siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 17 அக்டோபர், 2012

4 சூரியன்களை கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிப்பு

 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012.By.Rajah.
நான்கு சூரியன்களால் ஒளி பெறும் புதிய கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பிளானட் ஹண்டர்ஸ் என்கிற இணையத்தளமும், ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் வானியல் ஆய்வு மையங்களும் இணைந்து இந்த கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர்.
எனவே இந்த கிரகத்திற்கு பிளானட் ஹண்டர்ஸ் இணையத்தின் பெயரை குறிக்கும் வகையில் இதற்கு பிஎச்1 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
பூமியிலிருந்து சுமார் ஐந்தாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகம் இரண்டு சூரியன்களை சுற்றிவருகிறது.
அதேசமயம் வேறு இரண்டு சூரியன்களும் இந்த இரண்டு சூரியன்களை சுற்றிவருகின்றன. எனவே இந்த குறிப்பிட்ட கிரகத்திற்கு நான்கு சூரியன்களின் ஒளியும் கிடைக்கும்.
இதுவரை ஆராய்ச்சியாளர்கள் ஒரு சூரியனால் ஒளி பெறும் கிரகங்கள், இரண்டு சூரியன்களால் ஒளி பெறும் கிரகங்களை மட்டுமே கண்டறிந்திருக்கும் பின்னணியில், நான்கு சூரியன்களால் ஒளிபெறும் இந்த புதிய கிரகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது.