siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 23 ஜூலை, 2012

தான்சானியா படகு விபத்தில் 146 பேர் பரிதாப மரணம்: அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு

 23 யூலை 2012,
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 146 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தான்சானியாவின் தர் எஸ் சலாம் என்ற நகரில் இருந்து ஜான்ஜிபார் தீவுக்கு கடந்த புதன்கிழமை படகு சென்று கொண்டிருந்தது. அதில் 291 பயணிகள் இருந்தனர். படகில் 250 பேர் வரை பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்ற படகு, இந்திய பெருங்கடலில் மூழ்கியது. படகில் இருந்தவர்கள் கடலில் மூழ்கி உயிருக்கு போராடினர்.
தகவல் அறிந்து மீட்புப் படையினர் விரைந்து சென்று பலரை காப்பாற்றினர். அதற்குள் நீரில் மூழ்கி பலர் இறந்தனர். பலர் காணாமல் போயினர்.
இதுகுறித்து அதிகாரி அலி ஜுமா ஷம்ஹுனா கூறுகையில், இதுவரை வெளிநாட்டினர் உள்பட 145 பேரை உயிருடன் மீட்டோம். 69 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. இன்னும் 77 பேர் காணவில்லை.
கடந்த 3 நாட்களாக அவர்களை தேடும் பணி நடந்தது. யாரும் கிடைக்கவில்லை. மூன்று நாட்கள் ஆனதால் இனிமேல் அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. அதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டு விட்டது என்றார்.
இதற்கிடையே இறந்தவர்களை அடையாளம் காணுவதற்காக உடல்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அழுகி விட்டதால் அந்த பணியும் நிறுத்தப்பட்டு சடலங்கள் புதைக்கப்பட்டு விட்டன.

0 comments:

கருத்துரையிடுக