siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 23 ஜனவரி, 2013

கவலையில் அமெரிக்க, கனடா, பிரிட்டன் பெண்கள்

மூதாதையர்களை விட, நவீன கால பெண்கள் மிகவும் பலவீனமாக உள்ளனர்; குறைவாக சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது போன்றவைதான் இதற்கு முக்கிய காரணம்' என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து தெற்கு ஆஸ்திரேலிய பல்கலைக் கழகத்தின் மருத்துவ அறிவியல் துறையின் பேராசிரியர் கிராண்ட் டாம்கின்சன் கூறியதாவது: பிரிட்டன், அமெரிக்கா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு உடல் வலிமை குறைந்துவிட்டது. சாதாரண உடற்பயிற்சியான உட்காருதல், எழுதல் போன்றவை கூட, 8 முதல் 10 சதவீதம் குறைந்துவிட்டது. 1985ம் ஆண்டு வரை, உடல் வலிமையில் எந்தவிதமான பிரச்னைகளும் இருந்ததில்லை, அதற்குப் பின், உடல் எடை கூடியுள்ளதே தவிர, உடல் பலம் கூடவே இல்லை. நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. குறிப்பாக, பெண்களே இதில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார். லண்டனை சேர்ந்த முட நீக்கியல் நிபுணர் சமி மார்கோ கூறுகையில், " பெண்கள் உடல் பருமனுடன் இருக்கிறார்கள் ஆனால், அதற்கேற்ற பலம் அவர்களிடத்தில் இல்லை' என்றார்.பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் உடற்பயிற்சி மற்றும் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கென் பாக்ஸ் கூறியதாவது:உடல்பலம் குறைவுதான் பெரும்பாலான நோய்களின் பிறப்பிடமாக உள்ளது. எலும்பு முறிவு, மூட்டுவலி, முதுதண்டு வலி போன்ற உபாதைகளுக்கு இதுவே மூலகாரணம். தங்களின் உடலை மெலிதாக வைத்துக் கொள்ளவே பெண்கள் விரும்புகிறார்கள். இதனால், அதிகமாக சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சிகளையும் செய்வதில்லை. உடல் ஆரோக்கியத்துக்கு இது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறினார்

விண்வெளியில் இருந்து நேரடியாக உரையாடிய Chris Hadfield

டொரண்டோவில் தனது பெயரில் இயங்கும் பள்ளி மாணவர்கள் சுமார் 800 பேர்களுடன் நேரடியாக உரையாடினார் Chris Hadfield என்னும் விண்வெளி வீரர். அதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.தனது பெயரில் டொரண்டோ அருகில் இயங்கும் Chris Hadfield Public School மாணவர்களுடன் நேரடியாக விண்வெளியில் இருந்து உரையாடும் சம்பவம் ஒன்று கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்தது. இதில் சுமார் 800 மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கேட்ட கேள்விகளுக்கு சிறப்பாக பதிலளித்தார் Chris Hadfield.பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகன்ற திரையில் திடீரன Chris Hadfield உருவம் தெரிந்து, அவர் பேச ஆரம்பித்தவுடன் மாணவ மாணவிகள் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பல மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையுடன் பதிலளித்தார் விண்வெளி வீரர்ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வகுப்புக்கு ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரிடம் வரிசையாக தங்களுடைய வானவியல் சந்தேகங்களை குறித்த கேள்விகளை கேட்டனர்ஆறாம் கிரேடு படிக்கு ஒரு மாணவி "புவியீர்ப்பு இல்லாத விண்வெளியில் உடல் எடையை அதிகரிக்காதவாறு இருக்க எவ்வகை முயற்சிகளை செய்தீர்கள்" என்ற கேள்விக்கு பதிலளித்த விண்வெளி வீரர், "தினமும் இரண்டு மணிநேரம் கடுமையான உடற்பயிற்சி செய்து, உடல் எடை சீராக வைத்திருக்கிறேன்" என்று கூறினார். மேலும் விண்வெளியில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது என்றும் மேல்பகுதி எது? கீழ்பகுதி எது? என்றே தெரியாமல் மிதந்து கொண்டிருப்பதால், இரத்த ஓட்டம் சீராக இருப்பது.{புகைப்படங்கள்}
தடைபடுகிறது என்றும் அதற்காக சிறப்பு உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாகவும் கூறினார்.