உக்ரைனின் கிவி என்ற இடத்தில் உள்ள பெமன் அமைப்பின் தலைமையகத்தை பொலிசார் சோதனையிட்டதில், துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெர்லினில் உள்ள உக்ரைன் தூதரகம் முன்னால் பெண்கள் மேலாடையின்றி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர்களது உடம்பில் “எனது உடம்பே எனக்கு ஆயுதம், எனது மார்பகமே வெடிகுண்டுகள்” போன்ற வார்த்தைகளை எழுதியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நிறுவனர் ஜனா ராமணான்டி(வயது 29)கூறுகையில், எங்கள் தலைமையகத்தில் எடுக்கப்பட்ட ஆயுதங்களானது பொலிசாரால் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை.
மேலும் நாங்கள் திட்டமிட்டு இந்த போராட்டத்தினை நடத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த குழுவை சேர்ந்தவர்களில் 3 நபர்கள் கடந்த மாதம் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் வருகையை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது