23.07.2012.பெல்மதுளை நாராங்கொட தோட்டத்தில் கணவனை அசிட் ஊற்றி
கொன்ற மனைவியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை
நீதிமன்ற நீதிவான் சாந்தினி நிரஞ்சலா டயஸ் உத்தரவிட்டுள்ளார்.
பெருமாள் ராஜேந்திரன் (வயது 38) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மனைவியின் அசிட் வீச்சில் இறந்தவராவார்.
தினமும் குடிபோதையில் வரும் கணவன் வீட்டில் குழப்பம் விளைப்பதும் மனைவியை அடிப்பதும் ஏசுவதும், பிள்ளைகளை நிம்மதியாக இருக்க விடாமல் செய்வதையும் வழக்கமாக கொண்டு வந்துள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி மனைவி, பிள்ளைகள் இருவரையும் வேறொரு வீட்டில் வைத்து விட்டு கணவன் வரும் வரை வீட்டிலிருந்துள்ளார். வழமைபோல கணவர் சத்தம் போட்ட போது மனைவி அசிட்டை தலையில் ஊற்றியுள்ளார் என காவத்தை பொலிஸாரின் தொடர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ நேரத்தில் மனைவி கணவன் குடிபோதையில் அசிட்டை ஊற்றிக் கொண்டார் என கத்திய போது அயலவர்கள் வந்து கணவனை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு கடந்த 30 திகதி சிகிச்சை பயனளிக்காது இறந்துள்ளார். கணவன் மீது யாரோ அசிட்டை ஊற்றியதாகவும் கத்தியுள்ளார். இரத்தினபுரி வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் அசிட் வேறொருவரால் ஊற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவத்தை பொலிஸார் மனைவியை தொடர் விசாரணை மேற்கொண்டதன் மூலம் மனைவியை 04ஆம் திகதி புதன்கிழமை பொலிஸார் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பெல்மதுளை நீதிமன்றத்தில் சந்தேக நபரான மனைவியை ஆஜர் செய்த போது 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

0 comments:
கருத்துரையிடுக