siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 13 ஏப்ரல், 2013

: தலிபான்களின் தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள்


ஆப்கானிஸ்தானில் தற்போது சாதகமான பருவநிலை நீடிப்பதால் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான தீவிரவாதிகள் மலைவழியாக கிழக்கு ஆப்கானிஸ்தானுக்குள் சுலபமாக ஊடுருவி விடுகின்றனர்.இப்படி ஊடுருவிய தீவிரவாதிகள் உள்ளூர் தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.  குனார் மாகாணம், நாரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கூடாரம் மீது நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அந்த ராணுவ கூடாரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதீன் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக