siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 17 அக்டோபர், 2012

வாலிபருடன் பேசிய 15 வயது பெண்ணுக்கு பொதுமக்கள் முன்னிலையில் 60 கசையடிகள்.




Wednesday  17  October  2012 By.Rajaj.
வாலிபருடன், தெருவில் நின்று பேசிய சிறுமிக்கு, மாலி நாட்டில், 60 சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது.

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், உள்ள திம்புக்டு பகுதி, இஸ்லாமிய பழமைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, அன்னிய ஆண்களுடன் பெண்கள் பேசுவது குற்றமாக கருதப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, வாலிபர் ஒருவருடன், அடிக்கடி தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தார். இதை கண்ட போலீசார், அந்த பெண்ணை நான்கு முறை, எச்சரித்து அனுப்பினர்.

மீண்டும் அந்த பெண், அதே வாலிபருடன் தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்ததால், உள்ளூர் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டார். இந்த பெண்ணுக்கு, 60 சாட்டையடிகள் கொடுக்கும் படி, பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.இதையடுத்து, பொது மக்கள் முன்னிலையில் நேற்று, இந்த பெண்ணுக்கு, 60 சாட்டையடிகள் கொடுக்கப்பட்டன

மலாலா குணமடைவார்: பிரிட்டன் மருத்துவர்கள் நம்பிக்கை

         
Wednesday 17 October 2012  By.Rajah.
தலிபான்களால் சுடப்பட்டு, பிரிட்டன் கொண்டு செல்லப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் உடல்நிலை நல்லமுறையில் தேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று பிரிட்டன் மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் சிறுமி மலாலா (14) உயர் சிகிச்சைக்காக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டு, பர்மிங்ஹாமில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இம்மருத்துவமனை, போரில் ஈடுபட்டு பலத்த காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதில் நிபுணத்துவம் பெற்றதாகும்.

மலாலாவின் உடல்நிலை ஒவ்வொரு படிநிலையிலும் நன்றாகக் குணமடையும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மருத்துவமனை இயக்குநர் டேவ் ரோஸர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மலாலா குணமடைய சில மாதங்களாகும். மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அவருக்கு வழங்கப்படும். 10 ஆண்டுகள் அனுபவம் மிக்க ராணுவ டாக்டர்கள் மலாலாவுக்கு சிகிச்சை அளிக்கின்றனர் என்றார் ரோஸர்.

தலிபான் தலைவரின் தலைக்கு சன்மானம்: சிறுமி மலாலா மீது தாக்குதல் நடத்திய தெஹ்ரிக் இ தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவரின் தலைக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.31 கோடி) சன்மானம் வழங்கப்படும் என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தனியார் தொலைக்காட்சிக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: இந்த சதித்திட்டம் ஆஃப்கானிஸ்தானில் தீட்டப்பட்டுள்ளது. எல்லைக்கு அப்பாலிருந்து நான்கு பேர் வந்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளோம்.

தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதால், அந்த அமைப்பின் தலைவரின் தலைக்கு ரூ.5.3 கோடி சன்மானம் அளிக்கப்படும்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் தேடி வருகின்றன.

தலிபான்களை பாகிஸ்தானியர்கள் விரும்பவில்லை. அவர்களின் பயங்கரவாதச் செயல்களால் நாங்கள் 40ஆயிரம் அப்பாவி மக்களையும், 16ஆயிரம் படைவீரர்களையும் இழந்துள்ளோம் என்றார் ரஹ்மான் மாலிக்.

வீர தீர விருது: ரஹ்மான் மாலிக் மேலும் கூறுகையில், "மலாலாவுக்கு பாகிஸ்தான் நாட்டின் வீர தீரச் செயல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்றான "சிதாரா இ சுஜாத்' விருது வழங்கப்படும்' என்றார்.

இஸ்ரேலில் நாடாளுமன்றம் கலைப்பு

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah.
இஸ்ரேலில் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தால், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவருடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது.
இந்நிலையில் சிக்கன நடவடிக்கையை பின்பற்றும் வகையில், பட்ஜெட் தயாரிக்க ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒத்துழைக்காத காரணத்தால் பிரதமர் விரைவில் தேர்தலை நடத்த போவதாக கூறியிருந்தார்.
இதன் படி 120 பேர் கொண்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதமே(அக்டோபர், 2013) மாதமே தேர்தல் நடைபெறுவதாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் இத்தேர்தலில் பிரதமர் தலைமையிலான லிகுத் கட்சி வெற்றி பெற அதிகளவு வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு முன்பே வாக்களித்தார் மிஷெல் ஒபாமா

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்கூட்டியே வாக்குபதிவு செய்யும் நடைமுறையின் கீழ் மிஷெல் ஒபாமா வாக்களித்தார். இது குறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் மிஷெல் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பே வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். இந்நடைமுறையின் படி, ஒபாமாவின் மனைவி மிஷெல், ஒபாமாவுக்கு வாக்களித்தார்.
மிஷெலைத் தொடர்ந்து ஒபாமாவும் அக்டோபர் 25ஆம் திகதி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கப் போவதாக தன் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அப்படி அவர் வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தல் தினத்தில் வாக்களிக்காத முதல் ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷெல் வாக்களித்ததை பிரதானப்படுத்திச் செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், முன்கூட்டியே வாக்களித்தவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் ஒபாமா முன்னிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஒபாமாவின் முன்னிலையை விரைவிலேயே பொய்யாக்குவோம் என்று மிட் ரோம்னியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்?

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah.
தகவல் அளித்தால் ரூ.10 கோடி பரிசு பாகிஸ்தானில் சிறுமி மலாலா மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு, ரூ.10 கோடி ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி குழந்தைகளின் கல்விக்காகவும், தலிபான்களை எதிர்த்தும் போராடிய மலாலா மீது, கடந்த சில நாட்களுக்கு முன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
இதில் தலை மற்றும் கழுத்தில் குண்டுகள் பாய்ந்தன. பலத்த காயமடைந்த மலாலா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. இருப்பினும் மலாலாவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மலாலா நேற்று முன்தினம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது பாதுகாப்பு காரணங்களையொட்டி ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தீவிரவாதிகள்தான் இந்த கொடூர செயலை செய்துள்ளனர்.
சிறுமி மலாலா, வீரத்தின் அடையாளம். அவருக்கு நாட்டின் மிக உயரிய வீரதீர விருதான சிதாரா- இ- சுஜாத் அளிக்கப்படும்.
சிறுமி மீது தாக்குதல் நடத்துவதற்காக 4 பேர் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளனர். இவர்களில் ஒருவனது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு உதவிய சிலரையும், அவர்களுக்கு பண உதவி செய்த ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மலாலா மீது தாக்குதல் நடத்தியது தாங்கள்தான் என்று பாகிஸ்தான் தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் இஷானுல்லா இஷான் தெரிவித்துள்ளார்.
அவரையும், மலாலாவை சுட்ட தீவிரவாதிகள் குறித்தும் தகவல் தருபவர்களுக்கு ரூ,10 கோடி பரிசு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்

சிறிய ஏவுகணை மூலம் ஒசாமாவை கொலை

 
 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah.
செய்ய திட்டமிட்ட அமெரிக்கா: புதிய தகவலால் பரபரப்புசர்வதேச தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடி படையினர் கடந்தாண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பாக நடைபெற்ற இரகசிய ஆலோசனைகள், அமெரிக்கா உருவாக்கிய யுக்திகள் குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் நவீன மேஜிக் குண்டு தயாரித்து ஒசாமாவை கொலை செய்ய திட்டமிட்டது குறித்து மார்க் போவ்டன் என்பவர் தனது தி பினிஷ் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ஒசாமாவை கொலை செய்வதற்கு முன்பாக பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அதில் நவீனரக மேஜிக் குண்டு மூலம் கொலை செய்வது குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இக்குண்டு நவீன ரக சிறிய ஏவுகணையை போன்று செயல்படும்.
இதனை உளவு விமானத்தின் மூலம் ஏவினால், குறிப்பிட்ட நபரை மட்டுமே தாக்கும். அருகில் இருக்கும் மற்ற நபர்களுக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படாது.
எனவே ஒசாமா தனியாக வரும்போது அவரை இலக்கு வைத்து தாக்கவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த ஏவுகணை குறி தவறி மற்ற நபரை தாக்கினால் என்ன செய்வது? ஒசாமா கொல்லப்பட்டு விட்டார் என்பதை எவ்வாறு உறுதி செய்வது? போன்ற கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டு, அதிரடி படையை அனுப்பி கொலை செய்வதே இறுதியானது என்பது முடிவு செய்யப்பட்டது

4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012.By.Rajah.
நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது.
அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.
இதுவரை ஆராய்ச்சியாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.

மரண ஊர்வலத்தில் உடைந்த பொலிஸ் மண்டைகள்

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு பகுதியில் முஸ்லிம்களின் சவ அடக்கம் செய்யும் இடம் உள்ளது. இந்த இடத்தின் பின்புறமாக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் வசித்து வந்த ஜெ. பேரவை முன்னாள் வட்டச்செயலாளர் வேலு மரணம் அடைந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை முஸ்லிம்களின் சவ அடக்கம் செய்யும் இடம் வழியாக கொண்டுவர வேலுவின் உ றவினர்கள் முயற்சித்தனர். சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை என்று போலீஸ் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் வேலுவின் உடலை எடுத்துக்கொண்டு பிரச்சனைக்குரிய வழியாக தடையை மீறி ஒரு கும்பல் வேகமாக வந்தது. இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச்சேர்ந்த ராஜுவ்காந்தி, இளையராஜா ஆகியோர் மீது திடீரென சில விசமிகள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இருவருக்கும் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூவலிங்கம் கையிலும் கல் விழுந்து காயம் ஏற்பட்டது. அவருக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மயங்கி கீழே சாய்ந்தார். பின்னர் மூவரும் ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விடுதலை செல்வம் உட்பட 11 பேர் இச்சம்பவம் தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். துணை கமிஷனர்கள் புகழேந்தி,சரவணன்,பவானீஸ்வரி,உதவி கமிஷனர்கள் செந்தில்குமரன், ரவிஷேகர் தலைமையில் நூற்றுக்கணக்கான இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அந்தப்பகுதியே இரண்டு மணி நேரமாக போர்க்களம் போல் காட்சியளித்தது.