siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 8 ஆகஸ்ட், 2012

மன்னார் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதத்தை மீறிச் செயற்பட்டுள்ளார்: சபாநாயகர்

 
08.08.2012.
மன்னார் நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களை மீறிச் செயற்பட்டுள்ளதாக சபநாயகர் சமால் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றில் ஆற்றும் உரை தொடர்பில் வெளிநபர்கள் அச்சுறுத்தல் விடுக்க முடியாது.
மன்னார் நீதவான், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசெய்ன் பாருக்கை அச்சுறுத்தியதாக சுமத்தப்பட்ட குற்ற்சாட்டு தொடர்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“நீ நாடாளுமன்றில் என்னைப் பற்றி பேசினாய் அல்லவா, போராட்டத்தில் நீ கலந்து கொண்டாய் அல்லவா என” என மன்னார் நீதவான் தம்மை அச்சுறுத்தியதாக ஹுசெய்ன் பாருக் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 78 நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் அடிப்படையில் இதனை வரப்பிரசாத பிரச்சினையாக கருதப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வரப்பிரசாத பிரச்சினை ஏற்பட்டிருந்தால் அதற்காகக் குரல் கொடுக்கத் தயார். எனினும் இது வரப்பிரசாத பிரச்சினையா அல்லது நீதிமன்றத்தின் மீது அழுத்தம் பிரயோகித்த சந்தர்ப்பமா என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், 78 நிலையியற் கடட்ளை இதற்கு பொருந்தாது எனவும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது தமது பொறுப்பு எனவும் சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் ஆற்றிய உரை தொடர்பில் எவராலும் கேள்வி எழுப்ப முடியாது. இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

0 comments:

கருத்துரையிடுக