08.08.2012. |
ஊரெழு மற்றும் விசுவ மடுப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மூவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஊரெழு, பொக்கணையில் வட்டக்கச்சியைச் சேர்ந்த சிவராசா (வயது45) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தை கோடரியால் கழுத்து வெட் டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். விசுவ மடு, ரெட்பானாவில் வேலு விஜயகுமார் (வயது33) கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட பின்னர் தூக் கில் தொங்கவிடப்பட்டுள் ளார். விசுவமடு, நெத்தலி யாற்றுப் பகுதியில் அருணா சாலம் இராமநாதன் (வயது 73) என்ற முதியவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிவராசா மற்றும் இராம நாதன் கொலை செய்யப் பட்டபின்னர் அவர்கள் இருவரது வீடுகளும் எரியூட்டப்பட்டுள்ளன. ஊரெழு பொக்கணையில் சிவராஜா வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவரது கழுத்தில் கோடரியால் வெட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
வட்டக்கச்சியைச் சேர்ந்த குறித்த நபர் ஊரெழுவில் மேசன் வேலைசெய்து வருகின்றார். கடந்த மாதம் 28 ஆம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றார்.
முத்திரைச் சந்தைப் பகுதியிலுள்ள வேலைத்தளத்தில் தங்கி நின்றே அவர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் வட்டக்கச்சியிலுள்ள தனது மனைவியுடன் தொலைபேசியில் கதைத்துள்ளார்.
இதன் போது இன்னும் சில நாள்களில் வேலை முடிந்து திரும்பி வருவதாகவும் கூறியதாக அவரது மனைவி முதற்கட்ட விசாரணைகளின்போது தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு ஊரெழு பகுதியிலுள்ள ஆலயமொன்றில் இசை நிகழ்ச்சி நடந்தது.
இரவு இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் வீடு திரும்பிய மக்கள் ஊரெழு பொக்கணைப் பிரதேசத்தில் வீடொன்று எரிவதை அவதானித்துள்ளனர். வீட்டின் நெருப்பை அணைத்த பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வட்டக்கச்சியைச் சேர்ந்த குறித்த நபர் கழுத்துவெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோடரியால் அவரது கழுத்தில் இரண்டு தடவைகள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடரியை வீட்டின் முன்புறத்தில் இருந்து மீட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை
விசுவமடுப்பகுதியில் நேற்றுமுன்தினம் விசுவமடு, ரெட்பானா ,வள்ளுவர்புரத்தைச் சேர்ந்த வேலு விஜயகுமார் (வயது 33), மற்றும் விசுவமடு நெத்தலியாற்றுப் பகுதியைச் சேர்ந்ந அருணாசலம் இராமநாதன் (வயது 73) ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வேலு விஜயகுமார் அவரது வீட்டின் முன்பாக 10 மீற்றர் தூரத்திலுள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.
வீட்டிலிருந்து, வெளியில் சென்று வருவதாக கூறிச்சென்ற பின்னர் வீட்டு முற்றத்திலுள்ள மரமொன்றிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டிருந்தார். கிணற்றுக் கப்பிக்குப் பயன்படுத்தும் கயிற்றிலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இவரது சடலம் உடல் கூற்றுப் பரிசோதனை செய்யப்பட்ட போது கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பின்னரே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாசலம் இராமநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட பின்னர் அவரது சடலத்தை, வீட்டோடு சேர்த்து தீ மூட்டியுள்ளனர். வீடு முற்றாக எரிந்துள்ளதுடன் சடலமும் பாதியளவில் எரிந்துள்ளது. உடல்கூற்றுப் பரிசோதனைகளின் போதே வெட்டிக் கொலை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் முல்லைத்தீவுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
|
புதன், 8 ஆகஸ்ட், 2012
ஒரே இரவில் மூன்று கொலைகள்; ஊரெழு மற்றும் விசுவமடுப் பகுதிகளில் பரபரப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக