தைகள் இருவரும் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
29 வயதான தாயார் ஒருவருக்கே ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன. தாயும் பிள்ளைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்

திங்கள், 17 செப்டம்பர், 2012

யாழ்பான பஸ் நகைசுவை நிகழ்சி

17.09.2012.By.Rajah.உங்களைமிகவும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் சிறந்த பஸ் [ காமெடி]

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் காகங்கள்: ஆய்வில் புதிய தகவல்


By.Rajah.மனித முகங்களை அடையாளம் கண்டு கொள்வதும், அவர்களுடன் பழகி அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ளும் சக்தியும் காகங்களுக்கு உண்டு என்று புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில், அணிலின் மூளையைப் போன்றே காகங்களின் மூளையின் அமைப்பும் அமைந்துள்ளது கண்டறியப்பட்டது.
காகங்களுடன், மனிதர்கள் சிலரை ஒன்றாக பழக வைத்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது. ஒன்றாக பழகியவர்களைப் போன்று மற்றொருவர் மாஸ்க் அணிந்து காகத்தின் அருகில் சென்றால் அவை அவர்களை நிராகரித்து விடுவதும், தங்களுடன் பழகும் நபர், வேறொரு மாஸ்க் அணிந்திருந்தாலும், அவரிடம் நெருங்கி செல்வதும் காகங்களின் முக அடையாளம் காணும் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பறவைகளைப் பற்றி நடத்திய ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது

வியாழன், 6 செப்டம்பர், 2012

தமிழரின் அக வாழ்விலும் புற வாழ்விலும் பனை

06.09.2012.BY.rajah.
மனித வாழ்க்கை இயற்கையோடு நெருக்கமாக இணைந்துள்ளது. மரமும் மலையும் மனிதனின் மனதிலே நிறைந்திருந்தன. ஆறும் கடலும் அவனது பார்வையிலே நிலைத்திருந்தன. மண்ணும் விண்ணும் எண்ணத்திலே இணைந்திருந்தன. மனிதன் வாழ்க்கை நடைமுறைகள் இயற்கையின் தோற்றங்களோடு தொடர்புற்று விளங்குகின்றன. தமிழர் வாழ்க்கையில் இப்பண்பினைச் சிறப்பாகக் காண முடிகின்றது. அதனைப் பல தமிழ்ப் பாடல்களும் சான்றுபகிர்கின்றன. குறிப்பாக இந்த ஆய்வுக் கட்டுரையில் தமிழர் வாழ்வியலோடு பனைமரம் இணைந்துள்ளமை விளக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் பனையின் வளம்பெற்ற பூமியாகும். வரண்ட நிலமெனினும் வளமான பனைமரங்கள் வளர்ந்த நிலமாகும். அதனால் மக்களது வாழ்வியலோடு பனைமரம் நெருங்கி இணைந்துள்ளது. பனை மக்களது பண்பாட்டிலே நிலைத்துள்ளது. பனை தந்த வளங்கள் வாழ்வோடு அது இணைய உதவின. உணவு நிலையில் மட்டுமன்றி உணர்வு நிலையிலும் கூட நம் முன்னோர் பனை மரத்துடன் இணைந்துள்ளனர். அந்த இணைப்பு நிலை இலக்கியங்களிலே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காட்டப்பட்டுள்ளது. உருவிலும் உணர்விலுமாக பனை தமிழர் வாழ்வில் எவ்வாறு இணைந்திருந்தது என்பதை இன்று எம்மவர் அறிய வேண்டியதும் அவசியமே. கால மாற்றத்தினால் வாழ்வு நிலைமாறி திசைகெட்டு நாம் செல்லும் வழி இருட்டாகி நிற்கிறோம். இருட்டிலே தோன்றும் நெடும் பனைகளே எமக்கு விளக்காக, வாழ்வு நடக்க வேண்டியுள்ளது. பனையின் துணையோடு வாழ்ந்த முன்னோர் செய்திகளைத் தேடி அறிந்து துணைக்கொள்ள வேண்டும். அதற்கென ஆய்வுகள் பல செய்ய வேண்டும்.
சங்க இலக்கியங்களிலே பனை பற்றிய செய்திகளை நாம் நிறையக் காணலாம். அக வாழ்விலும் புறவாழ்விலும் அது நெருங்கியுள்ளதை அறியலாம். இயற்கையிலே இருண்ட நிறம் கொண்ட பனை மக்கள் மனதிலே நிறைந்திருக்கின்றது. வரண்ட வாழ்க்கைப் பாதையை வளமாக்கியுள்ளது. காதலும் வீரமும் காண உதவியுள்ளது. புலவர்களின் மொழிவளத்திலே சிறப்புப் பெற்றுள்ளது. பனையின் தோற்றமும் பண்பாடும் பரவலாகவே தமிழ் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அகவாழ்வு நிலையில்
மனிதனின் உள்ளம் சம்பந்தமான வாழ்க்கை நிலையைப் புலவர்கள் அகவாழ்வு என்று கண்டனர். ஆணும் பெண்ணுமாக இணைந்த கூட்டுவாழ்க்கையிலே அவர்களது உள்ளத்து உணர்வுகளைக் குறிப்பினாலே அறிதல் கூடும். குறிப்பு நிலையினை விளக்கப்பனைதான் பயன்பட்டுள்ளது. நற்றிணையிலே ஒரு பாடல் புலவர் வெள்ளிவீதியார் பாடியது. தான் விரும்பும் காதலனைப் பிரிந்த பெண்ணின் அகநிலைக் கூற்றாக அமைந்த பாடல் அது. காதலன் பிரிவினால் தான் அடையும் துன்பம் கூறும் பெண்ணின் குரல். கடற்கரையிலே வாழ்பவள். சூழலில் இருக்கும் மரங்களைப் பார்க்கிறாள். மண்ணுக்கும் விண்ணுக்குமாக அவள் பார்வை தாவுகிறது. திங்கள் வானிலே தோன்றிவிட்டது. கடல் அலைகள் ஓலமிடுகின்றன. தாழை மலர்ந்து நிற்கிறது. கண்ணிலே படும் காட்சிகள் யாவும் மனத்துயரை மாற்றுவதாக இல்லை. பார்வையினை மீண்டும் மேலே செலுத்துகின்றாள். அருகே உயர்ந்து நிற்கும் கரிய பெரிய பனை மரத்தில் ஒரு சோககீதம். உள்ளத்தை நெருடும் குரல். துணையிழந்த அன்றிற் பறவை துணைதேடி குரல் கொடுக்கிறது. கண்டவள் மனதிலே சற்று மாறுபாடு. ஒரு கணம் தன்துயர் மறந்து அந்தப் பனையிலே இருக்கும் அன்றிலையே பார்க்கிறாள். துன்பம் எனக்கு மட்டுமில்லை. இந்தப் பறவைக்கும் கூட இருக்கிறதே என்று எண்ணியவள் தன் துயரை மறந்து விட்டாள். நெடும்பனையில் நின்று வாடும் அன்றிலின் குரலுக்கே காது கொடுத்துவிட்டாள். பிரிவின் ஒற்றுமை நிலை. பேச்சுக்கிடமில்லை. தோற்றம் தான் உணர வைக்கின்றது. மையிரும்பனையே மனதில் நிறைந்துவிட்டது. புலவர் நாவிலே பாடலாகியது. சொற்களால் அணி சூழப் பனைமரம் நிற்கிறது.
திங்களும் திகழ்வான் ஏர்தரும் இளநீர்ப்
பொங்குதிரைப் புணரியும் பாடோ வாதே
ஒலிசிறந்து ஓதமும் பெயரும் மலிபுனல்
பல்பூங் கானல் முள்ளிலைத் தாழை
சோறு சொரி குடவயின் கூம்புகை அவிழ
வளிபரந்து ஊட்டும் விளிவில் நாற்றமொடு
மையிரம் பனைமிசைப் பைதல உயவும்
அன்றிலும் என்புற நரலும் (நற்றிணை: 335)
பழந்தமிழ்ப் பாடலிலே பனை மனவுணர்வைக் காட்டிநிற்கிறது. பனை நிறைந்த கடற்கரை நிலம் காதல் வாழ்வைப் படம் பிடித்துள்ளது. ஒருவனுக்கு ஒருத்தியாகி அவன் வரவுக்கென்றே வாழும் பண்பாடு. பனை மரம்போல வளர்ந்த பண்பாடு. அது தமிழர் வாழ்விலே நிலைத்து விட்ட பண்பாடு.
ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்டு விருப்பம் கொண்டாலும் கற்புநிலையிலே இணைந்து வாழ்ந்தனர். இருவர் விருப்பினையும் தோழி பெற்றோரிடம் கூறி இணையத் துணையாய் நிற்பாள். பனைமரம் படர்ந்த நிலத்தோர் பண்பாடு அதுவாக இருந்துள்ளது. குறுந்தொகையிலே வரும் பாடலொன்று அதனை விரிவாகவே விளக்குகிறது. உலோச்சனார் என்ற புலவர் புலமையின் துணையால் பண்பாடு பேசுகிறார். பனைமரங்கள் நிறைந்த மணற்பாங்கான நிலத்தில் வாழ்பவள். ஒருவனை விரும்பிவிட்டாள், மணம் செய்ய அவன் வருவான் என எண்ணிக் காத்திருக்கின்றாள். காலம் கடக்கிறது. சூழகோலமும் மாறிவிட்டது. அவன் இன்னமும் வரவில்லை. அவளது துயர்கண்ட அருமைத் தோழி தேறுதல் கூறுகிறாள். உண்மை நிலையை அறியாது தோற்றத்தைக் கண்டு துயரப்படும் தலைவியை நோக்கி அவள் கூறும் வார்த்தைகள் இயற்கையின் நிலைக்காட்டி இன்னல் தீர்க்கும் அவள் மதிநுட்பம்; பனையில் தோற்றம், துயரம் களையத் துணையாகிறது. "கடற்கரையிலே காற்றுக் காலத்திலே பனைமரங்கள் மணலால் அடிபுதைய மறைந்து நிற்கின்றன. அடம்பன் கொடி படர்ந்த மணல் குவிவதாலே நெடிய பனைகளெல்லாம் குறிய பனைகளாகத் தோற்றுகின்றன. உண்மையிலேயே அப்பனைகள் குறியன அல்லவே. காலம் மாற மீண்டும் மணல் கரைய நீண்டு தோன்றும். அதுபோல உன் காதலனும் உரிய காலத்திலே வந்துவிடுவான். வருந்தாதே'' தோழியின் சொற்களின் உண்மை காதலியின் உணர்விலே சேருகிறது. மனத்துயரும் தீருகிறது. பனையின் தோற்றம் காதலன் நிலையைக் காட்டுகிறது.புலவர்,
தோழி கானல்
ஆடரை புதைய கோடையிட்ட
அடும்பிவர் மணற்கோ டூர நெடும்பனைக்
குறிய வாகுந்துறைவன்... (குறுந்தொகை: 247)
என்ற அடிகளால் விளக்கும் வாழ்வியல் எவ்வளவு உண்மையானது. இயற்கையோடு நாம் இணைந்து வாழ்வதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. வாழுகின்ற சூழலோடு மன உணர்வுகளைச் சிறப்பாக அகவுணர்வுகளைச் சேர்த்து நோக்கும் தன்மை போற்றுதற்குரியது. மணலால் புதைய நிற்கும் நெடும் பனைகள் மனம் துயரிலே புதையாமல் வாழ வைக்கின்றன. நேரில் காணும் தோற்றங்கள் நெஞ்சிலே படியும் துயர அலைகளை மடியச் செய்கின்றன. பனை என்றுமே நெடும் பனைதான். காற்றினாலே மணல் சேர்ந்து அதன் தோற்றம் குறியதாதல் வெறும் தோற்றமே. சங்கப்பாடலில் காணும் இப்பனையின் கோலம் யாழ்ப்பாணத்திலும் நாம் காணும் கோலமே.
மக்கள் இளமை நிலையில் களவின்பம் நாடுவர். அது இயற்கை நிலை. ஆனால் பண்பாடு பெற்ற உள்ளங்கள் விரச வாழ்வை விரும்புவதில்லை. பறவைகள் சில ஒழுக்க நிலையிலே பகலிலே சேராமல் வாழுகின்றன. மனிதனும் அவற்றிடம் கற்கவேண்டிய பண்பாடு இது. காமத்தால் மயங்கி ஒழுக்கம் தவறாமல் வாழப் பனையும் பயன்பட்டுள்ளது. இளைஞன் ஒருவன் எந்நாளும் பகற்போதினிலே வந்து அழகிய பெண்ணொருத்தியுடனே நீண்ட போது அளவளாவுகின்றான். அவன் செயலால் ஊரிலே அலர் பரவிட்டது. முறையாகத் திருமணம் செய்துவிட்டால் அலருக்கிடமில்லை. பண்பு கெடாது. மணம் செய்ய எண்ணாமல் தினமும் பகலில் வருபவன் தவறை உணரவேண்டும். அந்தத் தலைவனைத் தோழி வழிப்படுத்த எண்ணுகின்றாள். அவன் வாழுமிடத்துப் பனைகளின் தோற்றத்தையே துணைகொண்டு செயற் படுகிறாள். தலைவனை அழைத்துக் கூறுகின்றாள். கடற்கரை நிலத்திலே வாழ்பவனே! இயற்கையின் தோற்றத்தை ஒரு முறை பார். எமது முற்றத்திலே நிற்கும் பனைமரத்திலே இரவிலேதான் நாரைகளும் அன்றிலும் வந்து தங்குகின்றன. அதுவே பண்பாடாயமையும். நீயும் இரவிலே வருவதே இயற்கை நிலையாகும். ""தோழியின் சொற்களில் வாழ்வு நிலையை அவன் உணருகின்றான். பறவைகள் இரவிலே கூட வாழ்கின்றன. அதற்காகவே பனை மரத்திலே வந்து தங்குகின்றன. பகலிலே உணவு தேடிப் பறந்து திரிகின்றன. இரவிலே துணையோடு இன்பம் காணப் பனையிலே வந்து தங்குகின்றன. முற்றத்தில் நிற்கும் பனையிலே நடக்கும் இனிய குடும்ப வாழ்வு என் காதலியின் உள்ளத்திலும் எண்ணமாயிருக்கும். பறவைகளைக் கண்டு அவள் மனம் என்னையும் ஒரு சேர எண்ணி ஏங்கும். இனிமேல் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதி கொள்கிறான். பனையில் இரவில் வாழும் அன்றில்கள் போல நாமும் இல்லத்திலே கூடி வாழ வேண்டும் என நினைத்து செயற்படுகின்றான். அன்று அகநானூறு 360 ஆம் பாடலில் இப்பனைக் குடும்ப வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. பனை நிற்கும் சூழல் வாழ்வு நிலைகள் அதனுடன் இயற்கையாகவே இணைத்து நோக்கப்பட்டுள்ளன. ஒருதலைக் காதல் நிலையிலும் கூடப்பனை தமிழர் வாழ்விலே தொடர்புற்றிருந்துள்ளது. தான் விரும்பிய பெண்ணை மணம் முடிப்பதற்காகப் பனையின் துணையை நாடும் ஆடவர் பலரும் அன்று வாழ்ந்துள்ளனர். அவர் நிலைகள் பாடலிலே குறிப்பிடப் பட்டுள்ளன. தன் எண்ணத்திலே நிறைந்தவள் உருவத்தை எழுதி, பனங்கருக்கிலே செய்யப்பட்ட குதிரையிலே ஏறி வீதிவலம் வரும் ஆண்கள் பலர். அவர்கள் செயல் "மடலேறல்' என அழைக்கப்பட்டது. குறுந்தொகையில் வரும் பாடலொன்று இதனை விளக்குகின்றது.
பொன்னோர் ஆவிரைப் புதுமலர் மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க வேறி நாணட்
டழிபடர் உண்ணோய் வழிவழி சிறப்ப
இன்னள் செய்த திதுவென முன்னின்
றவள்பழி நுவலு மிவ்வூர்
ஆங்குணர்ந் தமையினீங் கேகுமாறுளெனே.
(குறுந்தொகை : 173)
தான் விரும்பிய பெண்ணைப் பெறுவதற்கு உதவும்படி அப் பெண்ணின் தோழியை வேண்டுகின்றான் ஒரு ஆடவன். தோழியோ அதற்கு உடன்படவில்லை. எனவே அவன் மடலேறி தனது எண்ணத்தை எல்லோருக்கும் வெளிப்படுத்த முடிவுசெய்கின்றான். பனை மடலிலே செய்த குதிரையை பொன்னையொத்த நிறமுடைய ஆவிரையினுடைய புதிய பூக்களால் அலங்கரித்து, மணிகளைக் குதிரையின் கழுத்திலே கட்டி, அவை ஒலி செய்ய ஏறிவரும் அவன் செயல் ஊரவர்க்கு உண்மையை உணர்த்தும். குதிரையிலே எழுதித் தொங்கவிடப்பட்ட பெண்ணின் உருவம் யாருக்காக அவன் மடலேறினான் என்பதை விளக்கும். மடலேறிவருதலுக்காக அவன் நாணப்படவில்லை. பெண்ணின் மேல் ஊர்பழி கூறவே வழிசெய்கின்றான். இங்கு காமத்தின் நாணமற்ற தன்மையை வெளிப்படுத்தப் பனைமரம் பயன்படுத்தப்படுகிறது. கலித்தொகையிலும்,
மணிபீலி சூட்டிய நூலொரு மற்றை
அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்துயாத்து
மல்லலூர் மறுகின்கண் இவட்பாடும் இஃதொத்தன்
எல்லீருங் கேட்டீமின் என்று
படரும் பனையீன்ற மாவுஞ் சுடரிழை
நல்கியாள் நல்கியவை. (கலி : 138)
என வருகின்ற அடிகளும் மடலேறும் பற்றிக் குறிப்பிடுகின்றன.
பனங்கருக்கினாலே செய்த குதிரையை அழகு செய்யப் பலவித மலர்கள் பயன்பட்டன. நீல மணி போலும் நிறத்தையுடைய பீலியையும், பூளைப்பூவையும், ஆவிரம் பூவையும் எருக்கம் பூவோடு தொடுத்துக் காட்டிய மாலைகளால் மடல்மா அலங்கரிக்கப்பட்டது. உயிரற்ற குதிரையாக பனங்கருக்கு உருவெடுத்து காதல் வயப்பட்டவனைத் தாங்கிச் செல்கிறது. இது அவனது இறுதி முயற்சியாக அமைந்ததெனலாம். தன் எண்ணத்தை எல்லோரும் அறியச் செய்து பெண்ணைக் கொள்ளும் பெரு முயற்சி தமிழர் அகவாழ்வில் தனித்துவமான பண்பும் எனலாம்.
புறவாழ்வு நிலையில்
மனிதனின் வீட்டு வாழ்க்கை அகவாழ்வாக வெளிவாழ்க்கை புறவாழ்வாக அமைந்தது. போரும் அது சம்பந்தமான நிகழ்வுகளும் புறவொழுக்கம் எனப் புலவர்களால் விளக்கப்பட்டுள்ளன. போர்க்களத்திலே உள்ள யானைகளின் துதிக்கைகள் பனை மரத்துடன் ஒப்பிடப்பட்டுள்ளன.
பனைமருள் தடக்கை எனப் புறநானூற்றுப் பாடலொன்று யானையின் பெருங்கையை வர்ணிக்கின்றது. பனையின் உயரமும், கருமை நிறமும் வலிமை படைத்த யானையின் துதிக்கையுடன் பொருந்தி நிற்கின்றன. அகநானூற்றுப் பாடலொன்றும் யானையின் துதிக்கையினை 'திரள்பனையன்ன பரு ஓர் எறுழ்தடக்கை' என வர்ணித்துள்ளது. பனையின் வலிமையான தோற்றம் புலவன் கண்ணில் நிறைந்து யானைக்கு உவமையாகிற்று. வலிமை நிலையிலே பனை மரமும் யானையின் துதிக்கையும் ஒன்றுபட்டு வீரம் விளக்குகின்றன.
தொடரும்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

சென்னையின் புகழ் பாடும் சிம்பு

17.08.2012.
சிங்கார சென்னையின் புகழை சொல்லும் ஆன்தம் ஒன்றை சிம்பு பாடியுள்ளார். இந்த ஆன்தம் யுரியூப்பில் வெளியாகியுள்ளது.
கொலிவுட்டில் போடா போடி, வேட்டை மன்னன், வாலு போன்ற படங்களில் நடித்து வருகிறார் சிம்பு.
இதற்கிடையில் மதில் மேல் பூனை என்ற படத்தை விளம்பரப்படுத்தும் பாடலாக இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இந்த பாடல் சென்னைவாசிகளை ஈர்க்கும் படியாக அமைந்துள்ளது.
ஏற்கனவே வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் சிம்புவின் அடுத்த ஆன்தம் தயாராகி வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது யுரியூப்பில் சென்னையைப் பற்றி மட்டும் குறிப்பிடும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.
வந்தாரை வாழ வைக்கும் ஊரு எனத் தொடங்கும் இப்பாடல் வரிகள் சென்னைவாசிகளின் மனதில் பதியும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே இயக்குனர் பாண்டிராஜ் மெரினா என்ற படத்தில் சென்னையின் புகழை விளக்கும் பாடலொன்றை காட்சிப்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

பத்மப்ரியாவால் ஏற்பட்ட பிரச்சினை

17.08.2012.
நடிகை பத்மப்ரியா ஊதிய விடயத்தில் தனது மேலாளருக்கு பரிந்து பேசியதால் கேரளா சினிமா துறையில் மேலாளர்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதுகேரளா சினிமாவில் நடிகர்- நடிகைகளின் மேலாளர்கள் தயாரிப்பாளர்களிடமே சம்பளம் வாங்குகின்றனர்.
இவர்களின் சம்பள விடயத்தில் குழப்பம் செய்தால் நடிகர்- நடிகைகளின் திகதிகளை தாமதப்படுத்துவர். இப்பிரச்சினை நீண்ட காலம் கேரளா சினிமாவில் இருந்து வருகின்றது.
இந்நிலையில் மலையாளத்தில் ‘நம்பர் 66 மதுரை பஸ்’ என்ற படத்தில் பத்மப்ரியா நடிக்கிறார்.
இப்படத்தை நிஷாத் இயக்குகிறார். இப்படத்தை முடித்து கொடுப்பதற்கு பத்மப்ரியா தனது மேலாளருக்கு கொடுக்க கூடுதல் பணம் தரவேண்டும் என இயக்குனரை நிர்பந்தம் செய்துள்ளார்.
இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் பத்மப்ரியா மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து திரைப்பட சங்கங்களுடனும் தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது. இறுதியாக நடிகர் நடிகைகள் மேலாளர்கள் வைத்துக்கொள்ள தடை விதிப்பது என்றும், இதனை அனைத்து சங்கத்தினரும் கண்டிப்பாக அமுல்படுத்த வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.
சம்பள விடயங்கள் குறித்து நடிகர்- நடிகைகளிடம் நேரில்தான் பேசவேண்டும் என்றும் தீர்மானித்து உள்ளனர்

சனி, 28 ஜூலை, 2012

பல விதமான செய்திதொகுப்புகள்

28.07.2012பல விதமான செய்திதொகுப்புகள் உள்ள தொடர் செய்திகள் ஓர் பார் வையில்உள்ளது நீருக்கடியி​ல் நீந்தக் கூடி​ய நவீன ரோபோ கண்டுபிடிப்​பு

Zum vollständigen Artikel wechseln
ரோபோக்களை உருவாக்குவதில் அன்றாடம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் தற்போது நீருக்கு அடியில் நீச்சல் போடக்கூடிய அதி நவீன ரோபோவை உருவாக்கி சாதனைப் படைத்துள்ளனர். மேன்டாபாட் என அழைக்கப்படும் இந்த ரோபோவை பற்றி கருத்துத் தெரிவித்த வேர்ஜினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹிலாரி பார்ட் ஸ்மித் கூறுகையில், ரோபோக்களின் உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள இந்த ரோபோவானது எதிர்காலத்தில் கடலடி ஆராய்ச்சிகள் பலவற்றிலும் பெரும் உதவியாக இருக்கும் எனத் ...

போன் பொம்மை

Zum vollständigen Artikel wechseln
ஸ்மார்ட் பெட் என்ற அடையாளத்தோடு ஜப்பானில் அறிமுகமாகியுள்ள எந்திர நாய் பொம்மை இது பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாண்டாய் உருவாக்கியுள்ள இந்த நாய் பொம்மை யில், ஒரிஜினல் நாயின் முகத்துக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோன் வைக்கப்பட்டுள்ளது. இந்த நாயை குரைக்க வைக்கலாம், ஓட வைக்கலாம், அழச் செய்யலாம். ஐபோனின் திரை யில் ஒளிரும் ஐகான்களை இயக்கி, கட்டளைகளைப் பிறப்பித்தால் போதும் டோக்கியோவில் நடைபெற்ற சர்வதேச பொம்மை கண்காட்சியில் புதுமையான பொம்மை என்ற விருதைப் பெற்றிருக்கிறது இந்த போன் ...

மும்பையில் குடிநீர் வெட்டு 20 சதவீதமாக அதிகரிக்கப்படுமா?

Zum vollständigen Artikel wechseln
சி.எஸ்.டி: மும்பையில் 20 சதவீத குடிநீர் வெட்டை அமல்படுத்துவது குறித்துÞ இன்று நடக்கும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுகிறது. மும்பையில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் பருவமழை பெய்யவில்லை. இதனால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் குடிநீர் மட்டம் கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே 10 சதவீதம் குடிநீர் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் 10 சதவீதம் அதிகரிக்க மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது பற்றிய முடிவு இன்று நடக்கும் கூட்டத்தில் எடுக்கப்பட ...

புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டம்

Zum vollständigen Artikel wechseln
அதிக சக்தி கொண்ட புதிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கேடிஎம் டியூக் 200 பைக் விற்பனையில் நல்ல முன்னேற்றம் கணடு வருகிறது. மாதத்திற்கு 1000 பைக்குகள் விற்பனையாகிறது. இதனால், உற்சாகமடைந்துள்ள பஜாஜ் ஆட்டோ தற்போது கேடிஎம் பிராண்டில் மேலும் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. டியூக் வரிசையில் 125சிசி மற்றும் 375சிசி பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வர அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு பைக் மாடல்களும் ஏற்கனவே ஐரோப்பிய ...

சான்ட்ரோ கார் உற்பத்தியை நிறுத்த ஹூண்டாய் முடிவு

Zum vollständigen Artikel wechseln
விற்பனை சரிந்து வருவதால் தனது வெற்றிகரமான மாடலான சான்ட்ரோ கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிடுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹூண்டாயின் முதல் கார் மாடலான சான்ட்ரோ கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் குறுகிய காலத்தில் மார்க்கெட்டில் பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, 2003ஆம் ஆண்டு சான்ட்ரோ ஸிங் மேம்படுத்தப்பட்ட மாடலை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. சான்ட்ரோவின் வெற்றி தொடர்ந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு இயான் என்ற புத்தம் புதிய சிறிய காரை ஹூண்டாய் அறிமுகம் செய்தது. கவர்ச்சியான ...

எங்கிருந்தாலும் மொபைலை சார்ஜ் செய்ய மினி சார்ஜர் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
இக்காலத்தில் மொபைல் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதில் இருக்கும் ஒரு சிறிய குறைபாடு என்னவென்றால் விரும்பும் நேரத்தில் பேட்டரியை சார்ஜ் செய்துக்கொள்ள இயலுவது இல்லை. ஆனால் இந்தக் குறையை நீக்குவதற்காக போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஒரு சிறிய மொபைல் சார்ஜைரை களமிறக்கி இருக்கிறது. இந்த சார்ஜருக்கு சார்ஜ் எக்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. சிறிய வடிவில் இருக்கும் எந்த சார்ஜரை வெளியில் போகும் போது எளிதாக எடுத்தச் செல்ல முடியும். இந்த சார்ஜ் எக்ஸில் 5,600 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரி இருக்கிறது. அதோடு இதில் 2 யுஎஸ்பி ...

அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு : மைக்ரோசாஃப்டு நிறுவனம்

Zum vollständigen Artikel wechseln
புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது. இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட ...

பல மாடல் கார்களை அறிமுகப்படுத்திய மஹிந்திரா நிறுவனம்

Zum vollständigen Artikel wechseln
கென்யாவில் எக்ஸ்யூவி, ஸ்கார்ப்பியோ உள்ளிட்ட பல மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா. சர்வதேச வர்த்தகத்தை விரிவாக்கி வரும் மஹிந்திரா நிறுவனம் ஆப்ரிக்க மார்க்கெட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் ஏற்கனவே எக்ஸ்யூவி உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வரும் அந்த நிறுவனம் தற்போது கென்ய மார்க்கெட்டில் ஒரே நேரத்தில் ஏராளமான மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ, பிக்கப் டிரக்குகள், மேக்ஸிமோ மினி டிரக் மாடல்கள் அங்கு விற்பனைக்கு வந்துள்ளது. சிம்பா நிறுவனம் கென்யாவில் மஹிந்திரா ...

ஆப்பிளின் மினி ஐபேட் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
அப்பிளின் அனைத்து ஐபேட்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது விலை குறைந்த சிறிய ஐபேட் ஒன்றினை வெளியிட அப்பிள் திட்டமிட்டுள்ளது. இதற்கு ஐபேட் மினி என பெயரிப்படலாம் எனவும், இந்தாண்டின் இறுதியில் இந்த ஐபேட் வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அங்குலத்திரை 7அல்லது 8ஆக இருக்குமெனவும், 9.7 அங்குல ரெட்டினா திரையைக் கொண்டிருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரெட்டினாக்கு பதிலாக சார்ப் நிறுவனத்தின் டிஸ்ப்ளே உபயோகப்படுத்தப்படலாம். ஐபேட் மினியின் மற்றைய தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான தகவல்கள் ...

ஸ்மார்ட்போன்களுக்கு நோக்கியாவின் சாஃப்ட்வேர் அப்டேஷன்

Zum vollständigen Artikel wechseln
நோக்கியா நிறுவனம் லுமியா 800 மற்றும் லுமியா 710 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய சாஃப்ட்வேர் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது. இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம், ஒரே நேரத்தில் 5 மின்னணு சாதனங்களில் 3ஜி வசதியினை பெறலாம் என்பது தான் இதன் சிறப்பு. ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் நுட்ப சாதனங்களை இணைக்க வேண்டும் என்றால் அதற்கு ரூட்டர் கருவி தேவைப்படுகிறது. ஆனால் நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் மூலம் நான்கு, ஐந்து மின்னணு சாதனங்களிலும் எளிதாக ஒரே நேரத்தில் 3ஜி வசதியை பயன்படுத்தலாம். நோக்கியா வழங்கும் இந்த சாஃப்ட்வேர் அப்டேஷன் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக ...

அட்டகாசமான விலையில் நோக்கியா ஆஷா மொபைல்கள்

Zum vollständigen Artikel wechseln
நோக்கியா ஆஷா வரிசை மொபைல்களில் 202 மற்றும் 302 என்ற இந்த மொபைல்களின் விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. நோக்கியாவின் ஆஷா வரிசை மொபைல்கள் மக்கள் மத்தியில் அதிகம் பிரசித்தம் பெற்றது. அந்த வகையில் இங்கு இரண்டு ஆஷா மொபைல்களின் தொழில் நுட்ப விவரங்களையும், அதன் விலை பட்டியல் பற்றிய விவரங்களையும் பார்க்கலாம். 2.4 இஞ்ச் திரை கொண்ட ஆஷா- 202 மொபைலின் திரையின் மூலம் சிறந்த தகவல்களை தெளிவாக பார்க்கலாம். கவர்ச்சிகரமான இந்த மொபைல் 10 எம்பி வரை இன்டர்னல் மெமரியினை கொண்டது. ஆஷா -202 மொபைல் 2.0 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். ஆஷா-202 மொபைலில் 32 ஜிபி வரை இதன் மெமரி வசதியினை ...

கூகுளின் புதிய டேப்லட் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான ஜெல்லிபீன் என்னும் புதிய மென்பொருளையும் அறிமுகப்படுத்தி உள்ளது. நெக்சஸ் 7 என பெயரிடப்பட்டுள்ள இந்த டேப்லட், ஆசஸ் எனப்படும் வன்பொருள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 7 அங்குல திரை அகலம் கொண்ட இந்த டேப்லட்டானது, கூகுளின் ஜெல்லிபீன் ...

பாதுகாப்பான இணையத்தள தேடலுக்கு குகூன்

Zum vollständigen Artikel wechseln
பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது. இதன் மூலம் உங்களை பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் தடுக்கிற‌து. அத்துடன் மட்டுமல்லாமல் இணையம் மூலம் வைரஸ் மற்றும் மால்வேர் போன்றவை உள்ளே வராமலும் இது தடுக்கிற‌து. மேலும் ஒரு மாற்று மின்னஞ்சலையும் உருவாக்கி தந்து குப்பை மின்னஞ்சல்களில் இருந்தும் ...

கணினி விளையாட்டில் புதிய தொழில்நுட்பம்

Zum vollständigen Artikel wechseln
பொழுதுபோக்கிற்காகவும், மூளை விருத்தியை அதிகரிக்கவும் அதிகமானவர்களால் கணினி விளையாட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் நாளுக்கு நாள் கணினி விளையாட்டானது புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றது. இம்மாற்றங்களின் அடிப்படையில் தற்போது கணினி விளையாட்டுக்களைக் கட்டுப்படுத்துவதற்கென புளூடூத் தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய தொடுதிரைக் கட்டுப்படுத்திகள் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரிங்போவ் என அழைக்கப்படும் இந்த நவீன தொழில்நுட்பமானது அன்ராயிட் சாதனங்கள் மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்கள் ...

மைக்ரோசாஃப்ட்டின் புதிய டேப்லெட் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக சர்ஃபேஸ் எனப்படும் புதிய டேப்லெட் கணினியை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் இதை அறிமுகப்படுத்தினார். விண்டோஸ் 8 இயக்க அமைப்பில் செயல்படக்கூடிய இந்த டேப்லெட்டுகள், ஏற்கெனவே சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேடை குறிவைத்து உருவாக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. தனது சொந்தத் தயாரிப்பான மைக்ரோசாப்ட் ஆபீஸ் மற்றும் அடோப் நிறுவனத்தின் ...

பறக்கும் ரோபோக்கள் கண்டுபிடிப்பு

Zum vollständigen Artikel wechseln
வான் வழிப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கருவி ஒன்றை சுவிஸ் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தூசு துணிக்கைகள், ஏனைய வான்பொருட்களுடன் மோதும் சந்தர்ப்பங்களில் தானாகவே பறப்பை நிறுத்தி மீண்டும் சாதகமான நிலைமை ஏற்படும்போ-து, பறக்கும் தன்மையைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்த ரோபோவை ஆபத்து மிக்க பகுதிகளான குகைகள், அணு ஆராய்ச்சி தொடர்பான பகுதிகளில் பயன்படுத்த முடியும் என அதனை வடிவமைத்த ஆராச்சியாளர்கள் ...

கேம்களுக்காக பிரத்யேகமான மவுஸ்கள்

Zum vollständigen Artikel wechseln
சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு, தற்போது கணினி விளையாட்டுக்களில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்றவர்களை மையமாக வைத்து கணினி விளையாட்டுகளும், அவற்றிற்கான சாதனங்களும் நாளுக்கு நாள் மேம்படுத்தப்பட்டும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டும் வருகின்றன.இதனடிப்படையில், தற்போது 20 பட்டன்களைக் கொண்ட ஜி600 மவுஸ்கள் கணினி விளையாட்டிற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன. கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் தற்போது கிடைக்கக்கூடியதாக உள்ள மவுஸ்கள் 6.5 அடிகள் நீளமான கேபிள்களை இணைத்து இயக்கக்கூடியன. ...

பாதுகாப்புக்கு பயன்படும் லேசர் அறிமுகம்

Zum vollständigen Artikel wechseln
லேசர் பயன்படுத்தி சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் ஒரு முறை விரைவில் அறிமுகமாக இருக்கிறது. வீடு ஒன்றின் பாதுகாப்பிற்காக பலகை, இரும்பு போன்றவற்றால் கதவு, ஜன்னல் என்பவற்றை அமைத்தாலும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எனவே அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்கூட்டியே எச்சரிக்கைகளைப் பெற்று செயற்படுவது மிகச் சிறந்ததாகும். இதன் அடிப்படையில் லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும். இதன் மூலம் வீட்டின் சுற்றுப்புறத்தில் நிகழும் மற்றவர்களின் நடமாட்டங்களை துல்லியமாக அறிந்து நடவடிக்கை எடுக்க ...

பெண்களின் மார்பக புற்று நோயை காட்டிக்கொடுக்கும் ரத்த பரிசோதனை

Zum vollständigen Artikel wechseln
மார்பக புற்றுநோய் உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே எளிய இரத்த பரிசோதனை மூலம் கண்டறியமுடியும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இத்தகைய பரிசோதனைகள் மூலம் குறிப்பிட்ட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கமுடியும் என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.கேன்சர் ரிசர்ச் என்கிற மருத்துவ தேடலில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. லண்டனில் இருக்கும் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர் ஜேம்ஸ் பிளானகன் தலைமையிலான ...

எச்.ஐ.வியை வீட்டிலேயே கண்டுபிடிக்கும் கருவி

Zum vollständigen Artikel wechseln
எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கான கருவியை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. ஒராகுயிக் என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி எடுப்பதன் மூலம் ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும்.உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான முதலாவது கருவியாக இது இருக்கும். இந்தக் கருவியின் மூலமான சோதனை முடிவுகள் 100 சதவீதம் துல்லியமானவை என்று