23.07.2012. |
பாகிஸ்தானில் பழங்குடியின
பகுதியில் ஆண்களின் துணை இல்லாமல், தனியாக கடைக்கு செல்லும் பெண்களை கைது செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடியின
மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு பெண்கள் பள்ளிக்கூடம் செல்வது கூட குற்றமாக கருதப்படுகிறது. இதற்கிடையே ரம்ஜான் மாதம் தொடங்கியதையடுத்து, கைபர் பக்துன்க்வா என்ற மாகாணத்தில் உள்ள செராய் நவுரங் என்ற நகரில் வசிக்கும் பழங்குடியின தலைவர்கள், டி.எஸ்.பி அலுவலகத்துக்கு சென்று ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதன் படி ரம்ஜானுக்கு, எந்த பெண்ணும், ஆண் துணையில்லாமல் கடைக்கு செல்லக் கூடாது. மீறி செல்லும் பெண்கள் கைது செய்யப்படுவார் என இந்த கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொலிஸ் உயர் அதிகாரிகள் கன்டனம் தெரிவித்துள்ளனர். |
திங்கள், 23 ஜூலை, 2012
தனியாக கடைக்கு செல்லும் பெண்களை கைது செய்ய உத்தரவு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக