siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 17 அக்டோபர், 2012

தேர்தலுக்கு முன்பே வாக்களித்தார் மிஷெல் ஒபாமா

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்கூட்டியே வாக்குபதிவு செய்யும் நடைமுறையின் கீழ் மிஷெல் ஒபாமா வாக்களித்தார். இது குறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் மிஷெல் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆனால் அமெரிக்காவில் வாக்குப்பதிவு தினத்துக்கு முன்பே வாக்குகளைப் பதிவு செய்ய முடியும். இந்நடைமுறையின் படி, ஒபாமாவின் மனைவி மிஷெல், ஒபாமாவுக்கு வாக்களித்தார்.
மிஷெலைத் தொடர்ந்து ஒபாமாவும் அக்டோபர் 25ஆம் திகதி, இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கப் போவதாக தன் டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அப்படி அவர் வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தல் தினத்தில் வாக்களிக்காத முதல் ஜனாதிபதி வேட்பாளராக ஒபாமா இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிஷெல் வாக்களித்ததை பிரதானப்படுத்திச் செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், முன்கூட்டியே வாக்களித்தவர்களிடம் எடுத்த கருத்துக்கணிப்பில் ஒபாமா முன்னிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளன.
ஒபாமாவின் முன்னிலையை விரைவிலேயே பொய்யாக்குவோம் என்று மிட் ரோம்னியின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.