
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மீண்டும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவை கொலை செய்ய முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவருக்கு எதிரான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு சமுகமளிக்குமாறே நீதிமன்றத்தினால் நேற்று திங்கட்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சமுகமளிக்காததை...