siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 13 ஏப்ரல், 2013

தொழில் நடத்துவது கடினம்: நெஸ்ட்லே ?,?


சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டங்கள் கடுமையாகிக் கொண்டிருப்பதால் இந்நாட்டில் தொழில் நடத்துவது எங்களுக்குக் கடினமாக இருக்கின்றது என்று உலகில் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனத்தின் தலைவரான பிராபெக் லெட்மாதே( Brabeck-Letmathe) தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையே புதிய கருத்தொற்றுமை நிலவவேண்டும்.
மேலும் இந்த மூன்று துறைகளிலும் தொழில் நடத்துவதில் ஏற்படும் சிரமங்களையும், சவால்களையும் புரிந்து கொண்டால் மட்டுமே சமனிலையில் நின்று தொழில்துறையை ஊக்குவிக்க முடியும் என்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த லெட்மாதே விரிவாக தெரிவித்துள்ளார்.
 

இரத்த வெறி பிடித்துவிட்டது: ஓரினச் சேர்க்கை,.,,,



பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளருக்குத் திருமண அந்தஸ்தும், குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையும் தரலாம் என்று நேற்று பிரெஞ்சு மேலவையில் மசோதா தாக்கலானது.
இதனால் வெகுண்டெழுந்த ஓரினச் சேர்க்கை எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி ஹேலாண்டுக்கு ரத்தவெறி பிடித்து அலைவதாகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
மேலும் வருகின்ற மே 26ம் நாள் அன்று பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பவர்கள் அறிவித்திருந்தனர்.
இது குறித்து மைய - வலது UMP கட்சியைச் சேர்ந்த கிறிஸ்ட்டியன் ஜேக்கப்(Christian Jacob) கூறுகையில், ஜனாதிபதி பிரெஞ்சு மக்களுடன் கடுமையாக மோதுகிறார் என்றும் இது ஒரு உள்ளூர்ப் போர் எனவும் சாடிவுள்ளார்
 

கண்காணிப்பாளர்களில்லாமல் பேசமுடிவதில்லை ?


சர்வதேச செஞ்ச்சிலுவைசங்கத்தினர், உலக நாடுகளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளைச் சந்தித்து பேசி, குற்றவாளிகளின் மனநிலையை சீராக்கவும், அவர்களது மனச்சுமைகளைக் குறைக்கவும் உதவுவர்.அவர்கள் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது யாருடைய குறுக்கீடும் இன்றி, தனிமையில் பேசுவது, குற்றவாளிகளுக்கும் எளிதான சூழ்நிலையை உருவாக்கும். ஆனால், உஸ்பெகிஸ்தானில் நிலைமை அதுபோல் இல்லை என்றும், கண்காணிப்பாளர்கள் இல்லாமல் தங்களால் குற்றவாளிகளுடன் தனிமையில் பேச முடிவதில்லை என்றும், அது அவர்களுக்கு எந்தப் பலனையும் ஏற்படுத்தாது என்றும் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்விஸ் டெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
எனவே, தங்கள் உறுப்பினர்கள் அந்நாட்டு சிறைக்கைதிகளை இனி சந்திக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இதுபோல் ஒருபோதும் நிகழ்வதில்லை என்றும், இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் டெக்கார்ட் குறிப்பிட்டார்.
செஞ்சிலுவை சங்கத்தினரின் முடிவு குறித்து, உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவின் மனித உரிமை குறித்த செயல்பாடுகள், மேற்கத்திய பிரச்சாரக் குழுக்களிடையே, எப்போதுமே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. முறையான அரசியல் எதிர்க்கட்சிகள் என்று எதுவும் இல்லாத நிலையில், அந்நாட்டு ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன

: தலிபான்களின் தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள்


ஆப்கானிஸ்தானில் தற்போது சாதகமான பருவநிலை நீடிப்பதால் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான தீவிரவாதிகள் மலைவழியாக கிழக்கு ஆப்கானிஸ்தானுக்குள் சுலபமாக ஊடுருவி விடுகின்றனர்.இப்படி ஊடுருவிய தீவிரவாதிகள் உள்ளூர் தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.  குனார் மாகாணம், நாரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கூடாரம் மீது நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அந்த ராணுவ கூடாரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதீன் கூறினார்

ஓரினச்சேர்க்கைக்கான அகராதிப் பொருள் கண்டுபிடிப்பு/;


பிரான்சில் ஆண்களும் பெண்களும் தமக்குள் ஒரு பால் மண உறவு கொள்வதை சட்டம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், லாரோஸ்(Larousse) அகராதி ஒருபால் உறவையும் திருமணம் என்று பொருள் தந்துள்ளது.
இந்த அகராதியானது எதிர்வரும் 2014ம் ஆண்டில் வெளிவரும் இதில் திருமணம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரப்பட்டுள்ளது.
அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரோ வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவரோ இணைந்து வாழ தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் தந்துள்ளது.
முந்தைய அகராதிகளில் திருமணம் என்ற சொல்லுக்கு, ஆணும் பெண்ணும் இணைந்து வாழ நாட்டின் சட்டப்படி நடைபெறும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் காணப்பட்டது. புதிய அகராதி தேசியச் சட்டப்படி என்பதை நீக்கிவிட்டது. ஆணும் பெண்ணும் என்பதையும் மாற்றிவிட்டது.
வருகின்ற வாரங்களில் பிரெஞ்சு மேலவையில் ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா இயற்றப்படும். இந்த சூழ்நிலையில் இந்த அகராதியைச் சிலர் பாராட்டுகின்றனர். ஆனால் UMP கட்சியைச் சேர்ந்த ஹெர்வி மேரிட்டோன் என்பவர் ஒரு பால் உறவை கடுமையாக எதிர்த்தைப் போல இந்த அகராதியையும் எதிர்த்துள்ளார்.
மேலும் அகராதியில் இவ்வாறு பொருள் கூறி இருப்பது நாட்டின் ஜனநாயகப் பண்புக்கு எதிரானது என்றும் இப்போக்கை கடுமையாகக் கண்டித்து ஒடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இக்கட்சியின் துணைத்தலைவரான லாரண்ட் வக்கீசும் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதற்கிடையே இந்த அகராதியின் வெளியீட்டாளர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் திருமணம் என்பதற்கான பொருள் மாறி வருவதையே நாங்கள் அகராதியில் தெரிவித்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.