siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 23 ஜூலை, 2012

மட்.உதயபுரம் ஸ்ரீவடபத்திரகாளிம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி

23.07.2012
ஆடிப்பூர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு,பெரியகல்லாறு,உதயபுரம் அருள்மிகு ஸ்ரீவடபத்திரகாளிம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி மற்றும் சிறப்புப் பூஜைகள் இடம்பெற்றன.

இன்றுகாலை பெரியகல்லாறு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையுடன் அங்கிருந்து பால் கலசங்களுடன் பாற்குட பவனி ஆரம்பமானது.

பாற்குட பவனியானது ஆலயத்தை வந்தடைந்ததும் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று உற்சவ மூர்த்தியான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அடியார்களும் தங்கள் கைகளினால் பாலபிஷேகம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து விசேட யாகபூஜை இடம்பெற்றுதுடன் கும்பம் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் விசேட தீப,நாத,கீத அலங்காரங்களால் அன்னைக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றது.அதனைத்தொடர்ந்து மகேசுர பூசையும் இடம்பெற்றது.
___

0 comments:

கருத்துரையிடுக