
அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு மாற்றத்துக்குத் தொடக்கமாகத்தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் முதன்முதலில் அங்கே அதிபராகத் தேர்வானார். அதை உலகம் பாராட்டியது. அதே நேரத்தில், அமெரிக்கா பின்னுக்குப்போன ஒரு தலைகீழ் மாற்றமாகவும் உலகத்தை வருத்தப்பட வைப்பதாகவும் அது இருந்தது.
எழுத்தாளர் நடைன் கார்டிமர் கொல்கத்தா வில் 2008 நவம்பரில் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். „பாதி கறுப்பர்தான் ஒபாமா“ என்றார் அவர். நோபல் பரிசு பெற்ற அந்த எழுத்தாளர் மேலும் ஒரு வரி...