ஊவா மாகாணத்தில் தமிழ்ப் பட்டதாரி ஆசியர்களுக்கான
வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின்
இணைப்புச்செயலாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார். ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர
ராஜபக்~வுடன் தாம் மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு ஏற்ப உடனடியாக அமுலுக்கு வரும்
வகையில் ஊவாமாகாண பதுளை மாவட்ட தமிழ் பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான, கணித, வர்த்தக,
பாடங்களைக் கற்பிப்பதற்கான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், பதுளை மற்றும்
வெளி மாவட்ட பட்டதாரிகள் விண்ணப்பங்களை ஊவாமாகாண கல்வியமைச்சுக்கு உடன்
அனுப்பும்படியும் அவர் தெரிவித்தார் |
0 comments:
கருத்துரையிடுக