siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 23 ஜூலை, 2012

பெண், கள்ளக் காதலனை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி அடித்த ஜாதி சபை

23.07.2012 .
ராஜஸ்தான் கோலார் கிராமத்தைச் சேர்ந்த ஜாதி சபை, திருமணமான பெண்ணையும் அவரது கள்ளக் காதலனையும் மரத்தில் கட்டி வைத்து அவர்களின் ஆடைகளை அகற்றிவிட்டு அடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ளது கோலார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மீனாவுக்கும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனையடுத்து குறித்த கிராமத்தினர் அவர்களைத் தேடியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மாலை அவர்களைக் கண்டுபிடித்து கிராமத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு வந்ததும் ஜாதி சபை கூடியது. அந்த சபையில் கள்ளக்காதல் ஜோடியைக் கூடியிருந்த கிராமத்தினர் முன்பு மரத்தில் கட்டி வைத்து, அவர்களை நிர்வாணமாக்கி அடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் மீது கிராமத்தினர் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஒரு பொலிஸ் குழு வந்து அந்த இருவரையும் கிராமத்தினரிடம் இருந்து மீட்டது. அந்தக் கள்ளக்காதல் ஜோடி தற்போது பொலிசாரின் பாதுகாப்பில் உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் ஜாதி சபையினரையும், கிராமத்தினரையும் கைது செய்ய முயன்று வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக