siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 23 ஜூலை, 2012

ஊவா மாகாண தமிழ்ப் பட்டதாரி ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரல்

ஊவா மாகாண தமிழ்ப் பட்டதாரி ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரல் _
24.07.2012
ஊவா மாகாணத்தில் தமிழ்ப் பட்டதாரி ஆசியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்~வுடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு ஏற்ப உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊவாமாகாண பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான, கணித, வர்த்தக, பாடங்களைக் கற்பிப்பதற்கான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், பதுளை மற்றும் வெளி மாவட்ட பட்டதாரிகள் விண்ணப்பங்களை ஊவாமாகாண கல்வியமைச்சுக்கு உடன் அனுப்பும்படியும் அவர் தெரிவித்தார்

மைக்கேல் ஜாக்சனின் தாயார் காதரீன் மாயம்

 23 யூலை 2012,
மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தாயார் காதரீன்(வயது 82), மாயமாகி விட்டதாக நேற்று தகவல் வெளியானது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தங்கியிருந்த காதரீனை சில நாட்களாக காணவில்லை என்று மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தெரிவித்தார்.
ஆனால் தனது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும் காதரீனின் மகன் ஜெர்மெய்ன் ஜாக்சன் தெரிவித்துள்ளார்.
மறைந்த பொப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் குழந்தைகளுக்கு காதரின் பாதுகாவலராக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் 10,000 பேருக்கு SMS மூலம் கொலை மிரட்டல்

 23 யூலை 2012
அவுஸ்திரேலியாவில் 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் SMS மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்த SMSல், உங்களைக் கொல்வதற்காக ஒருவர் எனக்கு பணம் கொடுத்துள்ளார். நீங்கள் 48 மணிநேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்குள் எனக்கு 5,000 டொலர் அனுப்ப வேண்டும்.
இதை பொலிசிடமோ அல்லது வேறு யாரிடமோ கூறினால் நீங்கள் கொல்லப்படுவீர்கள். killerking247@yahoo.com என்ற முகவரியில் தொடர்பு கொண்டு உடனடியாக எனக்கு பணம் அனுப்பவும் என கூறப்பட்டிருந்தது.
இந்த SMS-ஐ அனுப்பியவர் யார் என்பது குறித்தும், எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்தும் பொலிசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
எனினும் இதில் உண்மையில்லை என்றும், இது குறித்து மக்கள் கவலைப்பட தேவையில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தான்சானியா படகு விபத்தில் 146 பேர் பரிதாப மரணம்: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

 23 யூலை 2012,
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 146 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியாவின் தர் எஸ் சலாம் என்ற நகரில் இருந்து ஜான்ஜிபார் தீவுக்கு கடந்த புதன்கிழமை படகு சென்று கொண்டிருந்தது. அதில் 291 பயணிகள் இருந்தனர். படகில் 250 பேர் வரை பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற படகு, இந்திய பெருங்கடலில் மூழ்கியது. படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று பலரை காப்பாற்றினர். அதற்குள் நீரில் மூழ்கி பலர் இறந்தனர். பலர் காணாமல் போயினர்.
இதுகுறித்து அதிகாரி அலி ஜுமா ஷம்ஹுனா கூறுகையில், இதுவரை வெளிநாட்டினர் உள்பட 145 பேரை உயிருடன் மீட்டோம். 69 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும் 77 பேர் காணவில்லை.
கடந்த 3 நாட்களாக அவர்களை தேடும் பணி நடந்தது. யாரும் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் ஆனதால் இனிமேல் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டு விட்டது என்றார்.
இதற்கிடையே இறந்தவர்களை அடையாளம் காணுவதற்காக உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அழுகி விட்டதால் அந்த பணியும் நிறுத்தப்பட்டு சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டன.

தனியாக கடைக்கு செல்லும் பெண்களை கைது செய்ய உத்தரவு

23.07.2012.
பாகிஸ்தானில் பழங்குடியின பகுதியில் ஆண்களின் துணை இல்லாமல், தனியாக கடைக்கு செல்லும் பெண்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர்.
இங்கு பெண்கள் பள்ளிக்கூடம் செல்வது கூட குற்றமாக கருதப்படுகிறது. இதற்கிடையே ரம்ஜான் மாதம் தொடங்கியதையடுத்து, கைபர் பக்துன்க்வா என்ற மாகாணத்தில் உள்ள செராய் நவுரங் என்ற நகரில் வசிக்கும் பழங்குடியின தலைவர்கள், டி.எஸ்.பி அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதன் படி ரம்ஜானுக்கு, எந்த பெண்ணும், ஆண் துணையில்லாமல் கடைக்கு செல்லக் கூடாது. மீறி செல்லும் பெண்கள் கைது செய்யப்படுவார் என இந்த கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் கன்டனம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க போர் விமானம் கடலில் விழுந்தது: விமானியின் கதி என்ன

 23 யூலை 2012
ஜப்பான் நாட்டின் அருகே, அமெரிக்காவுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று கடலில் விழுந்தது. அமெரிக்காவின் அமோரி விமானப் படைத் தளத்திலிருந்து எப்-16 ரக போர் விமானம் புறப்பட்டு சென்றது.
இந்த விமானம் நேற்று காலை 7.30 மணி அளவில் ஜப்பான் நாட்டின் அருகே உள்ள பசிபிக் கடலில் விழுந்தது.
இந்த போர் விமானத்தை ஒரே ஒரு விமானி தான் ஓட்டிச் சென்றார். அவர் கதி என்ன? என்று தெரியவில்லை.
இச்சம்பவம் குறித்து ஜப்பான் அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறிந்து ஆராய்ந்து வருகிறோம், அதேவேளை விமானியை மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது என்று தெரிவித்தனர்

மட்.உதயபுரம் ஸ்ரீவடபத்திரகாளிம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி

23.07.2012
ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு,பெரியகல்லாறு,உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளிம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி மற்றும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்றன.

இன்றுகாலை பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையுடன் அங்கிருந்து பால் கலசங்களுடன் பாற்குட பவனி ஆரம்பமானது.

பாற்குட பவனியானது ஆலயத்தை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அடியார்களும் தங்கள் கைகளினால் பாலபிஷேகம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை இடம்பெற்றுதுடன் கும்பம் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் விசேட தீப,நாத,கீத அலங்காரங்களால் அன்னைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து மகேசுர பூசையும் இடம்பெற்றது.
___

அசிட் ஊற்றி கணவனை கொன்ற மனைவி

23.07.2012.பெல்மதுளை நாராங்கொட தோட்டத்தில் கணவனை அசிட் ஊற்றி கொன்ற மனைவியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதிமன்ற நீதிவான் சாந்தினி நிரஞ்சலா டயஸ் உத்தரவிட்டுள்ளார்.

பெருமாள் ராஜேந்திரன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மனைவியின் அசிட் வீச்சில் இறந்தவராவார்.

தினமும் குடிபோதையில் வரும் கணவன் வீட்டில் குழப்பம் விளைப்பதும் மனைவியை அடிப்பதும் ஏசுவதும், பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடாமல் செய்வதையும் வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 25ஆம் திகதி மனைவி, பிள்ளைகள் இருவரையும் வேறொரு வீட்டில் வைத்து விட்டு கணவன் வரும் வரை வீட்டிலிருந்துள்ளார். வழமைபோல கணவர் சத்தம் போட்ட போது மனைவி அசிட்டை தலையில் ஊற்றியுள்ளார் என காவத்தை பொலிஸாரின் தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவ நேரத்தில் மனைவி கணவன் குடிபோதையில் அசிட்டை ஊற்றிக் கொண்டார் என கத்திய போது அயலவர்கள் வந்து கணவனை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு கடந்த 30 திகதி சிகிச்சை பயனளிக்காது இறந்துள்ளார். கணவன் மீது யாரோ அசிட்டை ஊற்றியதாகவும் கத்தியுள்ளார். இரத்தினபுரி வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் அசிட் வேறொருவரால் ஊற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவத்தை பொலிஸார் மனைவியை தொடர் விசாரணை மேற்கொண்டதன் மூலம் மனைவியை 04ஆம் திகதி புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பெல்மதுளை நீதிமன்றத்தில் சந்தேக நபரான மனைவியை ஆஜர் செய்த போது 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

பெண், கள்ளக் காதலனை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி அடித்த ஜாதி சபை

23.07.2012 .
ராஜஸ்தான் கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை, திருமணமான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனாவுக்கும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த கிராமத்தினர் அவர்களைத் தேடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியைக் கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்தில் கட்டி வைத்து, அவர்களை நிர்வாணமாக்கி அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மீது கிராமத்தினர் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஒரு பொலிஸ் குழு வந்து அந்த இருவரையும் கிராமத்தினரிடம் இருந்து மீட்டது. அந்தக் கள்ளக்காதல் ஜோடி தற்போது பொலிசாரின் பாதுகாப்பில் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ஜாதி சபையினரையும், கிராமத்தினரையும் கைது செய்ய முயன்று வருகின்றனர்

ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பொலிஸ் சகோதரன் _


பாகிஸ்தானில் தனது எதிர்ப்பையும் மீறி, ஜீன்ஸ்
அணிந்ததற்காக தனது சகோதரியை பொலிஸ் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றுள்ளார்.லாகூர் நகரில் சதாரா என்ற பகுதியைச் சேர்ந்த அசாத் அலி பொலிஸ்
உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். இவரது சகோதரியான நஜ்மாபிபி ஜீன்ஸ் பேன்ட்
அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சகோதரர் அலி கண்டித்துள்ளார்.ஆனால்
அதை நஜ்மா பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக்
கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என சில நாட்களுக்கு முன்பு எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, சகோதரரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று சதாரா காவல் நிலையத்தில் நஜ்மா புகார் செய்துள்ளார். ஆனால்
காவல் துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்
வெள்ளிக்கிழமை, வீட்டை விட்டு வெளியில் சென்ற நஜ்மாவைப் பின்தொடர்ந்த அலி,
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். அலியை தீவிரமாகத்
தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
23.07.2012. பாகிஸ்தானில் தனது எதிர்ப்பையும் மீறி, ஜீன்ஸ்
அணிந்ததற்காக தனது சகோதரியை பொலிஸ் நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றுள்ளார்.லாகூர் நகரில் சதாரா என்ற பகுதியைச் சேர்ந்த அசாத் அலி பொலிஸ்
உத்தியோகத்தராகக் கடமையாற்றுகின்றார். இவரது சகோதரியான நஜ்மாபிபி ஜீன்ஸ் பேன்ட்
அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை சகோதரர் அலி கண்டித்துள்ளார்.ஆனால்
அதை நஜ்மா பொருட்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இனி ஜீன்ஸ் அணிவதை நிறுத்திக்
கொள்ளாவிட்டால் கொன்றுவிடுவேன் என சில நாட்களுக்கு முன்பு எச்சரித்துள்ளார்.
இதையடுத்து, சகோதரரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், பாதுகாப்பு
வழங்க வேண்டும் என்று சதாரா காவல் நிலையத்தில் நஜ்மா புகார் செய்துள்ளார். ஆனால்
காவல் துறையினர் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில்
வெள்ளிக்கிழமை, வீட்டை விட்டு வெளியில் சென்ற நஜ்மாவைப் பின்தொடர்ந்த அலி,
துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். அலியை தீவிரமாகத்
தேடி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



பாலியல் வல்லுறவிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க மந்திரவாதிகளை நாடும் பெற்றோர்

23.07.2012 மன்னார் நீதிமன்றத்தை சுற்றிவளைத்து பிரச்சினைகளை
உருவாக்கிய அமைச்சருக்கு ௭திராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் மற்றும்
சட்டத்தரணிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றார்களெனத்
தெரிவித்த ஐ.தே.க. வின் தலைவரும், ௭திர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க
மறுபுறம் தமது பிள்ளைகளை பாலியல் வல்லுறவுகளில் இரு ந்து பாதுகாத்துக் கொள்ள
பெற்றோர் மந்திரவாதிகளை தேடிச் செல்லும் நிலைமை தோன்றியுள்ளதாகவும் சுட்டிக்
காட்டினார். நுகேகொடை தெல்கந்தை சந்தைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம்
செய்த ௭திர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொது ௭திர்க்கட்சிகளின்
தலைவர்கள் அங்கு வியாபாரிகள் மற்றும் மக்களை சந்தித்து குறை நிறைகள் மற்றும்
பொருட்களின் விலைகள் தொடர்பாகவும்கேட்டறிந்தனர். இதன் போது அங்கு பொதுமக்கள்
மத்தியில் கருத்து தெரிவித்த போதே ௭திர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
இதனைத் தெரிவித்துள்ளார்.இங்கு ௭திர்க்கட்சித் தலைவர் மேலும்
தெரிவித்துள்ளதாவது, சாஸ்திரம் சொல்பவர்கள், மந்திர வாதிகளின் தொழில் ஓகோவென
இடம்பெறுவதாக ௭ன்னிடம் தெரிவித்தனர். இதற்கு ௭ன்ன காரணம் ௭ன நான் விசாரித்தேன்.
அப்போது அவர்கள் சொன்ன பதில் ௭ன்னதெரியுமா? ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு
முதலில் நன்றி கூற வேண்டும்.ஏனென்றால் இன்று தமது பிள்ளைகள்
துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு விடுவார்களா? ௭ன்பது பற்றி தெரிந்து கொள்ள
பெற்றோர் ௭ம்மை நாடி வருகின்றனர். பிள்ளைகளுக்கு கிரக தோஷம் சரியில்லை ௭ன்று
சொன்னால் அக் கிரக தோஷம் பிள்ளைக்கு நோயை வரவழைக்குமா அல்லது பிள்ளை
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகுமா ௭ன்று தான் கேட்கின்றார்கள் ௭ன சாஸ்திரக் காரர்கள்
கூறுகிறார்கள். தமது பிள்ளைகளை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள
பெற்றோருக்கு வழியேதும் இல்லை. ௭னவே மந்திரவாதிகளை தேடிச் செல்கின்றனர். பெண்
பிள்ளை வீதியில் நடந்து செல்ல முடியாதுள்ளது. அவ்வாறு நடந்து செல்லும் பிள்ளையை அரச
தரப்பு பிரதேச சபை உறுப்பினரொருவர் கண்டால் அப்பிள்ளையை கடத்திச் சென்று பாலியல்
பலாத்காரம் செய்யும் நிலைமை உருவாகியுள்ளது. தங்க நகைகளை அணிந்து கொண்டு
தேவேந்திர முனையிலிருந்து பருத்தித்துறைவரை பாதுகாப்பாக அன்று அரசர் காலத்தில்
சுதந்திரமாக நடமாட முடிந்தது. இன்றும் நாட்டில் அரசர் ஆட்சியே உள்ளது. ஆனால் பெண்
பிள்ளையால் அரை மைல் தூரமாவது நடந்து செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
பெண்களுக்கும் இதே நிலைமை தான் உருவாகியுள்ளது. கதிர்காமத்தில் தரிசனம் செய்ய
வருவோருக்கு அப்பிரதேசத்தில் தங்குமிட வசதிகள்செய்து கொடுக்கப்படும்.
ஹிக்கடுவ பெந்தோட்டையில் உல்லாசப் பிரயாணிகளுக்கு அறைகள் ஒதுக்கிக்
கொடுக்கப்படும். ஆனால் தங்காலையில் பிள்ளைகளையும் பெண்களையும் கடத்திச் சென்று
பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோருக்கே அறைகள் ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு
நிலைமை நாட்டில் உருவாகியிருக்கும்போது பொலிஸாரால் தமது கடமைகளை சுதந்திரமாக
மேற்கொள்ள முடியாதுள்ளது. ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு சீர்குலை ந்து நாட்டில்
காட்டு தர்பார் நடக்கின்றது. ஒருபுறம் நாட்டில் பிள்ளைகளுக்கும் பெண்களுக்கும்
௭திரான குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்கையில் மறுபுறம் குற்றவாளிகள் மற்றும்
மோசடிக்காரர்களை விடுதலை செய்யுமாறு நீதிபதிகளுக்கு பல்வேறு அழுத்தங்கள்
கொடுக்கப்படுகின்றது. இதற்கு அடி பணியாததால் நீதிமன்றத்தை சுற்றி வளைத்து
தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தர்மோபதேசம் பெற்றுக்கொள்வதற்கோ, ௭தற்கோ
தெரியாது ஜுலம்பிட்டியே அமரே விடுதலை செய்யப்பட்டதை நாம் கண்டோம். மன்னார்
நீதிமன்றத்தை சுற்றிவளைத்து பிரச்சினைகளை உருவாக்கியமை தொடர்பில் அதற்கு பொறுப்புக்
கூற வேண்டிய அமைச்சருக்கு ௭திராக நடவடிக்கைகளை ௭டுக்குமாறு நீதிபதிகள் மற்றும்
சட்டத்தரணிகள் உட்பட அனைவரும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். ஆனால் ௭துவுமே
நடப்பதில்லை. பெண்களுக்கு பிள்ளைகளுக்கு சட்டத்தின் பாதுகாப்பை நியாயத்தை நீதியை
பெற்றுக் கொடுக்காது. நாட்டில் அநீதியை கோலோச்ச செய்வதா மஹிந்த சிந்தனையின் இலக்கு
௭ன்ற கேள்வி இங்கு ௭ழுகிறது. மக்களுக்கு சலுகைகளை வழங்கி, நாட்டில் சட்டம்
ஒழுங்குகள் நிலை நிறுத்தி உழைக்கும் வர்க்கத்தினருக்கு சம்பள உயர்வு போன்றவற்றை
நவம்பர் மாதத்திற்குள் அரசாங்கம் மேற்கொள்ளா விட்டால் பொது ௭திர்க் கட்சிகளுடன்
இணைந்து மக்களை வீதியில் இறக்கி அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டத்தை ஆரம்பிப்போம்
௭ன்றார்.

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து


23.07.2012


புசல்லாவ நகரத்தில் நேற்று இரவு பத்து மணியளவில் வர்த்தக நிலையமொன்று தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது.

மின் ஒழுக்கே இத்தீக்கான காரணம் எனத்தெரிவிக்கப்படுகிறது. மக்களும், பொலிஸாரும் தீயை அணைக்க போராடி முடியாது போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

எய்ட்ஸ் நோயை தடுக்கும் மருந்துக்கு எதிர்ப்பு



23.07.2012
எய்ட்ஸ் வராமல் தடுக்க, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட "த்ருவதா' என்ற புதிய மருந்து, சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
எய்ட்ஸ் நோய் தாக்கிய பிறகு, அதை முற்றிலும் சரி செய்ய இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பாதிப்பை குறைக்க ஏற்கனவே மருந்துகள் இருக்கின்றன.

தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள “த்ருவதா” என்ற புதிய மருந்து, எச்.ஐ.வி வைரஸ் பரவாமல் 73 சதவிகிதம் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இம்மருந்துக்கு எதிர்ப்பு குரலும் வலுக்கிறது.

நோயை தடுக்கும் இம்மருந்தை மக்கள் எதிர்க்க காரணம், தகாத உடலுறவு மூலம் எச்.ஐ.வி வைரஸ் பரவியிருந்தாலும் இந்த மருந்து, எய்ட்ஸ் நோயை தடுக்கும் என்பது தான் சர்ச்சைக்கு காரணம்.

இம்மருந்தால், அச்சம் நீங்கி, தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்து, சமூக ஒழுக்கம் பாதிக்கப்படும் என்பது தான் காரணம்.

எய்ட்சால் பாதிக்கப்படாத நபர் தொடர்ச்சியாக, “த்ருவதா” மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கணவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மனைவி இந்த மருந்தை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

2010ல் நடந்த ஆய்வில், "த்ருவதா' மருந்து 44 சதவீதம் எச்.ஐ.வி., பரவுவதை தடுத்தது. தொடர் ஆராய்ச்சியால், தற்போது 73 சதவீதம் தடுக்கிறது. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே நோய் பரவாது என்கின்றனர்.

பிரிட்டனில் "த்ருவதா' மருந்து எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எய்ட்ஸ் வராமல் தடுக்க பயன்படுத்துவதில்லை.சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, இம்மருந்து மீதான ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எய்ட்ஸ் நோயை தடுக்கும் மருந்துக்கு எதிர்ப்பு
[ சனிக்கிழமை, 21 யூலை 2012, 09:40.51 மு.ப GMT ]
எய்ட்ஸ் வராமல் தடுக்க, அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட "த்ருவதா' என்ற புதிய மருந்து, சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
எய்ட்ஸ் நோய் தாக்கிய பிறகு, அதை முற்றிலும் சரி செய்ய இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பாதிப்பை குறைக்க ஏற்கனவே மருந்துகள் இருக்கின்றன.

தற்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள “த்ருவதா” என்ற புதிய மருந்து, எச்.ஐ.வி வைரஸ் பரவாமல் 73 சதவிகிதம் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. இம்மருந்துக்கு எதிர்ப்பு குரலும் வலுக்கிறது.

நோயை தடுக்கும் இம்மருந்தை மக்கள் எதிர்க்க காரணம், தகாத உடலுறவு மூலம் எச்.ஐ.வி வைரஸ் பரவியிருந்தாலும் இந்த மருந்து, எய்ட்ஸ் நோயை தடுக்கும் என்பது தான் சர்ச்சைக்கு காரணம்.

இம்மருந்தால், அச்சம் நீங்கி, தவறான பழக்க வழக்கங்கள் அதிகரித்து, சமூக ஒழுக்கம் பாதிக்கப்படும் என்பது தான் காரணம்.

எய்ட்சால் பாதிக்கப்படாத நபர் தொடர்ச்சியாக, “த்ருவதா” மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். கணவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மனைவி இந்த மருந்தை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்.

2010ல் நடந்த ஆய்வில், "த்ருவதா' மருந்து 44 சதவீதம் எச்.ஐ.வி., பரவுவதை தடுத்தது. தொடர் ஆராய்ச்சியால், தற்போது 73 சதவீதம் தடுக்கிறது. இந்த மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மட்டுமே நோய் பரவாது என்கின்றனர்.

பிரிட்டனில் "த்ருவதா' மருந்து எய்ட்ஸ் நோய் சிகிச்சைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எய்ட்ஸ் வராமல் தடுக்க பயன்படுத்துவதில்லை.சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க, இம்மருந்து மீதான ஆராய்ச்சி இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.