siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 13 ஏப்ரல், 2013

கண்காணிப்பாளர்களில்லாமல் பேசமுடிவதில்லை ?


சர்வதேச செஞ்ச்சிலுவைசங்கத்தினர், உலக நாடுகளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளைச் சந்தித்து பேசி, குற்றவாளிகளின் மனநிலையை சீராக்கவும், அவர்களது மனச்சுமைகளைக் குறைக்கவும் உதவுவர்.அவர்கள் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது யாருடைய குறுக்கீடும் இன்றி, தனிமையில் பேசுவது, குற்றவாளிகளுக்கும் எளிதான சூழ்நிலையை உருவாக்கும். ஆனால், உஸ்பெகிஸ்தானில் நிலைமை அதுபோல் இல்லை என்றும், கண்காணிப்பாளர்கள் இல்லாமல் தங்களால் குற்றவாளிகளுடன் தனிமையில் பேச முடிவதில்லை என்றும், அது அவர்களுக்கு எந்தப் பலனையும் ஏற்படுத்தாது என்றும் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்விஸ் டெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
எனவே, தங்கள் உறுப்பினர்கள் அந்நாட்டு சிறைக்கைதிகளை இனி சந்திக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இதுபோல் ஒருபோதும் நிகழ்வதில்லை என்றும், இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் டெக்கார்ட் குறிப்பிட்டார்.
செஞ்சிலுவை சங்கத்தினரின் முடிவு குறித்து, உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவின் மனித உரிமை குறித்த செயல்பாடுகள், மேற்கத்திய பிரச்சாரக் குழுக்களிடையே, எப்போதுமே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. முறையான அரசியல் எதிர்க்கட்சிகள் என்று எதுவும் இல்லாத நிலையில், அந்நாட்டு ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன

0 comments:

கருத்துரையிடுக