புதன்கிழமை, 08 ஓகஸ்ட் 2012,
மன்னார், மடுமாதா தேவாலயத்தில் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழா வைபவத்தில் கலந்துகொள்ளவுள்ள மக்களின் நலன் கருதி விசேட ரயில் சேவைகளை நடத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத வணிக அத்தியட்சகர் ஜீ.டபிள்யூ.எஸ்.சிசிர குமார குறிப்பிட்டார்.
இதற்கமைய நீர்கொழும்பு மற்றும் மதவாச்சி ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் விசேட...
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
புதன், 8 ஆகஸ்ட், 2012
நல்லூர் கந்தசுவாமி கோவில் 2012 கொடியேற்ற உற்சவம் 01 . 02

08.08.2012.
நல்லூர்
கந்த சுவாமி
கோவில்
திருவிழா
வீடியோக்கள்
நல்லூர் கந்த சுவாமி கோவில் திருவிழா வீடியோக்கள் 2012 முதலாம் நாள் உற்சவம் மாலை
நல்லூர் கந்த சுவாமி கோவில் திருவிழா வீடியோக்கள் 2012 2 நாள் உற்சவம் மால...
தம்புத்தேகம பகுதியில் பதட்ட நிலை; பொலீசார் கண்ணீர்புகை பிரயோகம்
08.08.2012.
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பிரதேச மக்கள் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதுகடந்த மாதம் 31ம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரான சாரதியை பிணையில் விடுதலை செய்ய பொலிஸார் எடுத்த முடிவைக் கண்டித்து தம்புத்தேகம பிரதேசவாசிகள் பொலிஸ் நிலையத்தின் மீது கல் வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களை...
ஒரே இரவில் மூன்று கொலைகள்; ஊரெழு மற்றும் விசுவமடுப் பகுதிகளில் பரபரப்பு
08.08.2012.
ஊரெழு மற்றும் விசுவ மடுப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மூவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஊரெழு, பொக்கணையில் வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவராசா (வயது45) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை கோடரியால் கழுத்து வெட் டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவ மடு, ரெட்பானாவில் வேலு விஜயகுமார் (வயது33) கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர் தூக் கில் தொங்கவிடப்பட்டுள் ளார். விசுவமடு, நெத்தலி யாற்றுப்...
மோதிவிட்டுத் தப்பியது மோ.சைக்கிள் மாணவன் அந்த இடத்திலேயே சாவு; மாங்குளத்தில் நேற்றுப் பரிதாபம்
08.08.2012.
மாகாண மட்ட புலமைப் பரிசில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டி ருந்த மாணவனை மோதித் தள்ளிவிட்டுத் தலைமறை வாகியது மோட்டார் சைக் கிள்.சம்பவ இடத்திலேயே மாணவன் துடிதுடித்து இறந்தான்.இந்தச் சம்பவம் நேற்று மாங்குளத்தில் இடம் பெற்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது:
நேற்று மதியம் பரீட்சை முடிந்து வீடு செல்வதற்காக பஸ்ஸுக்குக் காத்திருந்த சிறுவனை வீதியால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதிவிட்டு நிற்காது தப்பிச் சென்றது.சம்பவத்தில்...
கடமை தவறிய பொலீஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்தே நீக்கப்பட்டனர்; அஜித் ரோகண தெரிவிப்பு
08.08.2012.
மது போதையில் கடமை நேரத்தில் இருந்த மற்றும் கடமையை செய்யத் தவறிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் உற்பட ஐவர் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண ஒன்லைன் உதயன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நேற்று முந்தினம் இரவு மிகிந்தலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன், இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பொலீஸ் சாரதி ஆகியோர்...
வவுனியா சிறைசாலை கொடூரம்; மரியதாஸ் டெல்றொக்சனும் மரணம்
08.08.2012.
வவுனியா சிறைச்சாலையில் சிறை காவலர்களாலும் சிறப்பு அதிரடிப்படையினராலும் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மஹர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான பாசையூரைச் சேர்ந்த மரியதாஸ் டெல்றொக்சன் (வயது-37) நேற்று இரவு மரணமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா சிறையில் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் மஹர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான வவுனியாவைச்...
சுறா மீனுள் இருந்து குட்டிச் சுறாவுடன் ஒருவர் வெளியே வந்துள்ளார்
.08.08. 2012,
சுறா மீன் ஒன்றைப் பிடித்த மீனவர்கள் சிலர் அதனை மயக்கம் அடையச் செய்வதற்காக போராடிக் கொண்டிருந்த வேளை குறித்த சுறா மீனுள் இருந்து குட்டிச் சுறாவுடன் ஒருவர் வெளியே வந்துள்ளார். சுவாரஸ்யமாக காணப்படும் இச்சம்பவமானது கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டதாகும்.
...
அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனம்!– மாவை சேனாதிராசா
08.08.2012.
அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன் பௌத்த பிக்குகள் நடத்தும் அடாவடித்தனத்தைக் கட்டுப்படுத்த தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் ௭ன யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் கூட்டம் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று முன்நாள் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...
தரம் குறைந்த எரிபொருளுக்கு காரணம் அரசியல் தலைவர்களின் அசமந்தப் போக்கு: அநுரகுமார
08.08.2012.
அரசியல் தலைவர்கள் மற்றும் கனியவளக் கூட்டுத்தாபன அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால் மீண்டும் ஒருமுறை நாட்டில் தரம் குறைந்த எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்தார். கொள்வனவு செய்யப்பட்ட டீசலில் எந்தப் பிரச்சினையும் இல்லை என அரசாங்கமும் கனியவளக் கூட்டுத்தாபனமும்...
பிரிட்டன் கம்பனிக்கு எதிராக ஐ.தே.க முறைப்பாடு
08.08.2012.
இலங்கையில் நாணயத்தாள்களை அச்சடிப்பதற்காக நிறுவப்பட்ட “டி லா றூ” எனப்படும் பிரித்தானியக் கம்பனிக்கு எதிராக, பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயத்தில் ஐக்கிய தேசிய கட்சி முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவின் பங்கு பரிவரத்தனை கம்பனியான “டி லா றூ” வினால் அந்நிய செலாவணியை மீதப்படுத்த முடியுமெனவும் வேலை வாயப்புகள் உருவாகும் எனவும் கருதப்பட்டது.
ஆனால் அண்மைக்காலத்தில் ஒரு லத்தீன் அமெரிக்கா நாட்டிலிருந்து நாணய தாள்களை...
டெசோ மாநாட்டிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடாத்த திட்டம்
08.08.2012.
சென்னையில் எதிர்வரும் 12 ம் திகதி இடம்பெறவுள்ள டெசோ எனப்படும் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுக்கு எதிராக, எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அந்த அமைப்பின் தலைவர் குணதாச அமரசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எதிர்வரும் 12 ம் திகதி சென்னையில் டெசோ மாநாடு இடம்பெறவிருக்கின்றது. இதன்போது, கருணாநிதி தலைமையில் இலங்கையில்...
கச்சதீவை மீட்க மீனவர்களுடன் சோ்ந்து கடலில் இறங்கி போராடத் தயார் என்கிறார் விஜயகாந்த்
08.08.2012.
தமிழகத்தில் ஆளும் கட்சிக்கு அச்சப்படாமல் தம்முடன் மீனவர்கள் ஒன்றுசேர்ந்து வந்தால் கச்சதீவை மீட்க கடலில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக கட்சி சார்பில், இராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்ற வறுமை ஒழிப்பு தின விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர் மேலும் பேசியதாவது:
இலங்கையில் போர் முடிவுற்ற பிறகும், இன்று வரை அந்நாட்டு கடற்படையின் அட்டூழியத்துக்கு அளவே இல்லாமல்...
மன்னார் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதத்தை மீறிச் செயற்பட்டுள்ளார்: சபாநாயகர்
08.08.2012.
மன்னார் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக சபநாயகர் சமால் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் ஆற்றும் உரை தொடர்பில் வெளிநபர்கள் அச்சுறுத்தல் விடுக்க முடியாது.
மன்னார் நீதவான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசெய்ன் பாருக்கை அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்ட குற்ற்சாட்டு தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நீ நாடாளுமன்றில் என்னைப்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)